Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிவபெருமானையே! “யார் அந்தச் சோம்பேறி?” என்று கூறி, அடித்த‍ மன்ன‍ன்!

மதுரை நகரில் பெரும் மழை. வையை (வைகை) ஆற்றில் நீர் வெள் ளம் பெருக்கெடுத்து ஓடியது. கரை களை உடைத்துக் கொண்டு நகரத் தினுள்நு ழைந்துவிடுவேன் என்று பயமுறுத்தியது. அப்போது மதுரை யை ஆண்ட அரசன் பதறிப் போனா ன். தன்னுடைய மந்திரிகளை அழைத்தான், ‘‘ கரைகளை உடனடி யாக அடைக்க வேண்டும்,  அதற்கு என்ன வழி?’’ என்றான். ‘‘அரசே, வை யைக் கரை மிகவும் பரந்து விரிந்த து’’ என்றார், ஓர் அமைச்சர். ‘‘ஆகவே, அதை அடைப்பதற்காக நாம் ஒரு பெரிய சேனையையே அனுப்பி னாலும் போதாது, இங்கே அடைப்பதற்குள் அங்கே உடைந்துவிடும், அங்கே அடைக்கச் சென் றால் இங்கே பிளந்துகொள்ளும்….’’ ‘‘அப்ப டியானால், வேறு என்னதான் செய்ய?’’

‘‘நம் மக்களை வீட்டுக்கு ஒருவ ராக வையைக் கரைக்குச் சென் று பணிபுரியச் சொல்லுவோம். ஊர் கூடித்தேர் இழுத்தால் எப் பேர்ப்பட்டவேலையும் சட்டென் று முடிந்துவிடும்.’’ அரசன் ஒப் புக்கொண்டான். உடனே இந்தச் செய்தி ஊர் முழுக்க அறிவிக்க ப்பட்டது. எல் லாரும் வையைக் கரைக்குச் சென்று மண் அள்ளிப்

போட்டுக் கரையைப் பலப்படுத்த ஆரம்பித்தார்கள். மறுநாள், அந்த அரசன் கரை அடைப்புப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக வந் தான். வேலை சுறுசுறுப்பாக நடப்பதைப் பெருமையுடன் பார்த்தான். திடீரென்று, அரசனின் முகம் சுருங் கியது. காரணம், அத்தனை மக்க ளும் மும்முரமாக வேலைபார்த்து க்கொண்டிருக்க, நடுவில் ஒருவன் மட்டும் சும்மா உட்கார்ந்திருந்தா ன்; சுற்றி இருப்பவர்களை வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தான். அரச னுக்குக் கோபம் பொங்கியது. ‘‘ யார் அந்தச்  சோம்பேறி?’’ என்று விசாரித்தான்.

‘‘யாருன்னு தெரியலே மன்னா…’’என்று பதில் வந்தது. ‘‘ஆனா பைய ன் சரியான போக்கிரி, ஒழுங்கா வேலை செய்யறதில்லை, மண் ணைத் தூக்கிட்டு நடக்கும் போது வேணும்ன்னே கீழே விழறமாதிரி நடிப்பான். எல்லா மண்ணையும் எங் கேயாவது சிதறியடிச்சு வீணாக்குவான், பாட்டுப் பாடுவான், நடனம் ஆடுவா ன், தான் கெட்டது போதாது ன்னு, கூட இருக்கறவங்க ளையும் ஆடச்சொல்லிக் கட்டாயப் படுத்துவான். மொத்தத்துல இவ னாலதான் இப்பகுதியில வேலை கெட்டுப்போச்சுன்னே சொல்லலா ம்!’’ அவர்கள் சொல்லச்சொல்ல அரசன் முகத்தில் ஆத்திரம் அதிகரி த்தது. சட்டென்று ஒரு பிரம்பை உருவிக்கொண்டு அந்த இளைஞனி ன் அருகே  சென்றார். அவன் முதுகில் ஓங்கி ஓர் அடி வைத்தார். அடுத்து என்ன நடந்தது? திரு விளையாடல் புராணத்தில் பரஞ்சோதி முனிவர் சொல்வதைக் கேளுங்கள்:

பாண்டியன் முதுகில் பட்டது, செழியன்
பன்னியர் உடம்பினில் பட்டது
ஆண் தகை அமைச்சர் மேனிமேல் பட்டது,
அரசு இளம் குமரர்மேல் பட்டது,
ஈண்டிய கழல் கால் வீரர்மேல் பட்டது,
இவுளிமேல் பட்டது, பருமம்
பூண்ட வெம் கரிமேல் பட்டது, எவ் வுயிர்க்கும்
போதன்மேல் பட்ட அத் தழும்பு

வையைக் கரையில் நாடகம் ஆடிய அந்த இளைஞன் வேறு யாரும் அல்ல, எல்லா உயிர்களின் அறிவுக் கெல்லாம் மேலாகத் திகழும் சிவபெ ருமான்தான்!

அவர்முதுகில் பாண்டியன் பிரம்பி னால் விளாசியபோது, அந்த அடி அதே பாண்டியனைத் திருப்பித் தாக் கியது, அவனுடைய மனைவிகள் எல் லாருடைய முதுகிலும் விழுந்தது, பாண்டியனின் அமைச்சர்கள் மேனியில் விழுந்தது, இளவரசர்கள் மேல்பட்டது, கழலணிந்த வீரர் கள் மேல்பட்டது, குதிரைகள், யானைக ளைக்கூடத் தாக்கியது. பூமியில் மட்டுமா, அதையும் தாண்டி விழுந்த து அந்த அடி. அடுத்த பாட்டைக் கவனியுங்கள்:

பரிதியும் மதியும் பாம்பும் ஐங்கோளும்
பல் நிறம் படைத்த நாள் மீனும்
இரு நிலம், புனல், கால், எரி கடும் கனல், வான்
எனும் ஐம் பூதமும் காரும்
சுருதியும் ஆறு சமய வானவரும்
சுரர்களும் முனிவரும் தொண்டின்
மருவிய முனிவர் கணங்களும் பட்ட
மதுரை நாயகன் அடித் தழும்பு

சூரியன், சந்திரன், ராகு-கேது என்ற பாம்புகள், இவை தவிர, மற்ற ஐந்து கோள்கள், பல நிறங்களில் மின்னும் நட்சத்திரங்கள், நிலம், நீர், காற்று,  நெருப்பு, வானம் என்ற ஐம்பூதங்கள், மழை, வேதங் கள், ஆறு வகைச் சமயங்களைப் பின்பற்று ம் தேவர்கள், முனிவர்கள், மற்றவர்கள்… இப்படி எல்லாருடைய முதுகிலும் அந்த மதுரை நாயகன் வாங்கிய அதே அடி சென் று விழுந்தது.

வானவர், மனிதர், நரகர், புள்,
விலங்கு, மாசுணம், சிதல், எறும்பு, ஆதி
ஆன பல் சரமும் மலை, மரம், கொடி, புல்,
ஆதி ஆம் அசரமும் பட்ட
ஊன் உடை கருவும் பட்டன, தழும்போடு
உதித்தன உயிர் இல் ஓவியமும்
தான் அடி பட்ட சர அசர சடங்கள்
தமக்கு உயிர் ஆயினோன் தழும்பு!


தேவர்கள், மனிதர்கள், நரகர்கள், பறவைகள், விலங்குகள், பாம்பு என்று அசைகிற உயிர்கள், மலை, மரம், கொடி, புல் போன்ற அசை யாப்  பொருள்கள் இவை எல்லாமும் அடிபட்டன. சுவரில் இருக்கும் ஓவியங்களுக்குக்கூட அடி விழுந்தது. அவ்வளவு ஏன்? கருப்பைக் குள்ளிருந்து வெளியே வந்த

குழந்தைகூட, முதுகில் அடி வாங்கிய தழும்புடன்தான் காணப்பட் டது! இதற்கெல்லாம் என்ன கார ணம்? இயங்குகிற, நிலைத்து நிற் கின்ற எல்லாவற்றுக்கும் உயிர், அந்த இறைவன்தான். அவனை அடித்தால் எல்லாருக் கும்தானே வலிக்கும்? திருவிளை யாடல் புரா ணத்தில் வரும் இந்தக் காட்சி இறைவன் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ஆகவே தான், அவனுக்கு விழுந்த அடி, எங்கும் விழுகிறது. அவனைத்தானே நான் அடித்தேன் ஏன் எல்லோருக்கும் வலித்த‍து? என்ற ஆச்சரிய அடங்கி ய சந்தேகத்துடன் சிந்திக்க‍ தொடங்கிய மன்னின் எதிரே சிவபெருமான் தோன்றி னார். தான் வேண்டு மென்றே விளையாட் டுத்தனமாக நடந்துகொண்டு, அரசனிடம் அடி வாங்கி, அதை எல்லா உயிர்கள் மீதும் விழவைத்து, தான் யார் என்பதைஉணர்த்த‍ வே  சிவபெருமான், தான் இந்த திருவிளை யாடலை நடத்தியதா கூறி, ஒரு கூடை மண்ணை எடுத்து வையைக் கரையில் வீசினார். உடைந்து கிடந்த எல்லாப் பகுதிகளும் மறுபடி சேர்ந்துகொண்டன. இறைவனின் திருவிளை யாடலை எண்ணி எல்லோரும் மகிழ்ந்தார்கள்!

நாளிதழ் ஒன்றில் படித்த‍து

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: