உலக அளவில் தகவல்தொடர்பு சாதனங் களை தயாரித்து வெளியிடுவதில் மிகப் பெரிய சாதனை செய்து கொண்டுள்ளது சாம்சங் நிறுவனம். பிரபல ஆப்பிள் நிறு வனத்தின் ஸ்மார்ட் போன்களுக்கு போட் டியாக செயல்பட்டு, ஆப்பிளின் தயாரிப்பு களைபின் தள்ளி, தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய பிரளயத்தை உருவாக்கி வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருப்பதுதான் சாம்சங் நிறுவனம்.
இப்படிப்பட்ட தகவல்தொடர்பு சாத னங்களின் ஜாம்பவனான சாம்சங் நிறுவனம் பல்வேறு தரங்களில், பல் வேறு அளவுகளில் பல்வேறு விலை களில், உலகமக்களின் பொருளாதார த்தின் அடிப்படையில் உயர் தர ரக ஸ்மார்ட் போன்கள் முதல், தரம் குறையாத பட்ஜெட் போன்கள் வரை வெளியிட்டு வருகிறது.
சாம்சங் கேலக்சி எஸ் டியோ ஜடி எஸ்7562
அந்த வகையில் அமைந்த ஒரு பட்ஜெட் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் தான் சாம் சங் கேலக்சி எஸ் டியோ ஜடி எஸ்7562 (Samsung Galaxy S Duos GT S7562 ). இந்த மாடல் போனானது அழகிய கண்கவர் கறு ப்பு நிறம் மற்றும் வெண்மை நிறத்தில் கிடைக்கிறது. இரண்டு நிற போன்களுக் கும் நிறம் மற்றும் விலையில் சிறு வித் தியாசம் காணப்படுகிறது.
சாம்சங் கேலக்சி எஸ் டியோ ஜடி எஸ்7562 உள்ள சிறப்பம்சங்கள்:
1. 5MP திறனுள்ள முதன்மை கேமரா உள்ளது. இந்த முதன்மை கேமரா வில் ஆட்டோ போகஸ், மல்டிஷாட்மோ ட், பனோரமா, வொயிட் பேலன்ஸ் போ ன்ற அமைப்புகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் வண்ண ம் வண்ணமயமான, அழகான படங்க ளை எடுக்கலா ம் .
அத்தோடு 0.3 முன்பக்க கேமராவும் உள் ளது. இதன் மூலம் சமூக தளங்களில், மற்றும் வேறு gmail போன்ற தளங்களில் முகம் பார்த்துப் பேசக்கூடிய வீடியோ சாட்டிங்கில் ஈடுபடலாம்.
3ஜி நெட்வொர்க் சப்போர்ட் செய்கிறது.
4 480×800 பிக்சல் திறன் கொண்ட TFT திரையைக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் தெளிவான காட்சி அமைப்புகளைப் பெற முடியும்.
இந்த மொபைல் விரைவாக செயல் படுவதற்கென 1Ghz கோர்டெக் ஏ5 பிராசசர் அமைந்துள்ளது. 32ஜிபி அளவிற்கு விரிவாக்கத்தக்க மெமரி மற்றும் டூயல் சிம் அமைப்பைக் கொண்டுள்ளது.
12 மணி நேரம் பேசுவதற்குரிய பேட்டரி பேக்கப் கொடுக்கக்கூடிய 1500 mAh பேட்டரி அமைந்துள்ளது. ஒரு வருடத் திற்கான வாரண்டி உள்ளது. பேட்டரி உட்பட அதனுடன் செல்போனுடன் வரு ம் உப்பொருட்களுக்கு 6 மாத காலமும் வாரண்டியும் உள்ளது.
இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந் த ஆண்ட்ராய்ட் மொபைல் போனின் விலை ரூபாய் 9489/- மட்டுமே. இதே மாடல் வெண்மைநிற மொபைலில் விலை ரூபாய் 9630/-.