Wednesday, January 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘அஞ்சலி’ தற்கொலை – கதறி துடித்த‌ காதலன் – காவல்துறை தீவிர விசாரணை!

க‌டந்த 18 ஆம் தேதி அன்று மாலை 4 மணியளவில் சென்னை அண்ணா மேம் பாலத்தில் இளஞ்சிவப்பு நிற த்தில் டி-சர்ட்டு ம், கருப்பு நிற ஜீன் ஸ் பேண்ட்டும் அணிந் திருந்த இளம்பெண் ஒருவர் ஆவேசமாக வும், கண்ணீருடனும் செல்போனி ல் பேசிய படி அங்கும், இங்குமாக நடந்து கொண்டிரு ந்தார். திடீரெ ன்று அந்த பெண் மேம்பாலத் தின் கைப்பிடிசுவர்மீது ஏறி உட்கார்ந் தார். இதைப்பார்த்த அந்த வழியா க சென்றவர்கள் அவரை கீழே இற ங்கும்படி கூறினார்கள். ஆனால் அந்தப் பெண் பாலத்தின் 20 அடி உயரத்தில் இருந்து தலைகுப்புற கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அந்த பெண் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

அப்போது வேகமாக ஓடிவந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை கட்டி ப்பிடித்து கதறி அழுதார். பின்னர் உயிருக்கு போராடிய அப்பெண் ணை மீட்டு சிகிச்சைக்காக ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவம னையில் பெண்ணை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழி யிலேயே இறந்து விட்டதாக தெரி வித்தனர். இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசார ணை மேற்கொண்டனர். விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி ன.

அண்ணா மேம்பாலத்தில் இருந்து குதித்து இறந்தவர் பெயர் அஞ்சலி (வயது 26). மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த இவர் சென்னை கோட ம்பாக்கம் காமராஜர் கிழக்கு தெருவில் தனது 2 சகோதரர்கள்-சகோதரி களுடன் தங்கியிருந்து, அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் பணியாற்றி வந் தார். அஞ்சலி திருமணமாகி, விவா கரத்து பெற்றவர். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருப்பது தெரி யவந்தது. அஞ்சலியை ஆஸ்பத்தி ரிக்கு தூக்கிச்சென்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தார்கள். விசாரணையில் அவர் அஞ்சலியி ன் காதலர் என்று தெரியவந்தது. அவரது பெயர் ஆல்.புவனேஸ்வர் (வய து 30) ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.

இவர் சென்னை கொரட்டூர் கிருஷ்ணசாமி நாயுடு தெருவில் தங்கியிரு ந்து, அஞ்சலி வேலை பார்த்த அழகு நிலையம் உள்ள கட்டிடத்தில் செய ல்படும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அஞ்சலிக்கும், ஆல்.புவனேஸ்வருக் கும் இடையே காதல் மலர்ந்துள்ள து. இருவரும் தனிமையில் சந்தித்து தங் கள் காதலை வளர்த்தனர். இந் நிலை யில் ஆல்.புவனேஸ்வருக்கு அவரு டைய குடும்பத்தினர் பெண் பார்த்துள் ளனர். கடந்த 2 மாதமாக ஆல்.புவனேஸ்வர், அஞ்சலியிடம் பேசுவதை தவிர்த்து வந்தார்.

இதனால் மனமுடைந்த அஞ்சலி நேற்று மதியம் ஆல்.புவனேஸ்வரை சந்தித்து எதற்காக என்னை சந்திப்பதை தவிர்த்து வருகிறாய்? என்று கூறிவாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப் போது குடிபோதையில் இருந்த ஆல் .புவனேஸ்வர், அஞ்சலியை கடுமை யான வார்த்தைகளால் திட்டினார். இத னால் வாழ்கையில் விரக்தியடைந்த அஞ்சலி அண்ணா மேம்பாலத்திலிரு ந்து குதித்து தற்கொலை செய்து கொ ண்டது தெரிய வந்து ள்ளது.

அஞ்சலி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக செல்போனில் தான் தற்கொலை செய்யும் முடிவை ஆல்.புவனேஸ்வருக்கு தெரிவித் துள்ளார். இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர், அஞ்சலி அண் ணா மேம்பாலத்தில் இருந்து குதித்த பிறகே பதறியடித்து சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து,ஆல்.புவனேஸ்வரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள் ளனர். விசாரணையில் அஞ்சலி யை தற்கொலைக்கு தூண்டியது ஆல். புவனேஸ்வர் என்று நிரூ பிக்கப்பட்டால் அவர் மீது நடவ டிக்கை எடுக்க ப்படும் என்று போ லீசார் கூறினர். அஞ்சலி இறந்த தகவலறிந்த அவரது சகோதரர்-சகோதரிகள் ராயப்பேட்டை அர சு மருத்துவமனைக்கு வந்த னர். அங்கு அஞ்சலியின் பிணத்தை பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுத னர். பரபரப்பாக இயங்கக்கூடிய அண்ணா மேம்பாலத்திலிருந்து, மேற்கு வங்க பெண் அஞ்சலி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் நேற் று மாலை அண்ணா சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் கடுமை யாக பாதிக்கப்பட்டது.

(இணையம் ஒன்றில் படித்த‍ செய்தி )

Leave a Reply