Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் செய்வது எப்ப‍டி ?

”ஸ்க்ரீன் பிரின்ட்டிங் மூன்று வகைப்படும். குவாலிட்டி முறை, டைரக்ட் முறை, லாஸ் ரன்னிங் ஜாப் என்ற இந்த மூன்று முறைகளிலும், அதற்கு உபயோகி க்கும் ஸ்க்ரீன் வேறுபடும்.

குவாலிட்டி முறை, சில நூறு காப்பிகள் மற்றும் எடுக்கப் பயன்படும். துல்லியமாக இருக்கும். இதற்கு 5 ஸ்டார் ஸ்க்ரீன் உப யோகிக்க வேண் டும். இது சிவப்பு நிறத்தில் இருக்கும். இரண்டாவதான டைரக்ட்மு றையில், மஞ்சள்பை, ‘நான் ஓவன்’ பைக ளில் பிரின்ட்டிங்செய்யலாம். இதன் டைரக்ட்ஸ்க்ரீன், மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

மூன்றாவது முறையான ‘லாஸ் ரன்னி ங்’குக்கு, கிரோன் (Cron) லேயர் ஸ்க்ரீன் உபயோகிக்க வேண்டும். இது நீல நிற ஸ்க்ரீன் ஆகும். அதிக எண்ணிக்கையில் பிரின்ட் செய்ய இது உதவும். ஆக, எது உங்கள் வசதி க்கும் வரும் ஆர்டர்களு க்கும் ஏற்றது என்று யோசித்து, தேர்ந் தெடுத்து க் கொள்ளலாம்.

சரி, இனி ஸ்க்ரீன் பிரின்ட்டிங் யூனிட் அமைப்பது பற்றிப் பார்ப்போம். தரமான ஸ்க்ரீன் பிரின்ட்டிங் உபகரணங்களுக்கு பெரிய முதலீடு தே வையில்லை. வெறும் 6,000 ரூபாயிலே யே சாத்தியப்படுத்தலாம். தேவையான உபகரணங்கள். 2 அடி அகலம், 1 அடி நீளம், 3 அடி உயரம் உள்ள ‘எக்ஸ்போசி ஸ் பாக்ஸ்’. இதன் மேல்பாகம் கண்ணாடி யில் மூடப்பட்டு இருக்கும், உட்பாகத்தி ல் 4 டியூப் லைட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கும். நீங்களே தயார் செய்து கொள் ளலாம், அல்லது 3,000 ரூபாய் செலவில் வாங்கிக்கொள்ளலாம்.

அடுத்ததாக, எக்ஸ்போசிஸ் ரசாயனக் கலவை ஸ்க்ரீன், இங்க், சட்டம் முதலியவற்றை 1,500 – 2,000 ரூபாய் செலவில் வாங்கிக் கொள்ளலாம். இவை தவிர, ஒரு மர மேஜை. இப்போது உங்கள் ஸ்க்ரீன் பிரின்டிங் யூனிட் ரெடி.

இனி எப்படி ஸ்க்ரீன் தயார் செய்வது என பார்ப்போம். இதற்காக பெரிய பயிற்சி தேவை இல்லை. முயற்சித்தால் நீங்களாக வே கற்றுக் கொண்டு விட முடியும். ஆம், வீட்டில் இருந்தே செய்யும் அளவுக்கு மிக எளிமை யானதுதான் இதன் செய்முறை.

எந்தப் பொருள் மீது அச்சு தேவையோ, அத ற்கான ஸ்க்ரீனை தேர்வு செய்து எடுத்துக் கொள்ளுங்கள். பிரின்ட் செய்ய வேண்டிய தை கம்ப்யூட் டர் சென்டரில் வடிவமைத்து, அதை ஸ்க்ரீன் பிரின்ட்டிங் ஸ்க்ரீன் தயார் செய்யும் டிரேஸ் பேப்பரில் பிரின்ட் செய்து கொள்ளுங் கள் (சாதாரண பிரின்டர் மூலமாகவே இதை பிரின்ட் எடுக்க முடியும்). ஸ்க்ரீ ன் மீது எக்ஸ்போசிஸ் கெமிக்கலை தடவி, காய்ந்த உடன் டிரேஸ் பிரின்ட் செய்த மேட்டரை, ஸ்க்ரீனுடன் இணைத்து எக்ஸ்போசிஸ் பெ ட்டியின் கண்ணாடிமீது வைத்து, டியூப் லைட்டு களை எரியவிட்டு எக்ஸ்போஸ் செய் யவும். சிறிதுநேரத்தில் உங்கள் பிரின்ட்டிங் ஸ்க்ரீன் ரெடி!

இரண்டு அல்லது மூன்று நிறங்களிலும் பிரின்ட் செய்யலாம். தேவை யான சட்டத்தில் ஸ்க்ரீனை ஒட்டி, தேவையான கலர் இங்க்கை கொண் டு பை மீது ஸ்க்ரீன் பிரின்ட்டிங் செய்யலாம். ஒவ்வொரு பிரின்ட் டிங் முடிந்த உடன் காயவைத்த பின்னரே பைகளை ஒன்றாக அடு க்க வேண்டும்.

இதற்கான பொருட்கள் அனைத் தும் சென்னை, கோவை, திரு ச்சியில் கிடைக்கும். திருச்சியில் அல்லிமால் வீதியில் பல கடை கள் உள்ளன. ‘நான் ஓவன்’ பேக், ஃபைல் பிரின்ட்டிங் செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ள நீங்கள், அதற் கான ஸ்க்ரீனை வாங்கி உபயோகப்படுத்துங்கள். அதிக எண்ணிக்கையி ல் உற்பத்தியைக் குவிக்க, செமிஆட்டோ மேட்டிக் இயந்திரங்களும் உள்ளன. ஒரு லட்சம் முதல் பல லட்சம் வரை விலை இருக்கும். பயிற்சியைப் பொறுத்தவரை, ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் கட்ட ணப் பயிற்சியை திருச்சி, தஞ்சாவூரில் பெறலாம். மேலும், இந்தப் பொருட்க ளை விற்பனை செய்பவர்களே பயிற்சிக் கும் ஏற்பாடு செய்வார்கள்.

அடுத்ததாக, நேம் கீ செயின் பற்றி கேட்டிருந்தீர்கள். இதுவும் மிக எளி தான முறைதான். தேவையான பிளாஸ்டிக் கீ செயினை பல்வேறு மாட ல்களில் வாங்கிக் கொள்ளுங்கள். அந்த பிளாஸ்டிக் வடிவத்தின் மீது வாடிக்கையாளர்களின் பெயர் பதித் துக் கொடுக்கும் இந்த முறைக்கு, ஒரு ஹேண்ட் பிரஸ் (பெஞ்ச் டைப்) எந்திரம் சிறிய அளவில் கிடைக்கு ம். அதன் கைப்பிடியை மேலும் கீழு ம் தளர்த்தினால், எந்திரத்தின் மத்தி ய பகுதி மேலும் கீழும் வரும். இந்த அமைப்பில் கீழே ஒரு படிவ அச்சு ம், மேலே பெயர் சேர்த்து மாட்டும் ஒரு அச்சும் சேர்க்க வேண்டும். இந்த அச்சுகளை தனியாக ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள். இப்போ து உங்கள் பிளாஸ்டிக்கை கீழ் அச்சில் வைக்கவும். மேலே பெயர் பொருந்திய அச்சை 100 டிகிரி செல் ஷியஸுக்கு மேல் சூடேற்றுவதற் காக, சூடேற்றும் ஹீட்டரைப் பொ ருத்திக் கொள்ளுங்கள். பெயர் பொ ருத்திய டை மற்றும் பிளாஸ்டிக் கீ செயின் இடையில் கோல்ட் ஃபாயி லை வையுங்கள். இப்போது கோ ல்ட் ஃபாயில் மீது அழுத்தினால், கீ செயினில் உள்ள பிளாஸ்டிக்கில் வாடிக்கையாளரின் பெயர் படிந்துவிடும்.

இந்த எந்திரம், கோல்ட் ஃபாயில் அனை த்தும் சென்னை, திருச்சி, கோ வையில் எந்திரங்கள் விற்பனை செய்பவர்களிட ம் கிடைக்கும். இது போன்ற குறைந்த முதலீட்டில் செய்யும் தொழில்களுக்கு நல்ல வரு மானம் உள்ளது. அனைத்து வேலைகளையும் நாமே செய்வதால் லாபமும் அதிகம். எனவே, நல்ல தொழி ல் செய்ய முடிவெடுத்திருக்கும் உங்களு க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!”

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: