Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“யார்சொன்ன‍து எனக்கு வயது 26-ன்னு. . . எனக்கு 19 தான் ஆகுது!” – ஆவேசமான‌ நடிகை ஸ்ரீதிவ்யா

ஒரே ஒரு ‘ஊதா கலரு ரிப்பன்’ மூலம், சமந்தா, நஸ்ரியாக்களுக்குச் சமமாக சவால் விடுகிறார் ஸ்ரீ திவ்யா. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ நாயகி, தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறி முகமானவர், தங்கத் தமிழில் இப்போது தடம் பதித்துவிட்டார்!

”ஒரே படத்துல ஏகப்பட்ட அப்ளாஸ் போல..”

”படம் பார்த்த என் ஃப்ரெண்ட்ஸ், ‘அந்த ‘லதா பாண்டி’ கேரக்டர் அச்சு அசலா உன் நிஜ கேரக்டர் மாதிரியே இருக்கு’னு சொன்னாங்க. முன்னெல் லாம் என்னைச் செல்லமா ‘ஸ்வீட்டி’னு கூப்பிடு வாங்க. ஆனா, இப்போ ஊரே ‘ஊதா கலர் ரிப்பன்’னுதான் கூப்பிடுது. ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு!”

‘உங்க வயசு என்ன? இணையத் துல உங்க வயசு 26-னு ஒரு செய்தி உலாவுது..!”

(அதிர்ச்சி கலநது ஆவேசமாகிறா ர்) ‘‘என்னங்க சொல்றீங்க?! எனக்கு 19 வயசுதாங்க ஆகுது. கிசுகிசுகூட ஓ.கே. இப்படிலாம் ஏங்க கிளப்பி விடுறாங்க?”

”எந்தெந்த ஹீரோகூட நடிக்க ஆசை?”

”சூர்யா, விக்ரம், தனுஷ்… இப்படி பெர்ஃபாமர்கள்கூட போட்டிப் போட்டு நடிக்க ஆசை. ஆனா, என் ஆல் டைம் ஃபேவரைட் கமல் சார்தான்!”

”சிவகார்த்திகேயன்?”

”அவர் யாரையும் காப்பி அடிக் கிறதில்லை.அவருக்குனு ஒரு தனி ஸ்டைல் வெச்சிரு க்கார். டைமிங் பன்ச்ல அவரை அடிச்சுக்க முடியாது!”

காதல் கடிதங்கள் எதாவது?”

”இப்பல்லாம் யாருங்க லவ் லெட்டர் கொடுக்கு றாங்க. எப்படியாச்சும் நம்பர் பிடிச்சு மெசேஜ் அனுப்புறாங்க. இல்லைனா மெயில் அனுப்பு றாங்க. ஸ்கூல் படிக்கும்போதே நிறை ய பேர் காதல் சொல்லியிருக்காங்க. அப்போ யாருமே என்னை இம்ப்ரெஸ் பண்ணல. எதிர் காலத்துல நான் எதிர்பார்த்த மாதிரி பையன் கிடைச்சா, அவன் புரப்போஸ் பண்ணதும் ‘யெஸ்’ சொல் லிடுவேன்!”

”நீங்க ‘யெஸ்’ சொல்றதுக்கான தகுதி என்ன?”

”சிரிக்கச் சிரிக்கப் பேசணும். நான் என்ன சொன்னாலும் சிரிக்கணும்!”

”கலகலன்னு பேசுறீங்க… பெரிய அரட்டைப் பார்ட்டியோ?”

”அப்படிலாம் இல்லைங்க. சினிமாவுக்கு வர்ற துக்கு முன்னாடி நான் அமைதிப் பூங்கா. வீட்ல இருக்கிறவங்க கிட்டகூட அதிகம் பேசமாட்டே ன். ஆனா, நடிக்க ஆரம்பிச்சபிறகு யூனிட் ஆட் களோட பேசிப் பேசி யே வாயாடி ஆகிட்டேன். முன்னாடில்லாம் கோபம் வந்தா உள்ளேயே வெச்சு ஃபீல்பண்ணிட்டு டென்ஷனா இருப் பேன். இப்போ வெளிப்படையா பேசு றதால, கொஞ்சம் ஃப்ரீயா இருக் கேன். ஆனா, மத்தவங்க தான் டென்ஷன் ஆகுறா ங்க!”

”உங்க அக்கா ரம்யாவும் நடிகையாமே?”

”ஆமாங்க… தெலுங்குல அவ நடிச்ச முதல் படத்துலயே மொட்டைலா ம் போட்டு நடிச்சு ‘நந்தி’ விருதுலாம் வாங்கிருக்கா. அவகூட சேர்ந் து நடிக்கணும்னா அதுக்கு நான் நிறைய ஹோம் வொர்க் பண்ணணும். சினிமாவுல என் லட்சியம் ரொம்ப சிம்பிள். நாலு படம் நடிச்சாலும், 40 வரு ஷம் கழிச்சும் ரசிகர்கள் ஞாபகம் வெச்சுக்கணும். ஏன்னா, வேலைனு வந்துட்டா நான்லாம் வெள்ளைக்காரி!”

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: