Friday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு “23 வயது” இளம்பெண் சந்திக்கும் “23 பிரச்சனைகள்”

1) அவளது காதலனுக்கு திருமணம் ஆகி இருக்கும்.உங்கள் நெருங்கிய தோழிகளு க்கெல்லாம் காதலன் இருப்பான், அவள் மட்டும் தனிமையில் இருப்பாள். புறக்க ணிக்கப்பட்டதாய் உணர்வாள்.

2) அப்போதுதான் வேலை தேட ஆரம்பித் திருப்பாள். அதற்குள், பெரியவர்களின் பார்வையெல்லாம் ” இதெல்லா ம் எங்க உறுப்படப்போது?” என்பது போன்றே இருக்கும் அல்லது வேலை செய்து என்னத்தைக் கிழிக்கப் போகுது என்றிருக்கும்.

3) நண்பன் இருந்தால் அவன், அவளுக்கு நல்லதொரு காதலனைப்போல பேசுவா ன். காதலா என்று கேட்டால், வெறும் நட்பு என்று கழட்டிவிடுவான்.அவளை உபயோ கிப்பதைப் போல உணருவீர்கள், வேறு வழி இல்லாமல் பழகுவாள்

4) விளையாட்டுக்களில் ஆர்வம் குறையு ம். செய்தி தாள் படிக்க மாட் டாள். யாறா வது சொல்வதை நம்பகூடாதென்று தோன்றினாலும் நம்பி விட நினைப்பாள்

5) உடல் பருமன் ஏறாம , அவள் விரும் பிய அனைத்தையும் அவளால் சாப்பிட முடியாது. பொது இடத்தில் விளையாட்டுத் தனமாய் இருக்க ஆசைப் பட்டாலும் அவளால் இருக்க முடியாது.

6) தினமும் முகத்தை பொலிவுற செய்யா விட்டால், வாலில்லா குரங் கைப் போல் இருப்பாள். யாராவது அவ‌ளையே உற்றுப் பார்ப்பது போல் நினைத்தாலும் யாரும் பார் க்கவில்லை என்பதே உண்மையாக இருக் கும்.

7) முகப்பரு, நிறம் குறைவு, உடல்ப்பருமன், மாதவிடாய் வலி இப்படி ஏதாவதொரு பிரச்சினையை ஒரே நாளில் முடித்து விட ஏங்குவாள்.

8) வீட்டில் யாருடனும் எதுவும் பேசுவதற்கு இருக்காது, நெருங்கிய யாருடனாவது எல்லாவற்றையும் சொல்லிவிட‌ வேண்டும் போல் உண ர்வாள். நெருங்கிய தோழனே காதலனாகவும் இருக்க நினைப்பாள்

9). உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ, சுப நிக ழ்ச்சிகளுக்கு சென்றா லோ அத்தைமார்கலெல் லாம் அவளிடம் எப்போது திருமணம் என்பார்க ள்? மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பா ர்கள்?

10) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் அவ‌ளிடம் நிறைந்திருக்கும். ஆ னால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.

11) இந்த உலகைப் பற்றி அவ‌ளுக் கு பள்ளிகளில் என்னக் கற்பிக்க ப்பட்டதோ, அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது அவ‌ளுக்கு இப்போதுதான் தெரிய வந்திரு க்கும்.

12) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட, வேலை கிடைத்திருக் காது.

13) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கு ம்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வாள். பெண்கள் என்றால் சிபாரி சுடன் சேர்ந்து புன்னகைக்கவும் வேண்டும் என் றும் உணருவாள். மேலதிகாரி யின் சுரண்டலு க்கு பதிலாக செருப்பால் அடிக்க வேண்டும் என்று ஒரு தடவையாவது நினைப்பாள்.

14) காதலுக்கு கண்கள் உண்டு என்பாள். காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வாள்.ஆணும் பெண்ணும் நட்புடன் இருக்க முடியுமா என்ற கேள்வி ஒரு நாளில் ஆயிரம் முறை வந்து போகும்.

15) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொ ள்வாள். அவ‌ள் மீது அவ‌ள் வைத்திருக்கும் அதீத நம்பி க்கை மட்டுமே அவளது மன சாட்சியை வழி நடத்தும்.

16) கற்பு, கலாசாரம், நாகரீகம் எல்லாவற்று க்கும் நடுவில் அவளுக்கெ ன்று தனி வட்டம் அமைத்து அதில் சுதந்திரமாக வாழ ஆசைப்படுவாள். ஆனால் ஒவ் வொரு நாளும் இது தொடர்பான மூன்று பிர ச்சினைகளை யாவது எதிர்நோக்குவாள்.

17)ஒரு நாளில் அவ‌ளைவிட வயது குறை ந்த அல்ல‍து கூடிய அல்ல‍து நடுத்தரப் வயது அங்கிள் வயதுடைய இப்படி யாராவது ஒருவருடைய கேலி அல்ல‍து கிண்டல் அல் ல‍து பெண் ஒடுக்குமுறைக்கு உள்ளாவாள் .பொம்புளைப் பிள்ளை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை ஒரு நாளில் ஒரு தடவையாவது எங்கா வது கேப்பாள்.

18) பஸ்ஸில், தெருவில், கல்லூரியில் சில மோசமான தருணங்களை சந்திக்கும்போது, ஆணாகப் பிறந்திருக்க லாம் என்று ஒரு தடவையாவது நினைப் பாள். அவ‌ள் பெண்ணாக பூரிப்படையும் போது, யாராவது அவளை ஏமாற்ற காத்தி ருப்பார்கள்.

19) நேரம் சென்று வீட்டுக்கு வரும் போதோ , தனியாகப் பயணம் செய்ய நேருகையி லோ யாருடைய துணை யும் இல்லாமல் செல்வதையே விரும்புவாள். இருப்பினும் யாராவது ஒருவருடைய துணையை வலி ந்து திணிக்கும் போது சாகலாம் போல வலிக்கும்.

20) காதல் தோல்வி பெண்களுக்கு கூடாது என்ற சமுகத்தில் வாழும் அவ‌ளின் காதலை அவள் கொண்டா ட முடியாது அல்ல‍து வருத்தப்பட முடியாது. கேட்பவர்கள் அவ‌ளை ஏளனமாகப் பார்ப்பார்கள்.

21)அவ‌ள் மகிழ்ச்சியாக இருப்பதாக நினைத்த அடுத்த கணம், அவ‌ள் மகிழ்ச்சிக்கான காரணம் மறைந்து போகும்.

22) பெற்றோர்களும், உறவினர்களும், சகோதரர்களும் அவ‌ளை உளவு பார்த்த்து க் கொண்டே இருப்பார்கள்.

23) இப்படி ஒரு வாழ்க்கையைத்தான் எதிர் க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந் துக் கொண்டிருப் பாள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: