திருமணத்தில் இணையும் ஓர் ஆணும் பெண்ணும், பரஸ்பரம் தங்களுக்குள் விட்டுக் கொடுத்து போகும் மனப்பான்மை யை இருவரும் வளர் த்துக்கொண்டு, உள்ளத்தளவில் உடலளவிலும் ஒருங்கி ணைந்து இல்லறத்தை நல்லறமாக கொண்டு சென்று, அதை தங்களது சந்த்தி யினருக்கும் பரிசாக கொடுக்க வேண்டும். இதுதான் தாம்பத்தியத்தின் தாத்பர்யம்!
இந்த திருமண பந்த்த்தில், ஒரு வேளை அந்த கணவன், உண்மையிலே யே தனது மனைவியை, வரதட்சனைக் காக கொடுமைப்படுத்தினாலோ, அல்லது வேறு எந்த வகையிலாவது துன்புறுத்தி னாலோ அந்த கணவன் கடுமையாக தண் டிக்கப்படுவன்தான் அந்த பெண்ணுக்கு அந்த கொடூர கணவனிடம் இருந்து விவாகரத்தும் தேவையான அளவு பணத்தையும் பெற்றுத் தருவதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால் திருமணம் செய்து கொண்டு ஓரிரு மாதங்கள் வரை அவனோ டு வாழ்ந்து விட்டு, ஏதோ சில காரணங்களை சொல்லி தனது பிறந்த வீட்டுக்கு சென்றவுடன் அந்த மனைவி அந்த கணவனிடம், நான் என் பிறந்த வீட்டோடு தான் இருப்பேன். வேண்டு மானால் நீ என்னோடு சேர்ந்து இருந்து கொள்” என்று கணவனிடம் எக்காளமிடுவதும் அதற்கு இசைந்து அவர்களோடு வாழும் பட்சத்தில் அவர்களை, தங் களது பிறந்த வீட்டினர் முன்னாடியே தன்னை அவமதிப்பதை பொறுத்துக் கொண்டு, தான் பெற்ற குழந்தைகளின் நலன்களு க்காக பொறுத்து போகிறான்.
ஒரு வேளை அந்த கணவன் அந்த பெண் ணின் நிபந்தனைக்கு பணிய மறுக்கும்போ து, அந்த அப்பாவி கணவன்மீதும் அவனது குடும்பத்தினர் மீதும் குடும்ப வன்முறை சட்டம் 498ஏ, பிரிவில் பொய்யாக வழக்கு தாக்கல் செய்து அவர்களை காவல் நிலை யத்திற்கும் நீதிமன்றத்திற்கும் பல ஆண்டு கள் அலைக்கழித்து, அவனது எதிர்காலத் தை பாழாக்கி விட்டு, அவர்களை, தண்ட னைக்குட்படுத்தி, அவனிடம் இருந்து, சில லட்சக் கணக்கில் பணத்தை ஜீவனாம்சம் என்ற பெயரில் பெற்றுக்கொண்டு, தனது அடுத்த குறியாக, வேறொரு அப்பாவியை, திருமணம் செய்து அவர்களிடம் இதே போல் சில மாதங்கள் வாழ்ந்து விட்டு, அதே பாணி யிலோ அல்லது வே றொரு பாணியிலோ தனது கணவனையும், அவனது குடும்பத்தினரை
யும் மிரட்டி, காவல்நிலையத்தில் பொய்ப் புகார் கொடுத்து அவர்களை சிறைக்குத் தள்ளுவதும், குடும்ப நீதிமன்றம் மூலமாக வே விவாகரத்து பெற்று, அதன்மூலம் லட்சக்கணக்கில் தனக்கு ஜீவனாம்சம் பெறுவதும் என்ன ஒரு கேடு கெட்ட செயல் ! இதுபோன்ற விவாகரத்துக்களும் ஒரு விதத்தில் விபச்சாரமே!
இதைவிட வீதியில் நின்று விபச்சாரமே செய்து விட்டு போகலாமே!
– விதை2விருட்சம்