இந்த உலகில் அனைவருக்குமே எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அவ்வாறு இருப்பதுதான் மிகவும் கடினமான து. இருப்பினும் நமது முன்னோர்கள் நீண்ட நாட்கள் நன்கு இளமையுடனேயே காட்சியளி த்தனர். இதற்கு அன்றைய காலத்தில் அவர்க ள் மேற்கொண்ட உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை போன்றவை தான் காரணம். தற்போதைய காலக்கட்டத்தில், அத்தகைய இளமைத் தோற்றத்தை நீண்ட நாட்கள் தக்க வைத்து இருக்க முடியவில்லை.
இவை அனைத்திற்கும் காரணம் நாம் உண்ணு ம் உணவுகளில் எந்த ஒரு சத்துக்களும் இல் லாததே ஆகும். மேலும் அவ்வாறு இளமையை தக்க வைக்க பல அழகுப் பொருட்களையும் பயன் படுத்துகிறோம். உண் மையில் அவ்வாறு அழகுப் பொருட்களைப் பயன்படுத்தி இளமையை த் தக்க வைக்க நினை த்தால், சருமத்தில் சுருக்க ங்கள் தான் அதிகரிக்கும். மேலும் சிலர் இதற் காக சர்ஜரியெல்லாம் செய்கிறார்கள். இருப்பினும் பல னில்லை. எனவே அத்தகைய சுருக்கங்கள் வரா மல், எப்போதும் இளமையோடு காணப்படுவதற் கு என்னென்ன உணவுப் பொருட்களை உண்ண வேண்டும் என்பதைப் பார்ப்போமா!!!
நட்ஸ்
நட்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் சத்துக்கள் குவிந்துள்ளன. அதிலும் வைட்டமின்கள் மற்றும் மோனோ-அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளன. ஆகவே இவற் றை சாப்பிட்டால், சருமத்தில் உள்ள பழு தடைந்த செல்கள் புதுபிக்கப்படும். மேலு ம் இது உடலில் உள்ள சருமத்தில் வறட் சியை உண்டாக்காமல், எப்போதும் ஈரப்ப தத்து டனேயே வைத்து, சருமத்தை இள மையோடு வெளிப்படுத்தும். அதிலும் முந்திரி, பாதாம், வால்நட் போன்றவற் றை சாப்பிடுவது மிகவும் நல்லது.
பெர்ரி
பெர்ரிப் பழங்களில் அதிகமான அளவில் ஆன்டி -ஆக்ஸிடன்ட்கள் உள்ளன என்பது அனை வருக்குமே தெரியும். இதனால் இவற்றை தொ டர்ச்சியாக சாப்பிடும் போது சருமம் நன்கு அழ காக பொலிவோடு காணப் படுகின்றன. மேலும் இதனை போதுமான அளவில் சாப்பிடுவதால், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இரத்த த்தை சுத்தப்படுத்துவதோ டு, சருமத்தில் அதிக அளவு ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி தங்க வை க்கின்றன. ஆகவே இளமையை தக்க வைக்க ஆப்பிள், ஆப்ரிக்காட், ப்ளூபெ ர்ரிஸ், ஸ்ட்ரா பெர்ரி, பச்சை மற்றும் கருப்பு திராட்சை போன் றவற்றை சாப்பிட வேண்டும்.
பச்சை இலை காய்கறிகள்
இவற்றில் வைட்டமின்களான சி, இ மற்றும் பி12 போன்றவை மட்டும் இல்லை, உடலை ஆரோக்கியமாக வைக்கும் ஆன்டி-ஆக்ஸிட ன்ட்களும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக் கும் பொருளும் அதிகம் உள்ளன. இவற்றை
சாப்பிட்டால், இரத்தம் சுத்தமடைவதோடு, சரும த்தில் பழுதடைந்திருக்கு ம் செல்களை விரைவில் சரிசெய்யும். எனவே பசலைக் கீரை, ப்ராக்கோலி, பீன்ஸ், பீட்ரூட் போன்றவற்றை சாப்பிடுவதால் தக்க வைக்கலாம்.
மீன்
மீனில் உடலுக்குத் தேவையான எண்ணெய்கள் உள்ளன. இதனால் அவை சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையை புதுபிக்கும். அதுமட்டுமின்றி, மீனில் ஒமேகா-3 அதிக அள வில் நிறைந்துள்ளன. ஆகவே அடிக்கடி மீனை அதிக அளவில் உடலில் சேர்த்து வந்தால், சரு மம் பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக வளரும்.
கோதுமை
கோதுமைப் பொருட்களில் நார்ச்சத்துக்கள் மட் டும் அதிகமான அளவி ல் இல்லை, புரோட்டீன், கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. இதில் உள்ள சத்துக்களால், இர த்த அழுத்தம் மற்றும் இதயம் சீராக இயங்குவ தோடு, இறுதியில் சருமத்திற்கும் ஒரு நல்ல பலனை அளிக்கும்.
கிரீன் டீ
பொதுவாக கிரீன் டீ சாப்பிட்டால், உடல் எடை குறையும் என்று நன்கு தெரியும். ஆனால் அதே கிரீன் டீயை குடித்தால், அதிலுள்ள ஆன்டி-ஆக் ஸிடன்ட்களால், சருமத்தில் விரைவில் ஏற்படும் சுருக்கங்கள் தடுக்க ப்படும். ஆகவே இந்த கிரீன் டீயை தினமும் 2 கப் குடித்து வந்தால், நோ ய் எ
திர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, இரத்த ஓட்டமும் சீராகவும், சருமம் பொலிவோடும் காணப்படும்.
தண்ணீர்
நமது உடலில் 70% தண்ணீரானது உள்ளது. ஆகவே அத்தகைய தண்ணீர் உடலில் இருந்து குறையும் போது, சருமத்தில் வறட்சி ஏற்பட்டு, வெ டிப்புகள், சருமத்தில் செதில் செதிலாக வருவது போன்றவை ஏற்படு வதால், நமது உயிரணுவின் அமைப்பு இறந்துவிடுகிறது. ஆகவே ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீரை குடிப்பது அவசியமாகிறது. இதனால் சருமத்தில் ஈரப்பசை அதிகமாக இருப்ப தோடு, சருமமும் இளமையோடு காணப்படும்.