Tuesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (21/09/2013): வெறும் உடற்பசிக்காக, சேற்றில் காலை வைக்காதே!

அன்புள்ள அம்மாவிற்கு —

இருபத்தி ஐந்து வயது நிரம்பிய நான், ஒரு ஜாலியான, யதார்த்தமா ன, ஆண்களுடன் சகஜமாக பேசும் பெண். திருமணமான மூன்றாம் ஆண் டில், விவாகரத்து ஆகி, நான்கு வருட ங்கள் சென்று விட்டன. ஐந்து வயதில் ஒரு பையன் இருக்கிறான். என் சுபாவ மே, என் கணவருக்கு சந்தேகமாகி, அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, விவாகரத்தாகி விட் டது.

தற்போது பிறந்த வீட்டிலிருக்கும் நான், வேலைக்கு சென்று வருகி றேன். வேலை செய்யுமிடத்தில் ஒருவருடன் பழகியதில், மனதில் சஞ்சலம் ஏற்பட்டது. ஆனால், அவர் என் சஞ்சலத்தை புரிந்தும், புரி யாதவர் போல விலகி விலகி சென்றார்; திருமணம் வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்ததால்.

அவருக்கு, என்னைவிட பத்து வயது அதிகம். அமைதியானவர். பின், என் எண்ணத்தை அறிந்து, என்மேல் இரக்கப்பட்டு, “திருமணம்செய்து கொள்கிறேன்; உன் எண்ணம் எனக் கு புரியும். ஆனால், முறை தவறி நட க்கலாகாது…’ என்றுகூறி, என்னை திருமணம்செய்து கொள்ள தயாரா க உள்ளார். இது, எனக்கு, சற்று தாமதமாகத்தான் தெரிய வந் தது.

அவருடன் பேசுவதை நிறுத்தினேன். இதற்கிடையில், வேலைக்கு வந்து செல்லும்போது, நண்பராக பழகிய ஒருவர்மேல் விருப்பப்பட் டேன். ஆனால், அவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. எனினும், அவர் என்னையும் திருமணம்செய்து கொள்வதா க கூறுகிறார்.

முதலில் நான் விரும்பிய நபர், ரிசர்வ்ட் டைப். என் ஜாலி டைப் பிற்கு, ஒத்து வராது என்று நினைத்து, திருமணத்திற்கு மறு க்கிறேன். அவரோ, “இப்படிப்ப ட்ட இரண்டு கேரக்டர்கள் தான் நன்றாக இருக்க முடியும்…’ என் று கூறுகிறார்.

இரண்டாமவர், நல்ல ஜாலி டைப்; என் வயதை ஒத்தவர். அதுதான் சரியாக வருமென்று நான் நினைக்கிறேன்.

இது, அவரது முதல் மனைவிக்கு துரோகம் செய்வது ஆகுமா? நம் கலாச்சாரத்துக்கு ஒத்து வருமா?

மீண்டும் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய, நீங்கள் ஆலோச னை கூறவேண்டும்.

உண்மையுள்ள மகள்.

அன்பு மகளுக்கு—

உன் கடிதம் படித்தேன்… தான் செய் வது தவறு என்பது கூடத் தெரியா மல், ஒரு பெண் இருப்பாளா என்ற, வருத்தம் தான் ஏற்பட்டது.

தெரியாமலா பெரியவர்கள், “இதயம் ஒரு கோவில்’ என்று கூறினர். அந்தக் கோவி லில் மூல விக்கிரகமாக, யாராவது ஒரு வர்தான் இருக்க வேண்டும். கண்டவர் வந்து உட்கார்ந்தால், மூன்றாந்தர லாட்ஜுக்கு சம மாகி விடாதா?

ஏற்கனவே, கணவரை விவாகரத்து செய்த நீ, “நான் ஜாலியான, யதார்த்தமான, ஆண்களுடன் சகஜமாகப் பேசுபவள்; ஆனால், என் சுபாவமே என் கணவருக்கு சந்தேகமாகி, விவாகரத்தாகி விட்டது…’ என்று எழுதியிருக்கிறாய்.

ஜாலி என்றும், யதார்த்தம் என்றும் எதை நினைக்கிறாய் நீ? கண்ட ஆண்களுடன் அரட்டையடித்து, இரட்டை அர்த்த ஜோக் குகளைப் பரிமாறிக் கொள்வதையா அல்லது ஸ்கூட்டரில் ஊர் சுற்றி, அவரது மனதில் ஆசை நெருப்பைத்தூவி, பிறகு, “ஐயோ, நான் யதார்த்தமாகத்தான் பழகி னேன்…’ என்பதையா?

எப்போதும் புன்னகை தவழ, எந்த வேலையையும் சிரித்தபடி செய்து, ஆண்களிடம் ஓரளவு இடைவெளி விட்டுப் பழகி, நல்ல சிநேகிதிக ளுடன் வம்பில்லாது, கலகலவெனப் பேசுவது தான் நிஜமான ஜாலி. வாழ்க்கையில் மேலே உயரும்போது, எத்தனையோ சறுக்கல்கள் வரும். அவைகளைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது தான் யதார்த்தம்.

ரி… உன் விஷயத்துக்கு வருகி றேன்… முதல் கணவனையே, நீ சரி யாகப் புரிந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது. அப்புறம் ஆபீசி ல், நீ பார்த்து காதல் வயப்பட்ட, அமைதியான, உன்னை விடவும் பத்து வயது மூத்தவர்…

இவரிடமும் உனக்கு காதல் இல் லை. ஏதோ, அப்போதைய, தற்காலிகமாய் காதல் என்று ஒன்றை, உனக்கு நீயே சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறாய். உண்மையான கா தல் என்றால், இப்படிப்பட்ட இவரைவிட்டு, இன்னொருவரைத் தேடி ப் போயிருக்க மாட்டாய். அந்த இரண்டாவது ஆள், மன்மதனாக, ஜாலி ஆசாமியாக, பெரும் செல் வந்தராக கூட இருக்கட்டுமே… உன் மனம் இதில் சலனப்படக் கூடாது.

அடுத்து, நீ செய்யப்போவது மகா பாவமான காரியம். ஏற்கனவே திருமணமாகி, இரண்டு மாதங்களாக மனைவியுடன் சேர்ந்திருக்கி ற ஒருமனிதரை, எப்படி நீ தேர்ந்தெடுத்தாய்? இந்த லட்சணத்தில், “இது முதல் மனைவிக்கு துரோகமாகுமா, நம் கலாச்சாரத்துக்கு ஒத்து வருமா…’ என்றெல்லாம் கேள்வி கேட்டிருக்கிறாய்.

என்னைப் பொறுத்த வரையில், நீ, இப்போதைக்கு, யாரையும் மன சாலும் நினைக்காமல், உன் எதிர் கால வாழ்க்கைக்குத் தேவையா னப் பாதுகாப்புக்கு, நல்ல வேலை யில் இருப்பதும், உன் ஐந்து வயது மகனுக்கு, நல்லதாயாக இருப்பது ம் தான் நல்லதெனத்தோன்றுகிற து.

இந்த இருவரில் யாரைமணந்தாலும், மறுபடியும் நீ கஷ்டப் படு வாய்; அவர்களையும் அவஸ்தைக்குள்ளா க்குவாய்.

முதலில், உன்னை நீ உணர்ந்து கொ ள். இப்போதைக்கு, உன்னைவிட பத்து வயசுபெரிய முதல் மனிதரிடம், கொஞ்ச நாள் அவகாசம் கே ள்! இரண்டாவது ஆசாமியிடம், “சாரி… எனக் கு இதில் இஷ்டமில்லை…’ என்று சொல்லி விடு.

அப்புறம் பார்… உன்னை அறியாமலே யே, பெருமைக்குரிய பெண் மணியாகப் பேசப்படு வாய். எது நல்ல து, எது கெட்டது என்பது கூடப் புரியாமல், வெறும் உடற்பசிக்காக, சேற்றில் காலை வைக்காதே.
வாழ்த்துகள்.

— அன்புடன்
சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply