Monday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் ஆப்பிளின், புதிய வகை ஐபோன்

ஐபோன் மீது உலகெங்கும் பயங் கர ஈர்ப்புண்டு. ஐபோன் அழகும், அதன் இயங்குதளத்தின் இயல்பு ம், அப்ளிகேஷன்களின் எண்ணி க்கையும் அதன் மேல் பைத்திய த்தையே ஏற்படுத்தி விடும். ஆப்பிள் தொடர்ந்து இந்த ரச னையான அனுபவத் தை அதன் ஒவ்வொரு போன் மாடலிலும் மெருகேற்றிக்கொண்டே வந்தது .
 
ஆனால், இந்த எழிலுக்கும் திறமைக்கும் நவீன தொழில்நுட்பத்துக்கும் ஒரு விலை உண்டு. ஆப்பிள் ஐபோன்கள் எல்லாம் விலை விஷயத் தில் கொஞ்சம் அதிகம் தான். அதுவும் இந்தியாவுக் குள் ஐபோன்கள், அமெரிக்க விலையைவிட இருபது சதவிகிதம் அதிகமாகவே விற்கப்ப டுகின்றன. 
ஐபோன்களுக்கு உலகெங் கும் இருக்கும் மிகப்பெரிய போட்டியாளர் ஆண்டிராய்ட் வகை போன்கள்தான். அதுவும் சாம்சங் கேலக்ஸி போன்கள் சந்தை யை வெகுவேகமாகக் கைப்பற்றிக்கொண்டு வருகின்றன. இந்நிலையி ல், ஆப்பிள் இந்தியா, சீனா போன்ற மக்கள்தொகை அதிகம் உள்ள நாடு களுக்கு ஏற்ப விலைகுறைவான போன்களை அறிமுகப்படு த்தும் என் ற எதிர்பார்ப்பு இருந்தது. ஐபோன் 5 சி என்ற அந்த மாடலைப் பற்றி ய தகவல்கள் மெல்ல மெல்ல மீடியாவில் கசிந்துகொண்டே இருந்தது. கடைசியாக சென்ற வாரம் ஐபோன் 5 சி மாடலை ஆப்பிள் நிறுவ னம் அறிமுகப்ப டுத்திவிட்டது.
இதில் சி என்பது கலர் என்றே சொல்லலாம். நீலம், இளம் பச் சை, பிங்க், மஞ்சள், வெண்மை ஆகிய நிறங்க ளில் ஐபோன் 5 சி கிடைக் கும். மற்ற படி இந்த மாடலில் ஐபோன் 5இல் இருந்த அதே பிராசசரே இருக்கிறது. பேட்டரி பத்து மணி நேரம் வரை தாங்கும் என்று ஆப்பிள் அறிவித்திருக்கிறது. இந்தப்போன் மாடல் கெட்டியா ன பிளாஸ்டிக்கால் செய்யப் பட்டு இருப்பதுதான் இதில் ஒரே புதுமை!உண்மையில், ஐபோ ன் 5 சி புதிய அனுபவத்தைத் தரும், வித்தி யாசமாக இருக்கும், பெ ரிய முன்னேற்ற மாக இருக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனா ல், அதெல்லாம் இல்லாமல் வெகு சாதாரண மாக, இதற்கு முந்தைய மாடலில் இருந்து பெரிய வளர்ச்சி ஏதுமில் லாமல் 5 சி இருப்பது அனைவரையும் கொஞ்சம் ஏமா ற்றத்துக் குள்ளாக்கி இருக்கிற து.ஒரே ஒரு விஷயம், விலை. அமெரிக்காவில், 16ஜிபி ஐபோன் 5 சி, 99 டாலர். 32 ஜிபி 199 டால ர்.மொபைல் ஆபரேட்ட ர்களின் காண்ட்ராக்டோடு இருந்ததால் தான் இந்த விலை. இல்லையெ னில் இதன் உண்மை விலை 549 டாலர்கள். அதாவது, அமெரிக் காவில், தொலைதொடர்பு நிறுவனங்கள், ஐபோனின் விலையில் பெரும்பங்கை ஆப்பிளுக்குச் செலுத்தி, அதன் சந்தை விலையைக் குறைக்கும். அதற்கு மாற்றாக, ஐ போன் வாடிக்கையாளர்கள், அந்தக் குறிப்பிட்ட ஆபரேட்டர்களின் நெட் வொர்க்கையே பயன்படுத்த வேண்டும். இப்படித்தான் ஐ போன் 5 சி மாடலுக்கு இர ண்டு வருட காண்ட்ராக்டோ டு விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.
 
அமெரிக்காவில் வேண்டுமா னால், இந்த விலை குறைவாக இருக்கலாம். ஆனால், இந்தியாவிலோ சீனாவிலோ இது குறைந்த விலை இல்லை. இந்தியாவுக்கு வரும்போ து, ஐபோன் 5 சியின் விலை ரூ. 40,000 ஆக இருக்கும். இதில் பாதி விலையில் சூப்பரான போ ன்கள் சந்தையில் கிடைக்கும் போது, இவ்வ ளவு விலை கொடுத்து யார் வாங்குவார்க ள் என்ற கேள்வி எழாமல் இல்லை.சீனாவிலோ, ஐபோ ன் 5 சியின் விலை கிட்டத் தட்ட 730 டாலர்கள். அங்கே இது மிக மிக அதிக விலை. அப்படியானால், ஆப்பிள் நிறு வனம் தன்னுடைய மதிப்பைக் குறைத்துக் கொண்டு சந்தையை விரிவு படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றே அர்த்தமாகிறது.ஆனால், ஆப்பிள் எப்போதும் தன்னுடைய தொழில் நுட் பத்தாலும் எழில்நிறை தயாரிப்பினாலுமே சந்தையில் கோ லோச்சுகிறது. இம்முறையும் இந்த 5 சி மாடல், அதன் பல்வேறு வண்ணங் களுக் காகவே பயங்கர டிமாண் டைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகி றது. வண்ணம் என்பது ஒரு ஸ்டைல் ஸ்டேட்மென்ட். அதில் பின்தங்கியிரு ந்த ஆப்பிள், 5 சி மாடல் மூலம், புதிய அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தும் .ஆப்பிள் எது செய்தாலும் அது தலைப்புச் செய்தி தான். மக்களின் மன நிலை யைப் புரிந்து வைத்துள்ள நிறுவனம் அது. இம்முறையும் அதன் திட்டம் சோடை போகாது. 
 
==>ஆர்.வெங்கடேஷ்

Leave a Reply