பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது உடலில் மட்டும் தான் மாற்றம் ஏற்படும் என்று நினைத்தால், அது தவ று. ஏனெனில் சருமத்திலும் பல மாறு தல்கள் ஏற்படும். இதற்கு காரணம் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு தான் . மேலும் நிபுணர்களும், கர்ப்பமாக இருக்கும் போது, ஒரு நாள் நன்கு பொலிவாகவும், மறுநாள் பொலிவிழ ந்தும் காணப்படும் என்று சொல்கின்ற னர்.
அதுமட்டுமின்றி, இத்தகைய மாறுதல்கள் அனைத்து பெண்களுக்கும் நிச்சயம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஒருசிலருக்கு இத்தகைய மாறுதல்கள் ஏற்படலாம். மேலும் ஒரு சிலவற்றை அனைத்து கர்ப்பி ணிகளும் சந்திப்பார்கள்.
இப்போது அப்படி கர்ப்பமாக இருக்கு ம் போது ஏற்படக்கூடிய சரும மாறு தல்களைப் பார்ப்போமா!!!
01. முகப்பரு
கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படக்கூடிய சரும மாறுதல்களில் ஒன்று தான் முகப்பரு. அதிலும் இக்காலத்தில் ஒரு முகப்பரு வந்தாலும், அவை வெடித்து முகத்தில் பரவ ஆரம்பிக்கும். அப்படி ஏற்படும் போது ஸ்கரப்களை பயன்படுத்த வே ண்டாம். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது சருமம் மிகவும் சென்சிடிவ்வாக இருக்கும்.
02. சரும நிறம்
கர்ப்பத்தின் போது சருமத்தில் ஆங்காங்கு கருமை யான புள்ளிகள் தோன்றும்.
03. கைகள்
கைகளைப் பார்த்தால், உள்ள ங்கைகள் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதிலும் இரண்டாம் மாதத்தில் இந்த பிரச்சனை இருக்கும்.
.
04. எண்ணெய் பசை சருமம்
ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வினால், சருமத் தில் அதிகப்படியான எண்ணெய் சுரக்க ஆரம்பிக் கும். எனவே இத்தகைய எண்ணெய் பசையைப் போக்க, இயற்கை வழிகளைக் கொண்டு சருமத் தை பராமரிப்பது நல்லது.
05. சரும வறட்சி
ஒருவேளை அதிகப்படியான எண்ணெய் பசை இல் லாவிட்டால், அதிகப் படியான வறட்சியை சந்திக்க நேரிடும். எனவே சரும வறட்சி அதிகமாக இருந்தா ல், அதிகமான அளவில் தண்ணீர், ஜூஸ் போன்றவ ற்றை குடிக்க வேண்டும்.
06. அரிப்பு
ஒருசிலருக்கு அரிப்புக்கள் ஏற்படும். இத ற்கு உணவுகள் காரணமாக இருக்கலாம். எனவே இத்தகைய அரிப்புக்களை சரிசெய் யதானாக சிகிச்சையை மேற்கொள்ளாம ல், மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.
07. ஸ்ட்ரெட்ச் மார்க்
கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் சரும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று தான் ஸ்ட்ரெட்மார்க். இத்தகை ய ஸ்ட்ரெட்ச் மார்க் வருவதற்கு கார ணம் உடல் எடை அதிகரிப்பது தான். ஆனால் இத்தகைய ஸ்ட்ரெட்ச் மார்க் கை ரோஸ்மேரி, ஆலிவ் மற்றும் பாதா ம் ஆயில் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் மறைக்கலாம்.
08. பாதம்
கைகளைப் போன்றே, பாதங்களும் சிவப்பு நிறத்தில் மாறுவதோடு, அரிப்பையும் உண் டாக்கும். இதற்கு காரணம் ஹார்மோன் மாற்றங்களும், உடல் எடை அதிகரிப்பதும் தான். எனவே தினமும் மூலிகை எண்ணெய் கள் கொண்டு மசாஜ் செய்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
09. சொரியாசிஸ்
கர்ப்பமாக இருக்கும் போது சொரியாசிஸ் பிரச்ச னையால் அவஸ்தைப் படக் கூடும். அதிலும் இது வந்தால், சருமம் சிவப்பு நிறத்தில் மாறி, புண்ணாகி, வெள்ளை செதில்கள் வெளியேறி, அரிப்புடன் இருக்கும்.
10. தோல் நிறமூட்டல்
தோல் நிறமூட்டல் என்பது சருமத்தில் ஆங்கா ங்கு ப்ரௌன் நிறத்தில் நிறமிகள் தங்கியிருப்ப தாகும். இது கர்ப்பத்தின் போது ஏற்படக்கூடும். அதிலும் நெற்றி, தாடை மற்றும் கழுத்துகளில் தான் பெரும்பாலும் ஏற்படும்.
நன்றி போல்டு ஸ்கை