இன்றைய இளம் தலைமுறையினர் உடலை நன்கு கட்டமைப்புடன் வைத்துக் கொள்வதற்கு அதிக நேர த்தை ஜிம்மிலேயே செலவிடுகின்ற னர். ஏனெனில் தற்போதைய ஆண் களுக்கான ஃபேஷன் களில், உடலில் சிக்ஸ் பேக் வைப்பது முதன்மையா க உள்ளது. இவ்வாறு பேம்லி பேக் கில் இருந்து, சிக்ஸ் பேக்காக மாற் றுவதற்கு, வெறும் உடற்பயிற்சி மட்டும் போதாது. இந்த உடற் பயிற் சியை மேற்கொள்வத ற்கு முன்பும், உடற்பயிற்சி செய்த பின்னரும் ஒரு சில உணவுகளை உட்கொள்ள வே ண்டும்.
ஏனெனில் இப்படி இந்த உணவுகளை உட் கொள்வதால், உடலுக்கு வே ண்டிய புரோட் டீன் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக் கள் கிடைத்து, எப்போதும் எனர்ஜியுடன் இருக்க முடியும். மேலும் இந்த உணவுகள் உடற்தசைகளை சரியான நிலையில் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி, சிக்ஸ்பேக் கொண்டுவர நினை க்கும்போது, ஒரு சில உணவுகளை உட்கொள்ளக் கூடாது.
நல்ல பாடிபில்டராக நினைக்கும் போது, ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்ளா விட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் பலவீ னமடைந்து, காற்றின் மூலம் பரவும் நோய் களால் எளிதில் பாதிக்கக்கூடும். எனவே நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட் கொள்ள வேண்டும். இதனால் நல்ல ஆரோ க்கியமான உடலுடன் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். இப்போது அப்படி பாடிபில்டராக முயற்சிக்கும் போது தவறா மல் சாப்பிட வேண்டிய சில உணவுகளைப் பார்ப்போம்.
01. ஓட்ஸ்
தினமும் காலையில் ஒரு பௌல் நிறைய ஓட்ஸ் சாப்பிட்டால், உடற் சேர்க்கைக்குரிய செயல்பாடு அதிகரித்து, சிதைமாற்றம் மற் றும் கொப்புக்க ளின் சேர்க்கை குறையும். எனவே உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள முயற்சிக்கும் போது, இதனை தவ றாமல் சாப்பிட வேண்டும்.
02. முட்டை
முட்டையில் வைட்டமின் ஏ மற்றும் டி இருப்பதா ல், இது உடலுக்கு வேண்டிய ஆற்றலை அளிக்கும். எனவே தினமும் தவறாமல் 2 முட்டைகளை
சாப் பிட வேண்டும்.
03. சீஸ்
சீஸில் பல வகைகள் உள்ளன. ஆனாலல் அவற்றில் காட்டேஜ் சீஸ்தான் ஆரோக்கி யமானது. இந்தியாவில் இதனை பனீர் என்று அழை ப்பார்கள். இதில் கொழுப்புக்கள் குறைவாகவும், புரோட்டீன்கள் அதிகமாகவும் இருப்பதால், உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள நினைப்போரு க்கு நல்லது.
04. ப்ராக்கோலி
பச்சை காய்கறிகளில் ஒன்றான ப்ராக்கோலியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இது செல்லு லாரின் ஆயுளை நீட்டிக்கிறது. அதே சமய ம், இது நோயெதிர்ப்பு சக்தியையும் அதிரிக்கும்.
05. வேர்க்கடலை வெண்ணெய்
உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள முயலும்போது சாப்பிடக்கூடிய உணவுகளி ல் ஒன்று தான் வேர்க்கடலை வெண்ணெய். ஏனெனில் இது உடலின் ஆற்றலை அதிகரிப் பதில் சிறந்தது. மேலும் இதனை பிரட்டுடன் சேர்த்து சாப்பிட்டால், நீண்ட நேரம் பசியெடு க்காமலும் இருக்கும்.
06. நண்டு
நிறைய பேருக்கு நண்டு மிகவும் பிடித்தமான உணவு. இந்த நண்டை சிக்ஸ் பேக் வைக்க ஆசைப்படும்போது அதிகம் சாப்பிட்டால், தசைகளை வலுவடையச் செய்யும் ஜிங்க் மற் றும் அத்தியாவசிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கிடைக்கும்.
07. கடல் சிப்பி
தசைகளின் வலிமையை அதிகரிக்க வேண்டுமா னால், கடல் சிப்பி மிகவும் சிறந்த உணவு. ஏனெனி ல் இதில் தசைகளுக்கு தேவையா ன ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
08. வாழைப்பழம்
பாடிபில்டர்களுக்கான சிறந்த உணவுப்பொருட்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த வாழைப்பழமும் ஒன்று.
09. பசலைக்கீரை
பசலைக்கீரையில் இரும்புச்சத்துடன், தசைகளி ன் வலிமைக்கு தேவை யான வைட்டமின் கே நிறைந்துள்ளதால், இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், நல்ல மாற்றத் தைக் காணலாம்.
10. மிளகாய்
பச்சை அல்லது சிவப்பு மிளகாய், எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், இரத்த சுழற்சி யை சீராக வைக்கவும் உதவும். மேலும் இதில் காப்சைசின் என்னும் பொருள் இருப்பதால், உடலை தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்.
11. ப்ளூபெர்ரி
ஊட்டச்சத்துக்களின் இடம் என்று சொன் னால், அது ப்ளூபெர்ரி என்று தான் சொ ல்ல வேண்டும். ஆகவே இத்தகைய ப்ளூ பெர்ரியை சாப்பிட்டா ல், உடலை நோய்களில் இருந்து பாதுகாப்ப தோடு, செல்லு லாரின் ஆயுளும் நீடிக்கப்படும்.
12. க்ரீன் டீ
க்ரீன் டீயைக் குடித்து வந்தால், குடலில் உள்ள பாக்டீரியாவின் வளர்ச் சி அதிகரித்து, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நோ ய்கள் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளும்.
13. சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. இது உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்வோருக்கு மிகவும் இன்றிய மையாதது. ஏனெனில் கார்போஹைட்ரேட் உட ற்பயிற்சியின் போது, உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்க உதவியாக இருக்கும்.
14. தக்காளி
தக்காளியில் வைட்டமின் ஏ அதிகம் இருப்ப தோடு, அதில் உள்ள லை கோபைன், தசைகள் சீரழிவதை தடுக்கும். மேலும் தேவையற்ற கொழு ப்புக்களையும் கரைக்கும்.
15. அத்திப்பழம்
அத்திப்பழம் என்றதும் அனைவருக்கும் உலர் அத்தி ப்பழம் தான் நினை வில் வரும். ஆனால் உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள முய லும்போது, நல்ல பிரஷ்ஷான அத்திப்பழத்தை சாப்பிட வேண்டு ம். இதனை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், நல்ல முன்னேற்றம் தெரியும்.
16. காளான்
வெள்ளை நிற பட்டன் காளான் மிகவும் ஆரோக் கியமான உணவுப் பொருள். ஏனெனில் காளானில் தசைகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவும் ஊட்ட ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
17. தினை
தானியங்களில் ஒன்றான தினையில், அமினோ ஆசிட்டுகள் அதிகம் இருப்பதால், இதனை உட்கொ ண்டால், தசைகளுக்கு மிகவும் சிறந்தது.
18. மட்டன்
மாட்டுக்கறியை உட்கொ ள்வதற்கு பதிலாக, ஆட்டு க்கறியை உட்கொள் வது சிறந்து. ஏனெனில் மட்டனில் அர்ஜினைன் மற்றும் அமினோ ஆசிட் டுகள் அதிகம் இருப்ப தால், அது தசைகளின் அடர்த்தியை அதிகரிக்கு ம். மேலும் மட்டன் தொப்பையைக் குறைக்கவும் உதவியாக இருக்கும்.
19. டோஃபு
டோஃபுவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்ள் அதிகம் இருக்கிறது. அது மட்டுமின்றி, இதில் அமினோ ஆசிட்டுகளும், ஐசோஃப்ளேவோன்களும் அதிகம் இருப்பதா ல், இது விரைவில் தசைகளை கட்டமைப்புடன் மாற் ற உதவும்.
20. பருப்புக்கள்
பருப்புக்களை தினமும் உணவில் சேர்த்து வந்தால், புரோட்டீன்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைத் து, தசைகளும் வலுவுடன் இருக்கும்.
21. தயிர்
சிக்ஸ் பேக்ஸ் வைத்துக் கொள்ள நினைப்போர், தினமும் தயிரை உண வில் சேர்க்க வேண்டும்.
22. சால்மன்
சால்மன் மீனில் நோயெதிர்ப்பு அழற்சி பண்பு கள் அதிகம் இருப்பதால், இதனை உடற் பயிற்சி செய்த பின்னர் சாப்பிட்டால், உள் காயங்கள் குண மாகும்.
23. அன்னாசிப்பழம்
தசைகளின் வளர்ச்சயை அதிகரிக்க நினைத்தால், அன்னாசிப்பழத்தை சாப்பிட வேண்டும். இதனால் அன்னாசியில் உள்ள சத்துக்கள், தசைக ளின் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் இது உடலுக்கு
ஆற்றலையும் கொடுக்கும்.
24. ஆலிவ் ஆயில்
சமைக்கும் போது உணவில் ஆலிவ் ஆயிலை சேர் த்துக் கொண்டால், உடலுக்கு வேண்டிய ஃபேட்டி ஆசிட்டுகள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழ ப் புக்கள்கிடைத்து, தசைகள் நன்கு வளர்ச்சியடையும்.
25. சாக்லெட்
டார்க் சாக்லெட்டை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால், தசைகளில் ஏற்படும் உள்காயங்களை குறை க்கலாம்.
26. ஆளி விதை
ஆளிவிதைகளில் புரோட்டீன் மற்றும் நார்ச் சத்து நல்ல அளவில் நிறைந்துள்ளது. என வே இதனை பாடிபில்ட ராக நினைப்போர் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக் கும்.
27. பாதாம்
பாதாமை ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியா ன அமினோ ஆசிட், தசைகளின் வாழ்நாளை அதிகரிக்கும்.
28. ரிக்கோட்டா
ரிக்கோட்டா ஒரு இத்தாலிய சீஸ், இது செம்மறி ஆட்டின் பாலால் செய்யப்பட்டது. இதனை உணவி ல் சேர்தால், தசைகள் மற்றும் எலும்புகள் நன்கு வளர்ச்சியடையும்.
29. பீட்ரூட்
பீட்ரூட்டில் நைட்ரேட் என்னும் உடலின் சக்தி யை அதிகரிக்கும் பொருள் நிறைந்துள்ளது. என வே இந்த காய்கறியை வேகவைதது சாப்பிடுவ து மிகவும் நல்லது.
30. சைனீஸ் முட்டைகோஸ்
போக் சோய் (Bok Choy) என்று அழைக்கப்படும் சைனீஸ் முட்டைகோஸி ல் வைட்டமின் ஏ மற்றும் ஈ அதிகம் உள்ளது. இந்த காய்கறியை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, எலும்புக ளும் வலிமையடையும்.