Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட போவதற்கான அறிகுறிகள் !

பெண்களுக்கு பிரசவம் என்பது மறு ஜென்மம் போல. ஏனெனில் எந்த வலியை வேண்டுமா னாலும் தாங்க முடியும், ஆனால் பிரசவ வலி வந்தால், அதைத் தாங்கிக் கொள்வ து என்பது கடினமானது. ஆகவே கர் ப்பமாக இருப்பவர்கள், பிரசவ வலி வரப் போகிறது என்பதைத் எப்படி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வா று பிரசவ வலி வருகிறதெ ன்றால், அதற்கென்று சில அறிகுறிக ள் உள்ளன. அந்த அறிகுறிகளை முன்பே தெரிந்து கொண்டால், அந்த வலி ஆரம்பிப்பதற்கு முன்பே மருத்துவமனைக்கு சென்று விடலாம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென் று பார்ப்போம்.

-> பெண்களுக்கு பிரசவ வலி வருவதற்கா ன அறிகுறிகளில் மிக முக்கியமானது முதுகுவலிதான். எப்போது முதுகு வலி சாதாரண மாக வரும் வலியைவிட, அளவு க்கு அதிகமாக வருகிறதோ, அதை வைத் து பிரசவ வலி வரப்போகிறது என்பதைத் அறிந்து கொ ள்ளலாம்.

-> பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது குழந்தையின் வளர்ச்சியி னால் கருப்பை விரிவடையும். அது வே குழந்தை வெளியே வர ஆர ம்பிக்கிறதென்றால், அதா வது பிரசவ வலி வரப்போகிற தென்றால், அந்த கருப்பை சுருங் குவதற்கு ஆரம்பமாகும். அவ்வா று கருப்பை சுருங்கும் போது எந்த ஒரு வலியும் இருக்காது. ஆனால் நன்கு கூர்ந்து கவனித் தால், கருப்பை சுருங்குவதை அறியலாம். ஆகவே அதை வைத்து நன்கு தெரிந்து கொள்ளலாம்.

-> கருப்பை வாய்க்குழாயிலிருந்து அதிகமான அளவில் சளி போன் ற திரவம் வெளியேற ஆரம்பிக்கும். அவ்வா று வருவதுப் போல் தெரிந்தால், அதை வை த்தும் அறிந்து கொள்ள முடியும்.

-> சில நேரங்களில் கருப்பையிலிருந்து இர த்தம் வடிய ஆரம்பிக்கும். அவ்வாறு நிகழ்ந் தால், உடனே மருந்துவரை அணுக வேண்டு ம்.

-> ஏழாவது மாதத்திற்கு மேல் அடிக்கடி சிறு நீர் அவசரமாக வருவது போன்று இருக்கும். ஆனால் அதுவே பிரச வம் நடைபெறப் போகிற தென்றால், அப்போது சற்று வித்தியாசமா க உணர்வீர்கள். சொல்லப் போனா ல், வயிற்றில் ஒன்றுமே இருக் காது, இருப்பினும் அவசரம் என்பதுபோல் இருக்கும். ஏனெனில் அது வயிற்றில் இருக்கும் குழந்தை வெளியே வரு வதற்கான ஒரு அறிகுறி.

-> ஏழாம் மாதத்திலிருந்து வயிற்றில் உள்ள குழந்தையின் அசை வை நன்கு உணர முடியும். ஆனால், பிரசவ வலி வருவத ற் கு முன், குழந்தை யின் அசைவு குறைந்துவிடும். ஏனெனில் அப்போது குழந்தை வெ ளியே வருவதற்கு ஒரு சரியான ஒரு நிலையை அமைந்து இருப்ப தே ஆகும்.

மேற்கூறியவையே பிரசவ வலி வரப்போவதற்கான அறி குறி. ஆகவே இந்த மாதிரியான அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தா ல், உடனே மருத்துவமனைக்கு செல்வது நல்லது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply