Saturday, January 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘இந்த உலகுக்கே தாயாகிய சீதை’, ஒரு அரக்கியை, “அன்னையே!” என்று அழைத்த விசித்திரம்!

கவிச்சக்கரவர்த்தி கம்பர், இறைவியின் மனத்தில் தோன்றும் நுட்பமான உணர் வுகளைக் கூட, எல்லா மனிதர்களும் ஆழ்ந்து அனுபவிக்க முடியும் என்பதை க் காட்சி ப்படுத்துகிறார். கம்ப ராமாய ணம் யுத்த காண்டத்தில்வரும் காட்சி இது. இந்திர ஜித்தின் அம்பில் லட்சு மணன் மயங்கு கிறான், தம்பியின் நிலையைக் கண்டு கதறிய ராமரும் பக்கத்திலேயே சோர் ந்து விழுகிறார்.

இதைப் பார்த்த ராவணன் யோசித்தான், ‘அசோகவனத்தில் இருக்கு ம் சீதையை நான் எவ்வளவோ கெஞ் சிப் பார்த்துவிட்டேன், கொஞ்சிப் பார் த்து விட்டேன், மிரட்டிப் பார்த்து விட் டேன், ஆனால் அவள் என் ஆசைக்கு இணங்கவில்லை, தன் கணவன் வந் து தன்னை மீட்டுச் செல்வான் என்று நம்பிக்கையுடன் இருக்கிறாள். இப் போது, அந்தக் கணவனே அடிபட்டு வீழ்ந்து விட்டான். இந்தக் காட்சியைச் சீதை பார்த்தால், அவளுடை ய நம்பிக்கை  விலகி, என்மேல் காதல் வருமல்லவா?’ ராவணன் கை தட்டினான். புஷ்பக விமானம் தயா ரானது. சில பெண்கள் சீதை யை அதில் ஏற்றி அழைத்துச் சென்றா ர்கள். ராம லட்சுமணரின்  நிலை மையைக் காட்டினார்கள்.

அசோகவனத்துக்குள் நுழைந்த பிற கு, சீதை இப்போதுதான் முதன் முறையாக வெளியே வருகி றாள். அதுவும் இப்படிப்பட்ட ஒரு கோரக் காட்சியைப்  பார்ப்பதற் காக! அப் போது சீதையின் கதற லை ஓர் அழகான பாடலில் காட்சிப் படுத்து கிறார் கம்பர்: மங்கை அழுதாள், வான் நாட்டு மயில் கள் அழுதார், மழவிடை யோன் பங்கின் உறையு  குயில் அழுதாள், பதுமத்து இரு ந்த மாது அழுதாள், கங்கை அழு தாள், நாமடந்தை அழுதாள், கமலத் தடங் கண்ணன்

தங்கை அழுதாள், இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார் ராம -லட்சுமணரைப் பார்த்த சீதை அழுதாள், அவள் அழுவதைப் பார் த்து, வானுலகத்தில் இருக்கும் மயில் போன்ற தேவதைகள் அழுதார் கள், ரிஷப  வாகனத்தில் உலா வரும் சிவனின் இடப்பக்கம் வசிக் கிற, குயில் போன்ற பார்வதி தேவி அழுதாள், செந்தாமரை மலரில் அமர்ந்தி ருக்கும் மகா லட்சுமி  அழுதாள், சிவனின் ஜடாமுடியில் வசிக்கிற கங்கை அழுதாள், பிரம் மனின் நாவில் வாழும் சரஸ்வதி அழுதாள், தாமரை மலர் போன்ற பெரிய கண்களை உடைய திருமா லின் தங்கையாகிய துர்க்கை அழு தாள்.

அட, அவர்களெல்லாம் அழுதது கூடப் பரவாயில்லை, இரக்கமே இல்லாத அரக்கியர்கள், அவர்கள் கூட சீதையைக் கண்டு தளர்ந்து போனார்கள், அழு தார்கள் என்கி றார் கம்பர். அதன்மூலம் எல்லா உலகங்களில் உள்ள எல்லாரும் சீதைக்காக இரங்கினார்கள் என்று உணர்த்துகிறார். இவள் இப்படி அழுவதைப்பார்த்து விட்டு, திரிசடை என்ற அரக்கி வருந்தி னாள். விபீஷணனின் மகளான அவள் சீதையைத் தேற்றுவதற் காகப் பல விஷயங்களை எடுத் துச் சொன்னாள். ‘‘இதெல்லாம் எங்க பெரியப்பாவும் அவர் மக னும் செய்யற மாயை, நீ இதை நம்பி அழாதே, ராமனுக்கும் லட் சுமணனுக்கும் எந்த ஆபத்தும் இல்லை!’’ என்றா ள்.

சீதை ஒருவழியாகத் தேறினாள். ஆனாலும் அவளுக்கு முழு நம்பி க்கை வரவில்லை. ‘‘அவங்க இப்படி விழுந்து கிடக்கறாங்களே’’ என் றாள்.

‘‘நாளை காலை எழுந்துடுவாங்க’’ என்றாள், திரிசடை. ‘‘உனக்குக் கவலையே வேண்டாம்!’’ அப்போது, சீதை சொல்கிறாள்: ‘‘அன்னை நீ உரைத்தது ஒன்று ம் அழிந்திலது, ஆதலாலே உன்னையே தெய் வமாக் கொண்டு இத்தனை காலம் உய்ந்தே ன், இன்னம் இவ் இரவு முற்றும் இருக்கின் றேன்.’’ உலகுக்கே தாயாகிய சீதை, இப்போது திரிசடையை, ‘‘அன்னையே’’ என்று விளிக்கி றாள். ‘‘இத்தனை நாளா, நீ சொன்னது எதுவும் தப்பா நடக்கலை, அதனால, இப்பவும் உன்னை நான் நம்பறேன். நான் இந்த அசோக வனத்துக்கு வந்தது லேர்ந்து, நீ ஒருத்திதான் எனக்குத் தெய்வம், இத்தனை நாளா உன்னைதான் வழி பட்டு வாழறேன்.’’

இது ஒரு நுட்பமான உளவியல் காட்சி. என்னதான் கடவுளாகவே இருந்தா லும், துன்பம் வரும்போது ஆறுதல் சொ ல்லவும் அரவணை க்கவும் ஒருவர்  வேண்டும்! ராமனுக்கு லட்சுமணன், அனுமன், சுக்ரீவன்போல, சீதைக்குத் திரிசடை!

அப்படித் துவண்ட நேரங்களில் நமக்காகத்தோள் கொடுத்தவர்களு க்கு வெறுமனே நன்றி சொன்னால் மட்டும் போதாது, அவர்களைக் கடவுளுக்கு  இணையாக மதிக்கவேண்டும். திரி சடையைச் சீதை ‘உன்னையே தெய்வமாக் கொ ண்டு’ என்று மனம் உருகிப் போற்றியது போல! ‘‘ திரிசடை, இப்படி ஒரு கொடுமையான காட்சி யைக் கண்ணெதிரே பார்த்தப்புறமும் நான் இன் னும் உயிரோட இருக்கேன்னா, அதுக்கு ஒரே ஒரு  காரணம், உன் மேல நான் வெச்சிருக்கற நம்பிக்கை தான்’’ என்றாள், சீதை. ‘‘நீ சொல்றதை நம்பி, நான் ஒரே ஒரு ராத்தி ரிமட்டும் காத்திருப்பேன்.  அதுக்குள்ளே இவங்க கண் முழிக்கணும்.’’ ‘‘அது கண் டிப்பா நடக்கும், கவலை வேண்டாம்!’’ என்றா ள், திரிசடை. அவள் சொன்னது அப்படி யே நிகழ்ந்தது.

அனுமன் ஒரே இரவில் பறந்து சென்று மருந்து மலையைக் கொண் டுவர, அந்த மூலிகைகளில் இருந்து  வீசிய காற்று ராம லட்சுமண ரையும் மற்ற வானரர்க ளையும் உயிரோடு திரும்பக் கொண்டுவந்து விட்டது. அழுகை மறந்து சிரித்தாள் சீதை, கூடவே  இந்த உலகமும் சிரித்தது!

நாளிதழ் ஒன்றில் படித்த‍து

Leave a Reply