Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் காப்பாற்றிய “ஜூனியர் விகடன்” – ஓர் உண்மைச் சம்பவம்

செப்டம்பர் 15, இரவு 10:30… ”சார், நாங்க தேனி மாவட்டத்தில இருந்து பேசுறோம். எங்க நண்பன் ஒருத்தனுக்கு நாளை காலை 7 மணிக்கு கல்யாணம். அவன்… நோயால் பாதிக்கப்பட்டிருக் கான். அந்த நோய் பாவம் அந்தப் பெண்ணுக்கும் பரவி விடும். எப்படியாவது கல்யாணத் தைத் தடுத்து நிறுத்துங்க சார்” – நமது (ஜூவியி ன்) செல்போ னைத் தொடர்பு கொண்ட ஒருவர் இவ்வாறு வேண்டுகோள் வைக்க திடுக்கிட்டுப்போனோம்.

இரவு 10:45

போன்செய்த நபரை நேரில்சந்தித்தோம். ”நானும் சரவணனும் (ஜூனியர் விகடனால் பெயர் மாற்றப்பட்டுள்ளது) சின்ன வயசுல இருந்தே நண்பர்கள். அவன் அந்த மாதிரி பெண்களோட தொடர்பு வெச்சிருந்தான். அதனால அவன் அந்த வியாதியால் பாதிக்கப்பட்டான். ஆறு மாத காலமா யாருக்கும் தெரியாம சிகிச்சை எடுத்து வந்தான். அருகில் இருந்து தே வையான உதவிகளை செஞ்சோம். உடம்பு தேறியது ம், திருமணம் செய்து கொ ள்ள ப்போவதாக கூறினான். ‘நீ கல்யாணம் செஞ்சுகிட்டா, உன் மனைவி, பிறக்கும் குழந்தைகள் என எல்லோரு க்கும் அந்த நோய் பாதிப்பு வரும்’ என்று நாங்கள் அறிவுறுத்தினோம். நாங்கள் எவ்வளவோ தடுத்தும், தன்னோட முடி வில் உறுதியா இருந்தான். எங்களுக்குத் தெரியாமல் ஒரு பெண் ணைப் பார்த்து கல்யாண ஏற்பாடுகளை செஞ்சான். விஷயம் எங்க ளுக்குத் தெரிஞ்ச உடனே, இந்தத் தகவ லைப் பொண்ணு வீட்டுக்குத் தெரியவெச்சோம். ஆனா அவங்க, யாரோ வதந்தியை கிளப்புறாங்க ன்னு அலட்சியப்படுத்திட் டாங்க. 20 நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சித்தலைவருக்கும், எஸ்.பி-க் கும் புகார் அனுப்பினோம். அவர்க ள் நடவடிக்கை எடுப்பா ங்கன்னு நம்பிக்கையோட இருந்தோம். நாளாக நாளாக அவங்க மீது இருந்த நம்பிக்கை தளர்ந்ததுதான் மிச்சம். எந்த நடவடிக்கையும் இல்லை. நான் உங்களிடம் பேசிட்டு இருக் கும் இந்நேரத்துல ரிசப்ஷன் நடந் துகிட்டு இருக்குது. விடிஞ்சாக் கல்யா ணம். இன்னும் முழுசா ஒரு நாள்கூட இல்லை. அதனால் தான் உங்களுக்கு போன்செஞ் சோம்” என்றார் பதற்றத்துடன்.

இரவு 11:00

அவர் கொடுத்த ஆதாரங்கள் சரவ ணனுக்கு அந்தப் பாதிப்பு இருப்பதை உறுதிசெய்தது. உடனடியாக தேனி மாவட்ட கலெக்டர் பழனிச்சாமியைத் தொடர்புகொண்டு தக வலைத்தெரிவித்தோம். ”பெண் மேஜர் என்பதால், இதில் நாம் என்ன செய்ய முடியும்?” என்று நம்மிடம் எதிர் கேள்வி கேட்டவர், ”சரி, நான் கவனிக்கிறேன்” என்று இணைப்பைத் துண்டித்தார்!

இரவு 11:20

தேனி மாவட்ட எஸ்.பி-யான பிரவீன்குமார் அபினபுவைத் தொடர்பு கொண்டோம். நடந்தவற்றை அவரிடம் விளக்கினோம். சம்பந்தப்ப ட்ட ஏரியா இன்ஸ்பெக்டரை விசாரிக்கச் சொல்கிறேன் என அவரும் இணைப்பைத் துண்டித்தார். நம் அருகில் இருந்த சரவணனின் நண் பர்கள், ”நாங்கள் ஏற்கெனவே இவர்கள் இருவரிடமும் புகார் கொடு த்துவிட்டோம். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் கள்” என்று அவநம்பிக்கையுடன் சொன்னார்கள்.

இரவு 11:45

அரசு அதிகாரிகளும் காவல் துறையும் கண்டும் காணாமல் உறங்கு ம் நேரத்தில், காலையில் நடக்கப்போகும் திருமணத்தை நினைக்கு ம் போது நமக்கு உறக்கம் வரவில்லை. செய்வதறியாது திகைத்த நமக்கு சட்டென நமக்கு தர்மபுரி மாவட்ட எஸ்.பி. ஆஸ்ரா கர்க் நினைவுக்கு வந்தார். உடனடியாக அவருடைய எண்ணைத் தேடி னோம்.

நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு நடந்தவற்றை ஆஸ்ரா கர்க்கி டம் சொன்னோம். நடக்க இருக்கும் விபரீதத்தை உணர்ந்த அவர், சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டார். அதற் குப் பிறகு அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், மணமகனின் வீட்டுக்குச் சென்று உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.

நள்ளிரவு 1:35

காவல் துறையின் விசாரணை வளையத்துக்குள் வந்தார் மாப்பிள் ளை சரவணன். ”என் மீதுள்ள காழ்ப்பு உணர்ச்சியோடு, என் கல்யா ணத்தைத் தடுத்து நிறுத்தும் எண்ணத்தில் எனக்கு எதிராக யாரோ வதந்திகளைப் பரப்பி உள்ளனர். இது உண்மை இல்லை” என்று காவல் துறையினரிடம் மழுப்பினார்.

நமக்கு போன் செய்த எஸ்.பி. ஆஸ்ரா கர்க், ”அந்த மாப்பிள்ளை தனக்கு அந்தப் பாதிப்பு இல்லை என மறுக்கிறார். அதை நிரூபிக்க என்னிடம் ஆதாரங்கள் எதுவும் இல்லை. நான் வேறு ஒரு மாவட்ட அதிகாரியாக இருக்கிறேன். எதற்கும் கடைசி முயற்சியாக அவரு க்கு நேர்மையான மருத்துவ அதிகாரியைக் கொண்டு உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்கிறேன்” என்றார்.

அதிகாலை 3:00

ஆஸ்ரா கர்க்கிடம் இருந்து போன். ”நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை. அவருக்கு அந்தப் பாதிப்பு இருப்பது மருத்துவப் பரிசோத னையில் அம்பலமாகியுள்ளது. தேனி டி.எஸ்.பி. அய்யனாரை அனு ப்பிவைத்தேன். அவரின் முன்னிலையில்தான் இந்தப் பரிசோதனை நடந்தது. பரிசோதனையில் மாப்பிள்ளைக்கு நோய் இருப்பது உறு தியானதும், பையனுக்கும் பொண்ணுக்கும் கவுன்சிலிங் கொடுத்து கல்யாணத்தை நிறுத்தியுள்ளோம்” என்றார்.

அதிகாலை 6:00

ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் காப்பாற்றிய மகிழ்ச்சியில் நம க்கு நன்றியைத் தெரிவித்தார்கள் சரவணனின் நண்பர்கள். உண் மையில் அவர்கள் நன்றி சொல்ல வேண்டியது நேர்மையான அதி காரி ஆஸ்ரா கர்க்க்குத்தான். ஒரு நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண் ணின் வாழ்க்கைக்கு வெளிச்சம் கிடைத்தது!

– சண்.சரவணகுமார், முகநூல்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: