Tuesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மொபைல் வாங்கப்போகும்முன் தெரிந்து கொள்ள‍ வேண்டிய சில அடிப்படை தகவல்கள்

தீர்மானம்:

முதலில் நீங்கள் எந்த போனை வாங்கப் போகிறீ ர்கள் எனத் தீர்மானம் செய்துகொள்ளுங்கள். நண்பர்கள், தெரிந்தவர்கள் அல்லது இணையத் தில் நன்றாகத் தேடிப்பார்த்து உங்களுக்கேற்ற செல்போன் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டு, “இதுதான் நமக்கேற்ற செல்போன்” எனத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். பிறகு கடை க்குச் சென்று வாங்கலாம்.

ஆன்லைன் சாப்பிங்:

மொபைல் வாங்க முடிவெடுத்ததும் ஆன் லைனில் வீட்டில் இருந்து கொண்டே ஆர்டர் செய்து செல்போனை பெற முயற்சிக்காதீர்க ள்(Avoid Online shopping). இது சில வேளைக ளில் உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவி டும். நேரடியாக நீங்களே செல்போன் கடை க்குச்சென்று வாங் குவதுதான் சிறந்த வழி.

எக்சேன்ஜ் ஆஃபர்:

நீங்கள் உங்களுடைய பழைய போனை மாற்றி, புதிய போனை வாங்கு வதென முடிவெடுத்துவிட்டால், அங்குள்ள எங்சேன்ஜ் ஆஃபர் (Exchange Offer)பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். உங்களு டைய போனுக்கு அவர்கள் கொடுக்கும் விலை சரிதானா என நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். சில கடைகளில் மிக குறை ந்த விலையே பழைய போனுக்கு (Old cell phone) தருவார்கள். அப்படிப்பட்ட கடைக ளில் உங்கள் பழைய செல்போனுக்குரிய விலையை பேரம் பேசிப்பாருங்கள். பேரம் பேசுவதில் கூச்சமே கூடா து. ஏனென்றால் இது உங்களுடைய போன். இதனால் உங்களுக்கு ஒரு நூறுகள் கிடைத்தால் கூட இலாபம்தானே..

பட்டன்கள் முக்கியம்:

செல்போனில் உள்ள மற்ற கண்ணுக்குத் தெரியாத வசதிகளை விட அடிக்கடி உபயோகிக்கும் பட்டன்கள் முக்கியம். தரமான keypad உள்ள செல்போனை தெரிவு செய்வது நல்லது.

பேசுவது, கேட்பது ரொம்ப முக்கியம்:

செல்போன் வாங்கியவுடனேயே சிம்கார்டை போட்டு பேசிப்பாருங்கள். வீடியோ, கேமரா, டிஸ்பிளே (Video, camera, Display) என பல வசதிக ளையும் பார்ப்பதோடு இதையும் சோதனை செய்துகொள்ள வேண் டும். ஏனென்றால் பேசுவதற்கும், கேட்பதற்கும் செல்போன் முக்கிய மாக உங்களுக்குத் தேவை என்ப தை நினைவில் வையுங்கள். எதிர் முனை யிலிருந்து பேசுவது தெளி வாக, சப்தமாக கேட்கமுடிகிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்க ள்.

செல்போனை அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு:

செல்போன் அடிக்கடி பயன்படுத்துபவர்களெனில் மற்ற வசதிகளைவிட ஒலி வாங்கி (mike), ஸ்பீக்கர் (speaker) போன்றவைகள் சிறந்த்தாக உள்ள அம்பாசிடர் மாடல் (ambassador model phones) போன்களை வாங்குவது சிறந் தது. காரணம் அதிக சென்சிடிவ் டைப் போன்கள் அடிக்கடி எடுத்துப் பயன்படு த்தும்போது பழுதடையும் வாய்ப்புகள் அதிகம். அம்பாசிடர் வகை போன்கள் அதிகநாள் உழைக்க கூடியது.

காஸ்ட்லி போனா? கவனம் தேவை:

நீங்கள் வாங்கும் மொபைல் காஸ்ட்லி ஐட்டமாக (costly phone items) இருப்பின் கவனத்துடன் தேர்ந்தெடுங்கள். உங்களது விருப்பங்களை அந்த போன் அனைத்து வகையி லும் பூர்த்தி செய்கிறதா என்பதை ஒன் றுக்கு பத்துமுறை நன்றாக பார்த்து, முடிவெடுத்து பிறகு வாங் குங்கள். வாங்கிய காஸ்ட்லி போ னுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை யும் செய்து கொள்ளுங்கள். குறிப் பாக Mobile Insurance செய்து விடு ங்கள். மொபைல் இன்ஸ்சூரன்ஸ் பற்றித் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். இதனால் உங்களுடைய போன் திருடு போனாலோ அல்லது தீ, மழை, விபத்துப் போன்றவற்றால் சேதம் அடைந்தாலோ மீண்டும் அந் தப் போனுக்குரிய தொகையை பெறுவதற்கு பயன்படும்

சீனா மொபைல்கள் தவிருங்கள்:

கவர்ச்சிகரமானதாக உள்ள சீனா போன் மாட ல்களைத் (china phone models) தவிர்த்து விடுங்கள். அதிக கவர்ச்சி உள்ள அளவிற்கு அதில் ஆபத்தும் அதிகம். அதில் உள்ள ஆன் டெனா வழியாக ரேடியேஷன்கள் (high Radiation) அதிகமாக உள்வாங்கப்படும். இந்த அதிகளவு ரேடியேச ன்களால் உடலுக்கு கேடு உருவாகும். விலைகொடுத்து நோயை வாங்க வேண்டாமே..!

பேட்டரி லைப்:

மொபைல் போனுக்கு பேட்டரி லைப் (battery backup) ரொம்ப முக்கியம். அதிக நேரம் பேட்டரி நிலைத்திருக் கும் போன்களையே கேட்டு வாங்கு ங்கள். அடிக்கடி பேட்டரி தீருவதால் தேவையில்லாத “டென்சன்” உருவா கும். முக்கியமான நேரங்களில் “பேட்டரி லோ” காட்டி உங்களை எரி ச்சலைடய வைக்கும்.

மற்ற வசதிகள்:

மற்ற வசதிகளைப் பற்றி மொபைல் கடையிலேயே விலாவரியாக சொ ல்வார்கள். செல்போனுக்கு தேவையான முக்கியமான அடிப்படை வசதிகளைத் தவிர, மற்ற கவர்ச்சிகரமான விஷயங்க ளை முன்னிறுத்தி கடைக்காரர்கள் சொல் வார்கள். அது வியாபார யுக்தி. பணம் கொ டுத்து வாங்கும் நாம்தான் எச்சரிக்கையு டன் இருந்து நமக்குப் பிடித்தமான, பொரு த்தமான போனை வாங்க வேண்டும்.

– தங்கம்பழனி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: