Monday, May 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தொலைந்த அசல் ஆவணங்களுக்கு பதிலாக சொத்தின் நகல் ஆவணங்களைப் பெற சில வழிக‌ள்

சொத்து உரிமையாளர்கள், சொத்து ஆவணங்களை பழுதுபடாத விதத் தில் மிகுந்த பாதுகாப்புடன் வைத்துக் கொண்டாலும்கூட, சொத்து ஆவணங் கள் தொலைந்து போகும் சம்பவங்கள் பற்றி அடிக்கடி புகார்கள் கொடுக்கப்படு கின்றன. சில சொத்து பரிமாற்ற தீர்வு களின்போது அல்லது வீட்டைப் புனர மைப்பதற்கு உங்களுக்கு வங்கி கடன் தேவைப்படும் நேரத்தில், நீங்கள்தான் சொத்து உரிமையாளர் என்பதற்கான கையடக்க ஆதாரமாக சொத்து ஆவணங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த ஆவணங்கள் இல்லாத பட் சத்தில், வங்கி அதிகாரிகள் கடன் வழங்கமாட்டார்கள் மற்றும் சொத்துப் பரி மாற்றங்கள் தீர்க்கப் படுவதில் சிக்கல் உருவாகும். இருப்பி னும், சொத்து ஆவணங்களை இழப்பத னால் ஒருவர் முழுமையாக தவிக்க விடப்படுவதில்லை. சொத்து உரிமை யாளர்கள் முயற்சி செய்து நகல் ஆவணங்களை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் இங்கு நகல் சொத்து ஆவணங்களைப் பெறுவதற் கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. நகல் சொத்து ஆவணங்க ளை எப்போதும் சொத்து உரிமையாளர் பெறமுடியும். ஆனால், இதற்கு கணிசமான செலவு, முயற்சி மற்றும் நேரம் ஆகிய வை தேவை.

எஃப் ஐ ஆர் தாக்கல் செய்தல்

சொத்து ஆவணம் தொலைந்து விட்டால் முதல் வேலையாக போலீஸில் எஃப்ஐஆர் தாக்கல் செய்ய வேண்டும். இப்புகார் பற்றிய நகலை சொத்து உரிமை யாளர் பெற்றுக் கொள்ள வேண் டும். அடமான சொத்து ஆவணங் கள், வங்கி மூலம் இடந்தவறி வைக்கப்பட்டாலும்கூட, புகார் கொடுக்க ப்படவேண்டியது அவசியம்.

செய்திதாளில் விளம்பரம் செய்தல்

சொத்து உரிமையாளர் சொத்து ஆவண இழ ப்புப் பற்றி உடனடியாக ஒரு ஆங்கில மற்று ம் பிராந்திய மொழி தினப் பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். சம்பந்தப்ப ட்ட சொத்தை வாங்க ஆர்வமுள்ள நபரு ம் இது பற்றி விளம்பரம் செய்யலாம்.

என்ஓசி மற்றும் நகல்

பங்குச் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்தல் சொத்து ஆவணங்கள் தொலைந்து போனதற்கான எஃப்ஐஆர் காப்பி ஆதாரத்தைக் கொண்டு, ஹவுசிங் சொசைட்டியிலிருந்து, என்ஓசி மற்றும் டூப்பிளிகேட் ஷேர் சர்டிபிக்கேட் பெறுவத ற்கு சொத்து உரிமையாளர் விண்ணப்பிக் க முடியு ம். சில வேளைகளில் வங்கிகள் என்ஓசி இல்லாமல் கடன் வழங்குவதில் லை. ஆகையால் கண்டிப்பாக நோ அப்ஜக் ஷன் சர்டிபிக்கேட் பெற்று கொள்வது அவ சியம்.

தொலைந்து போனதற்கான உத்தரவாதம் பெறுதல்

சொத்து விபரங்கள், எஃப்ஐஆர் நம்பர் மற்றும் பத்திரிகையில் வெளியான விளம்பரம் ஆகிய வை அடங்கிய ஒரிஜினல் சொத்து ஆவணங்கள் தொலை ந்து போனதற்கான உத்தரவாதம் பெறுவ தற்கான அனைத்து விபரங்களும் ஒரு ஸ்டாம்ப் பேப்பரில் இருக்க வேண்டும். இந்த ஆவணத்தில் கூறப்பட்ட வை உண்மை என்பதை உறுதிபடுத்த, ஒரு நோட்ட ரி மூலம் இது கையெழுத்திடப்பட்டு பதிவு செய்யப் பட வேண்டும்.

விற்பனைப் பத்திர நகலைப் பெறுதல்

பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று தேவையான ஆவணங்களை சம ர்ப்பித்து, வேண்டிய கட்டணத்தை செலு த்தினால், பதிவாளர் அலுவலகம் விற்ப னைப் பத்திரத்தை வழங்கும். நியாயமா க ஒரு பழைய சொத்தாக இருந்தால், குறிப்பிடப்பட்ட சொத்தின்மீது எந்தவொ ரு வில்லங்கமும் இல்லை என்பதை உறுதிபடுத்த ஒருவர் உறுதி அறிக்கை பெற வேண்டு ம்.

இந்த உறுதி அறிக்கையும் பதிவாளர் அலுவல கத்திலிருந்து பெற முடியும். ஆகவே, ஒரு வே ளை நீங்கள் சொத்து ஆவணங்களை தொலை த்துவிட்டால், தாமதிக்காமல் நகல் ஆவணங்க ளைப் பெறுவதற்கு மேற்குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றுங் கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: