Thursday, January 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“கன்னிகளை கனிய வைக்கும் கனிகள்” (ஆண்களுக்கு மட்டுமல்ல‍ பெண்களுக்கும் உகந்தது)

இன்றைய காலத்தில் கருவுறுதல் பிர ச்சினை நிறைய பேருக்கு இருக்கிற து. இத்தகைய பிரச்சனை ஆரோக்கி யமற்ற வாழ்க்கை முறை, பழக்கவழ க்கங்கள் போன்றவற்றால் தான் ஏற்ப டுகிறது.

அதுமட்டுமின்றி சரியான உணவுகள் சாப்பிடாமல் இருப்பதால், உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போவதாலும், இந்த பிரச்சினை ஏற்படும். சிலருக்கு பாலுணர்ச்சியைத் தூண்டும் ஹார் மோன்கள் சரியாக இருக்காது. அத னால் அவர்களால் உறவில் சரியாக ஈடு பட முடியாது.

அதற்காக கவலைப்பட வேண்டாம். பொது வாக கடல்சிப்பிகள் பாலுணர்வைத் தூண் டும் ஒரு சிறந்த உணவு என்பது அனைவரு க்கும் தெரியும். அதுமட்டுமின்றி காய்கறி கள், நட்ஸ், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் போன்றவையும் பாலுணர் வைத் தூண்டும் என்று தெரியும்.

இவற்றைத் தவிர பழங்களை சாப்பிட்டா லும், பாலுணர்வை அதிக ப்படுத்தலாம் என்பது தெரியுமா? ஆம், உண்மையில் பழங்களில் ஒருசிலவற்றில் பாலுணர் வைத் தூண்டும் பொரு ளானது உள்ளது.

ஸ்ட்ராபெர்ரியில் கருவுறுதலை அதிகரிக்கும் வைட் டமின் பி மற்று ம் போலிக் ஆசிட் அதிகம் உள்ளது. மேலும் இதை ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், விந்த ணுவின் எண்ணிக் கையும் அதிகரிக்கும்.

வாழைப் பழத்தை சாப்பிட்டால், இரும்பு சக்தி மட்டும் கிடைப்பதில்லை. அவை பாலுணர் வை அதிகரிக்கும் ஹார்மோன்க ளையும் தூண்டும். மேலும் இதில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், பாலியல் உறுப்புகளை நன்கு ஆரோக்கியமானதாகவும் வைக்கும்.

அத்திப்பழத்திலும் பாலுணர்ச்சியை அதிகரிக்கும் பொருள் அதிக மாக உள்ளது. எனவே இதனை பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடல் ஆரோக் கியமாக இருப்பதோடு, கருவுறுதலி ன் அளவையும் அதிகரிக்கும்.

அவகேடோ உடல் மற்றும் சரும த்திற்கு மட்டும் நன்மை தரும் பழம் அல்ல. இது பாலுணர்ச்சி யைத் துண்டும் பழங்களிலும் சிறந்த ஒன்று. எனவே இதனை அதிகம் சாப்பிடுவதால், கருவுறு தலுக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

பெர்ரிப்பழங்களில் ஒன்றான கோஜி பெர்ரி ஆண்களுக்கு மிகவும் சிறந்த பழம். ஏனெனில் இதில் உள்ள பாலி சாக்கரைடுகள் ஆண்களில் விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சில் ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் போலிக் ஆசிட் அதிகம் உள்ளது. எனவே இந்த பழ த்தை ஆண்கள் மற்றும் பெண்கள் அதிகம் சாப்பி ட்டால், இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியமா க இருக்கும்

சில செர்ரிப் பழங்கள் பெரோமோனின் உற்பத்தி யை தூண்டும். எனவே இதனை சாப்பிட்டால், கா தல் வாழ்க்கைமிகவும் உற்சாகமாகமிருக்கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply