Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களின் கண்களுக்கு அழகுசேர்க்கும் கண் மை தடவுவதில் 10 ஸ்டைல்கள்

‘கண்ணுக்கு மை அழகு’ என்று கவிஞன் சும்மா வா எழுதியிருக்கிறான்? அவன் கூற்று பொய் கிடையாது. பெண்களின் கண்களுக்கு அழகை சேர்க்க முதன்மை யான சாதனமாக விளங்குகி றது கண் மை. கண் மை தடவினால், அது கண்க ளை தனியாக பளிச்சிட்டு காட்டும். அதனல்தான் சினிமா ஹீரோக்கள்கூட கண் மை தடவிக் கொள்கின்றனர். பல வித்தியாசமான ஸ்டைல்க ளில் நாகரீகத்திற்கேற்ப கண்ணுக்கு மை தடவு வது என்ப து ஒரு குதூகுல ம் தானே.

கருப்பு கண் மை என்பது கண்களுக் கான ஒரு எளிய மேக்அப் ஆகு ம். சொல்லப்போனால் ஒவ்வொரு நாளும் இப்படி விதவிதமான ஸ்டைல்களில் கண்ணு க்கு மை தடவி கொண் டால், எளிய முறையி லேயே தினமும் உங்கள் தோற்றத்தை மாற்றி க் கொள்ளலாம். அலுவலக த்திற்கு ஓட வேண் டியதன் காரணமாக மேக் அப் செய்து கொள்ள 5 நிமிடங்கள் தான் உள்ளதா? கவலை வேண்டாம்! இந்த கண் மையை தடவி கொண்டாலே போது மானது.

பொதுவாக விதவிதமாக கண்ணனுக்கு மை தடவி கொண்டாலும் கூட, அது உங்களுக்கு பொ ருந்தி விடும். அதற்கு காரணம் கருமை நிறம் அனைத்து கண் களுக்கும் எடுப்பாக அமைவது தான். முக்கிய மாக இந்திய பெண்க ளுக்கு கருப்பு கண் மையை தவிர, வேறு எதுவும் அவ்வளவு ஈர்ப் பாக அமையாது. அதனால்தான் எந்த ஸ்டைலில் கருப்பு மை தடவி னாலும், அது இந்திய பெண் களுக்கு பொருந் துகிறது. இருப்பினும் தின மும் கண்களுக்கு வெறும் கண் மை மட்டும் தடவினால், நாளடைவில் உங்கள்தோற்றம் சலிப்படைய ச் செய்யும்.

ஆகவே உங்களை தினமும் புதிதான தோ ற்றத்தில் காட்டுவதற்கு, நீங்கள் செய்ய வே ண்டியதெல்லாம் விதவிதமான ஸ்டைல்களி ல் கண்ணுக்கு மை தடவி கொள்ளவேண் டு ம். அது என்ன ஸ்டைல் கள் ன்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

01. அடிப்படை கண் மை

கண்களின் மேல் இமை ரோமங்களி லும்கீழ் இமை ரோமங்களிலும் சரிச மமாக பட்டையான கோடுகளை தீட் டினால், அதுதான் அடிப்படை ஸ்டை ல். இந்த ஸ்டைலுடன் தனியாக கூடு தல் கொசுறு எதுவும் செய்யத் தேவை யில்லை. இதனை செய்ய வெறும் 2 நிமிடங்கள் போதும். முக்கியமாக அவசரமாக வெளியேறும் போது, இது தோதான வழிமுறையாகும்.

02. மேல் இமை ரோமங்களில் கோடு

ஒரு பார்மல் தோற்றம் தேவைப்பட்டால், கண் மையை கண்களின் மேல் இமை ரோமங்களின் மேல் மட்டும் தடவி, கீழ் இமை ரோம ங்களை அப்படியே விட்டு விட வேண்டும். பார்மல் ஆடை அணியும் போது இந்த ஸ்டைல் நன்றாகவே பொ ருந்தும்.

03. கீழ் இமை ரோமங்களில் கோடு

மேல் கூறிய ஸ்டைலுக்கு அப்படியே நேர் எதிரான இந்த ஸ்டைலும் கூட அழகை அதிகரிக்கும். சில நேரம் உங் களுக்கு மேக்அப் செய்து கொள்ள விரு ப்பம் இருப்பதில்லை. ஆனால் வெளிறி ய கண்களை மட்டும் சரிசெய்ய தோன் றலாம். அப்படிப்பட்ட நேரத்தில் கீழ் இமை ரோமங்களில் மட்டும் கண் மை யை தடவி, மேல் இமை ரோமங்களை அப்படியே விட்டு விடுங்கள்.

04. ஸ்மோக்கி கண்கள்

இவ்வகை தோற்றம் அளிக்க, கண்களுக்கு பட்டையாக மேக்அப் போட வேண்டும். உங் கள் மேல் இமை ரோமங்களில் கண் மை யை தடவி, ஏதாவது பெட்ரோலிய ஜெல்லி யை கொண்டு இமையில் நன்றாக தேய்க்க வும். இவ்வகை மேக்-அப் உங்கள் கண்களு க்கு நீங்கள் விரும்பிய ஸ்மோக்கி தோற்ற த்தை அளிக்கும்.

05. தாக்கம் ஏற்படுத்துகின்ற கண்கள்

கண்களை மட்டும் தனிப்படுத்தி காட்ட வேண் டுமா? அப்படியானால் இந்த ஸ்டைலை முயற் சி செய்யுங்கள். வெண்ணிற ஐ ஷா டோவை கொண்டு கண் இமை களில் தடவி, அதனை வெண்மை யாக மாற்றுங்கள். பின் கண்மை யை கொண்டு, கோண வடிவத்தில் பட்டை யான கோடுகளை மேல் மற் றும் கீழ் இமை ரோமங்க ளில் தடவுங்கள்.

06. கோதிக் மேக்-அப்

இவ்வகை மேக்-அப்பில் கருமை நிற கண் மை அதிகமாக பயன்படுத்தப்படும். கோதிக் மேக்- அப்பை முயற்சிசெய்ய கண் மைகளை கொண் டு தடித்த கோடுகள் தீட்டவேண்டும். மேலும் இருள் நிறைந்த வண்ணத்தில் ஐ ஷாடோவைப் பயன் படுத்த வேண்டும்.

07. சிறகை கொண்ட கண்கள்

இவ்வகை பேஷன் மீண்டும் உயிர்பெறுகிறது. இந்த ஸ்டைலை பின் பற்ற வேண்டுமானால், கண் மையை மேல் இமை ரோமங்களுக்கு சற்று மே லே தீட்ட வேண்டும். இதனால் உங்கள் கண்களை பார்ப்பதற்கு, மேல் நோக்கி சாய்ந்திருப்பதை போ ன்ற தோற்றமளிக்கும்.

08. பெண் மானை போன்ற கண்கள்

பெண் மானை போன்ற கண்கள் மேக்-அப் என்பது 1960 மற்றும் 1970 -களில் புகழ் பெற்று விளங்கியது. ஆனால் இன்றும் கூட இதனை நம் பாலிவுட் கனவு கன்னிகள் செய்து வருகி ன்றனர். கண் மையைமேல் மற்றும்கீழ் இமை ரோமங்களில் பட்டை யாக தடவி, கண்க ளின் மூலையில் ‘u’ போன்று வளைத்து விடுங்கள். இவ்வகையில் கண் மை தீட்டினால் ஒரு மென்மையான தோற்றத்தை தரும்.

09. அடர்த்தியான கருமை நிற கண் மை

சில பெண்களுக்கு அடர்த்தியாக கண் மையை தடவி, கண்களை கருமையாக காட்ட விருப்பம் இருக்கும். அதை நாம் கவனிக்கவும் செய்திருப் போம். அப்படிப்பட்ட ஸ்டைல் வேண்டுமானால், கண் மை பென்சிலை இரண்டு அல்லது மூன்று முறை கண் இமை ரோமங்களில் தீட்டினால், இந்த விளைவு கிடைத்துவிடும்.

10. இரண்டு ரெக்கை கண்கள்

முக்கியமான பார்ட்டி மற்றும் விசேஷங்களுக்கு செல்ல வேண்டு மானால், இந்த ஸ்டைலை பயன் படுத்தலாம். உங்கள் மேல் இமை ரோமங்களில் அழகிய பறக்கும் சிறகை போல் கோடை தீட்டிக் கொ ள்ளுங்கள். மேலும் கீழ் இமை ரோமங்களில் தீட்டும் கோடு, கீழ் நோ க்கி வளைய வேண்டும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: