Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மூட்டு வலியால பாதிக்கப்படறவங்க, முதல்ல கவனிக்க வேண்டிய விஷயம்

“தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்”னு சொல்வாங்க. அதுகூட… மூட்டு வலி யையும் சேர்த்துக்கலாம். அது கொடுக் கிற இம்சை அவ்ளோ பெரிசு. வயசா னவ ங்களுக்கு வரக் கூடியது, ஆஸ்டி யோ ஆர்த்ரைட்டிஸ்னு சொல்ற மூட்டு வலி. மூட்டுல உள்ள திரவம் குறைஞ்சு, ஒரு வித இறுக்கம் உண்டாகி, உயிர் போகிற மாதிரி வலிக்கும். நம்ம உடம் புல உள் ளே செல்லே, உடல் உறுப்புக்கு எதிரியா கி வேலை செய்யறதோட விளைவு இது.

30-40 வயசுல உண்டாகிறது ருமட்டாயிட் ஆர்த்ரைட்டிஸ்னு சொல் ற வலி. கை, கால் விரல்கள்ல உள்ள சின்னச்சின்ன மூட்டுகள் ல கூட இந்த வலியை உணர லாம். முக்கியமா காலை நேரத் துல வலி அதிகமிருக்கும். இது சீசனு க்கு ஏத்தபடி மாறி மாறி வரும். பரம்ப ரையாகவும் தாக் கக்கூடி யது.

எந்தவிதமான மூட்டு வலியா இருந்தாலும், அது நாம சாப்பி டற உண வோட ஓரளவு சம்பந்தப் பட்டதுன்னு கண்டுபிடிச்சிரு க்காங்க மருத்துவர்கள். அதேசமயம் மூட்டு வலியால அவதிப்படற எல்லாரு க்கும் அவங்களோட சாப்பாடுதான் காரணம்னும் சொல் லிட முடியா துங் கிறாங்க அவங்க.

பரம்பரைத்தன்மையோ, வேற கார ணமோ இல்லாம திடீர்னு மூட்டு வலியால பாதிக்கப்படறவங்க, முத ல்ல கவனிக்க வேண்டிய விஷ யம், அவங்களோட டயட்!

மூட்டு வலியால பாதிக்கப்பட்டவங் களை இப்படி ஒரு ஆராய்ச்சிக்கு உட்படுத்தினப்ப, அவங்கள்ல பலரு ம் அசைவ உணவுப்பழக்கம் உள்ள வங்களா இருந்தது தெரிய வந்த தாம். முதல் கட்டமா, அசை வத்து லேர்ந்து சைவ உணவுப் பழக்கத்து க்கு மாறச் சொன்ன போது, ஒரு சில நாட்கள்லயே வலி குறையற தை உணர் ந்திருக் காங்க அவங்க. மூட்டு வலியை உண்டாக்கி, அந்த இடத்துல வீக்கத்தையு ம் ஏற்படுத்தக் கூடியது அசைவ உணவு.

அப்படின்னா சைவம் மட்டு மே சாப்பிடறவங்களுக்கு மூட்டு வலி வர்றதில்லையா ன்னு கேட்கலாம். அவங்க ளும் கொழுப்பு குறைவான உண வை எடுத்துக்கிறப்ப, வலி குறையறதை உணர்வதா சொல்றாங்க.

சோளம், கோதுமை, ஆரஞ்சு, எலுமிச்சை, ஓட்ஸ், கேழ்வரகு, தக் காளி, பால் மற்றும் பால் பொருட் கள், மிளகு, சோயா, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, அதிகாரம், ஆல் கஹால், முட்டை, வேர்க் கடலை , அதிக சர்க்கரை, வெண்ணெய், மாட் டிறைச்சி, ஆட்டிறைச்சி… இதெல் லாம் மூட்டுவலியை அதிகப்படு த்தற உணவுகளாம். மூட்டு வலி யோட அறிகுறிகளை உணர்ந்ததுமே, முதல் கட்டமா மேல சொன்ன உணவுகள்ல ஒவ்வொண்ணா நிறுத்திப் பார்க்கலாம். உணவு அலர்ஜியால் உண்டான வலியா இருந்தா, அதை நிறுத்தினதுமே குணம் தெரியும்.

இதய நோய் இருக்கிற சிலருக்கு, மூட்டு வலி இருக்கலாம். அவங்க தினமும் 2 அல்லது 3 பூண்டை பச்சையா சாப்பிடறது இதயம், மூட்டு ரெண்டுக்குமே நல்லது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள உண வுகளும் மூட்டுக்கு நல்லது. ஃபிளாக்ஸ் சீட்ஸ்னு இப்ப கடைகள்ல கிடைக்கிற ஆளி விதைல, அக்ரோட், பாதாம்ல இது நிறைய இருக் கு. தவிர சில வகை மீன்கள்லயும் அதிகமா இருக் கு. வலியோட வீக்கமும் சேர்ந்தி ருந்தா, தினம் இஞ்சியை ஏதாவது ஒரு வகைல எடுத்துக்கிறதும் குணம் தரும்.

மூட்டுவலி வந்ததுமே என்ன வோ ஏதோனு அலறத்தேவையில்லை. முதல்ல உங்க உணவை சரிபாரு ங்க. நீங்க அடிக்கடி விரும் பிச் சாப்பிடற ஏதோ ஒரு உணவுகூட அலர்ஜியாகி, வலியைக் கொடுத்தி ருக்கலாம். அடுத்து கவனிக்க வேண்டியது எண்ணெய், அதையும் அளவோட எடுத்துக்க வேண்டியது முக்கியம். எதுலயும் குணம் தெரியா தப்ப, மருத்து வரைப் பார்க்கலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: