Saturday, May 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழகத்தில் அதிகரிக்கும் கூலிப்படைகள் – கேள்விக்குறியாகும் சமூக பாதுகாப்பு – ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழகத்தில் சமீப காலமாக கொ லைகள் அதிகரித்து வருகின்றன. போஸ்டர் ஓட்டுவதில் தகராறுக் காக ஒருவரையொருவர் தீர்த்து க் கட்டுவதும், சொத்துப் பிரச் னையில் மகன் தந்தையை தீர்த்துக் கட்டுவதும் சர்வ சாதார ணமாக வருகின்றன. இது மட்டு மல்லாது கூலிப் படைகளை ஏவி முக்கிய தலை வர்களை குறி பார்ப்பதும், குறி வைப்பதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.அந்த வகையில் கூலிப்படை தங்களை குறிவைப்பதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டும் ஜனநாய கத்தின் முதல் தூண¤ன் அங்கமாக திகழும் சட்டமன்ற உறுப்பினர் களே போலீஸ் பாதுகாப்பு கோரும் நிலை ஏற்பட்டது. கடந்த 2011 சட்ட சபை தேர்தலி ல் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனகை சுப் பிரமணியன், அருண் முருகேசன், சேகர் ஆகிய மூன்று எம்எல்ஏக் கள் தான் அவர்கள். கால் நூற்றாண்டுக்கு முன்பு மும்பையில் விஸ்வரூபம் எடுத்த தாதாக்கள் சட்டத்தையும் ஆயுதத்தையு ம் கையில் எடுத்து பல ‘அசைன்மென்ட் ’க ளை நிறைவேற்றினர். மகராஷ்டிரா அரசு கடுமை யான சட்டம் கொண்டுவந்து அவ ர்களை அடக்கியது. 1990களில் சென்னை யில் நட ந்த ‘பவர்’ யுத்தத்தில் நொச்சிக் குப்பம் வீர மணி, காசிமேடு பாக்சர் வடி வேலு, சேரா, வெள்ளை ரவி, பங்க் குமார் போன்றோர் தங்களுக்குள்ளே யே ஒருவரையொருவர் பழிதீர்த்தனர். சமீபத்தில் நடந்த நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் பசும்பொன் ராஜா கொலையில் அவரது மனை வியே கூலிப்படை வைத்து தீர்த்துக் கட்டி யது வெளிப¢பட்டது. சென்னை கூடுவாஞ்சேரியில் மருமகனை தீர்த்துக்கட்ட குமுழி என்ற பெண் ணும், சிகை அலங்கார நிபுணரான கமலாதேவியை கொல்ல அவரது மகள் செல்வியும் கூலிப் படையை நாடினர்.

கூலிப்படைகளின் கைங்கர்யத்தால் தமிழகத்தின் ‘கிரைம் ரேட்‘ கடந்த 2 ஆண்டுகளில் 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப்புலனாய்வு ஆவண மையம் கணக்கு சொல்கிற து. சமீபத்தில் கூட சேரன்மகா தேவி யூனியன் சேர்மன் கீதாவின் கணவர் குமார் பாண்டியனை கூலிப்படை தீர்த்துக்கட்டியது.உறவை கருவறுக் க, அரசியல் பகையை போக்க, தொழி ல் போட்டியை தீர்க்க என அனைத்து பிரச்னைகளுக்கும் சர்வரோக நிவார ணியாக கூலிப்படையை நாடுகின்ற னர். கம்ப்யூட்டர் யுகத்தில் இயந்திர கதியில் இயங்கும் மக்கள் மனதில் வன்முறை உணர்வு வேர் விட்டதும், அதற்கு கடமை தவறிய அரசு அதிகாரிகள் நீர் விட்டதும் அடுத்துள்ள முக்கிய காரணங்கள். ஊர்விட்டு ஊர்சென்று தொழில் செய்வது போல் கொலையும் செய்கின்றனர். சென்னையில் புரட்சி பாரதம் பொறுப்பாள ர் குமரனை மதுரை கூலிப்படையி னர் கொன்றனர். பொன் விளைந்த களத்தூர் ஊராட்சித் தலைவர் விஜ யகுமாரின் கொலைக்கு பழி வாங்க அவரது தம்பி சுரேஷ் பெங்களூர் கூலிப்படையை வரவழை த்தார். மதுரை கரிமேடு கராத்தே பாண்டிய ராஜன் கொலையில் நெல்லை கூலி ப்படையினரும் முக்கிய பங்காற்றி யுள்ளனர். கூலிப்படை என்றதும் சன்மானம் குறைவாக இருக்கும் என்று எண்ணக்கூ டாது.

தமிழக அளவில் கத்தி, அரிவாள், துப்பாக்கி தூக்கும் ‘தொழிலாளர்கள்‘ அனைவரும் ஓரளவு ஒப்புக் கொண்ட ஊதிய பட்டியல் இதோ: கொலை க்கு 1 லட்சம், ஆள் கடத்தலுக்கு 1.5 லட்சம் (உடனடியாக பிடிபடும் ‘ரிஸ்க்‘கும், கூடுதலாக கொலை செய்யும் வாய்ப்பு ம் இருப்பதால் இந்த தொகை). அத்து டன் வாகன வசதி அவசியம். கூலிப்ப டையை ‘வாடகை ‘க்கு அமர்த்தி தரு வோருக்கு 25 சதவீதத்துக்கும் குறை யாமல் கமிஷன் கொடுக்க வேண்டும். வேலையின்மை, மது போதை அடிமை த்தனம், அரசியல், சாதி, மத அந்தஸ்து பேதத்தால் ஏற்பட்ட அடிமன ஆத்திரம் போன்றவை கூலிப்படையில் ஆட்கள் சேர பிரதான காரணமாக அமை கிறது. குற்றம் செய்து சிறைக்கு செல்வோர் பலர் வழக்கு செலவுக்கு வழியில்லா ‘வறுமை‘ கார ணமாகவும் இந்த வழிக்கு வருவதுண்டு. முன்பெல்லா ம் இதுபோன்ற காரியங்கள் அண்ணன், தம்பி, மாமன், மை த்துனர் இருந்தால்தான் ஆகும். இப்போதோ வீட்டு வேலைக்கு போவது போல் எளிதாக ஆள்கிடைத்து விடு கிறது. ‘பள்ளி, கல்லூரி பருவத்தில் ஏற்படும் கூடா நட்பு கூலிப்படையி ல் சேர முக்கிய காரணம். முரட்டுக் குணமும், ஹீரோயிசம் செய்யும் ஆர்வமும் உள்ள சிறார்களை பக்குவமாக கையாள வேண்டு ம். கூலிப் படையில் பெரிதும் பள்ளியிலிருந்து இடை நின்ற வர்களே ஈடுபடுகின்ற னர்.

நண்பர்கள் இழுத்துச் சென்று சம்பந்தமே இல்லாத சம்பவத் தில் ஈடுபடு த்துவதும், பின்னர் அதிலிருந்து விடுபட முடியாத நிலையில் ஆப்பசைத்த குரங்கு போல் மாட்டிக் கொள்ளவும் நேர்கிறது. சாதி, மத, அரசியல் இயக்கங்கள் இத் தகைய இளைஞர்களை தத்தெ டுத்துக் கொள்கின்றன.‘ என்கி றார் ஓய்வு பெற்ற ஐஜி மாசான முத்து. உயர்நீதிமன்ற வக்கீல் கண்ணன் கூறுகையில், ‘ கூலி ப்படையை ஒடுக்க அமலில் உள்ள இந்திய தண்டனை சட்ட ம், தடுப்புக்காவல் சட்டம் போ ன்றவை போதுமானது. ஆனா ல், தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்படுவோர் ‘மனுவை பரிசீ லிக்க காலதா மதம் ஆனது‘ என்ற ஒரே காரணத்தால் வெளியே வந்து விடுகின்றனர். எனவே, சட்டத்தை சரியாக கையாண்டால் கூலிப் படை யை ஒடுக்கிவிடலாம்‘ என்றார். மனநல மருத்துவர் ‘சிநேகா‘ பன்னீர் செல்வன் கூறுகையில், ‘ அனைவருக்கும் உணர் ச்சி வேகம் உண்டு. ஆனால், அதை கட் டுப்படுத்தும் திறனை மது அருந்துவோ ர், வறுமை, வேலையின்மை காரண மாக மன அழுத்தம் கொண்டோர், சிறு வயதில் வன்முறையால் பாதிக்கப்பட் டவர், உடைந்துபோன குடும்பத்திலிரு ந்து வந்தவர்கள் இழந்து விடுகின்றனர்.

சிறு வயதிலேயே பிறர் வலி அறியாமல் வளர்ந்தவர்கள், சமூக விரோத ஆளுமை கொண்டவர்கள் சமூக விரோத ஆளுமையில் வளர்கின்றன ர். இவர்களே கூலிப்படையில் அதி கம் இடம் பெறுகின்றனர். கூலிக் காக குற்றம் செய்வதை தடுக்க முதல் குற்றம் செய்த போதே அவ ர்களுக்கு ஆலோசனை வழங்கி ஆற்றுப்படுத்த வேண்டும். மன அழுத்தத்தை தவிர்க்கவும், வே லை கற்றுக்கொடுக்கவும் உதவ வேண்டும்‘ என்றார்.

கூலிக்கொலை ஒரு சமூக குற்றம் என்பதால் சட்டங்களோடு சமுதாய விதிமுறைகளும் அதற்கேற்ப வரையறுக்கப்பட வேண்டும். தமிழகத்தி ல் கூலிப்படையின் செயல்பாடு பற்றி உயர் நீதி மன் றம் காவல் துறையிடம் விளக் கம் கேட்டு பெற்றுள்ளது. அப்படி யே அதை ஒடுக்க சட்டசபை, பாராளுமன்றங்களில் அரசுகள் கடுமையான சட்டம் கொண்டு வந்தால் சமூக பாதுகாப்பு உறுதிப்படும்.

செய்தி – தினகரன்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: