Monday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கீதா உபதேசம் – என் உடல் முழுதும் நடுங்குகிறது. மயிர்க்கூச்செறிகிறது! – இது அர்ச்சுனின் வாசகம்

திருதராஷ்டிரர் – புண்ணிய யாத்திரைத் தலமான குருட்ஷேத்திரத்தி ல் போர் புரிய விருப்பம் கொண்டு ஒன்று கூடிய பிறகு என்மகன்களும், பாண்டு வின் புதல்வரும் என்ன செய்தனர் சஞ்ஜ யனே?

சஞ்ஜயன் – மன்னனே, பாண்டுவின் புத ல்வரால் அணிவகுக்கப்பட்ட படையை மேற்பார்வையிட்ட பிறகு, மன்னன் துரி யோதனன் தன் ஆசிரியரை அணுகி, ஆசி ரியரே, துருபதகுமாரனான உங்கள் சீட னால் மிகத் திறமையாக அணிவகுக்கப் பட்ட, பாண்டுபுத்திரரின் சிறந்த சேனை யைப் பாருங்கள்.
   
இதோ இந்த சேனையில் பீமனுக்கும் அர் ஜுனனுக்கும் சமமான வீரமிகு வில்லாளிகள் பலரும் இருக்கின்ற னர். யுயுதானன், விராடன், துருபதன் போன்ற சிறந்த மகாரதர்களும் இருக்கின்றனர். த்ருஷ்ட கேது, சேகிதானன், காசி ராஜன், புருஜித் குந்திபோஜன், ஷைப்யன் போன்ற சிறந்த, பலமிக்க போர்நாயகர்களும் இருக்கின்றனர்.

 வீரனான யுதாமன்யு, பலமிக்க உத்த மௌஜன், மற்றும் சுபத்ரையின் புதல்வ ன், திரௌபதியின் குமாரர்கள் இவர்க ளும் இருக்கின்றனர். இவர்கள் எல்லோ ருமே சிறந்த ரதப்போர் வீரர்கள். அந்த ணரில் சிற ந்தவரே, எனது சேனையை நடத்தும் தகுதி வாய்ந்த தலைவர்களை நீர் அறியும்படி கூறுகின்றேன். எப்போ தும் போரில் வெற்றி காண்பவரான தாங்களும், பீஷ்மர், கர்ணன், கிருபர், அஸ்வத்தாமன், விகர் ணன், பரிசிரவஸ் என்ற சோமதத்தனின் குமாரன் போன்ற பெரும் வீரரும் இருக்கின்றீர்கள்.

எனக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய எண்ணற்ற வீரர்கள் பிறரு ம் உள்ளனர். அவர்கள் எல்லோருமே பலவிதமான ஆயுதங்களை உடையவர்களாயும், போர்க் கலை யில் மிகத் தேர்ந்தவர்களாயுமிரு க்கின்றனர். பாட்டனார் பீஷ்மரால் பாதுகாக்கப்பட்ட நமது பலம் கண க்கிலடங்காதது. ஆனால் பீமனால் கவனமாய்ப் பாதுகாக்கப்பட்ட பாண்டவ சேனையோ அளவிடக் கூடியதாக இருக்கின்றது.

படை அணிவகுப்பின் முக்கியமான போர்முனை நிலைகளிலிருந்து கொண்டு நீங்களெல்லோரும் பாட் டனார் பீஷ்மருக்குப் பாதுகாப் புக் கொடுப்பீர்களாக. பிறகு குரு வம்சத்தின் பெருவீர முதியவரும், போர் வீரரின் பாட்டனாருமான பீஷ்மர், தனது சங்கை சிங்க கர்ஜ னைபோன்று உரக்க ஊதி, துரி யோதனனுக்கு மகிழ்வைக் கொடுத்தார். அதன்பின் சங்குகள், குழல் கள், முரசுகள், பறைகள், கொம்பு கள், இவை ஒரே சமயத்தில் முழக்கப்பட, அவ்வதிர்வு கிளர்ச்சியை எழுப்புவதாக இருந்தது.
 
மறுதரப்பில், வெண்புரவிகள் பூட்டிய மிகச் சிறந்த ரதத்தில் அமர்ந் திருந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுன னும் தங்கள் தெய்வீகமான சங்குக ளை முழக்கினர். பிறகு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பாஞ்ச் சஜன்யத்தை முழ க்கினார். அர்ஜுனன் தனது தேவதத் தத்தையும், பெருந்தீனிக்காரனும், வீர சாகசங்களைப் பரிபவனுமான பீமன் பௌண்ட்ரமெனும் பெரும் சங்கையும் முழக்கினர்.

குந்தியின் புதல்வனான மன்னன் யுதிஷ்டிரன் அநந்தவிஜயமெனும் சங்கையும், நகுலனும் ஸஹாதேவனும் ஸ{கோஷம், மணிபுஷ்பக மெனும் சங்குகளையும் ஒலித்தனர். பெரும் வில்லாளியான காசி ராஜன், பெரும் போர்வீரனான சிகண்டி, த்ருஷ்டத்யும்னன், விராடன், வெற்றி கொள்ளப்படாதவனான ஸாத்ய கி, துருபதன், திரௌபதியின் புதல்வர்கள் மற்றும் பெரும் பலம் பொருந்திய, சுபத்ரை மகனான அபிமன்யு போன்றவர்கள் தத்தம் சங்குகளை முழங்கினர்.

சங்கொலிகளின் பல்வேறு முழக்கங்கள் பேரொலியாக எழுந்து பூமியும் வானமும் நடுங்குமாறு எதிரொலிக்க திருதராஷ்டி ரரின் மகன்களுடைய இதயங்கள் சிதற லாயின. மன்னனே, அந்நேரத்தில், ஹனு மான் கொடியை உடைய தேரிலமர்ந்திரு ந்த பாண்டு மகன், அர்ஜுனன், திருதராஷ் டிரரின் மகன்களை நோக்கி அம்பெய்யத் தயாராக வில்லை ஏந்தி, ரிஷிகேசனான ஸ்ரீ கிருஷ்ணரை நோக்கிப் பின்வருமாறு கூறலானான்.

அர்ஜுனன்: அழிவற்றவரே! போர்புரியும் ஆவலுடையவராய் இங்கு அணிவகுத்துள்ளவரில், நான் எவரோடு இந்தப் பெரும் போர் முயற் சியில் பொருத வேண்டும் என்று பார்க்கும்படியாக, எனது தேரைச் செலுத்தி இரு படையினருக்கு நடுவே நிறுத்துவீராக.
   
திருதராஷ்டிரனின் கெடுமதியுடை ய மகன் துரியோதனனை மகிழ்வி க்கும் விருப்பத்தோடு இங்கு போர் புரிய வந்திருப்பவர்களை நான் பார்க்கட்டும். அதற்கு ஸஞ்ஜயன், பரத குலத்தவனே, அர்ஜுனனால் இவ்வாறு கூறப்பட்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவனது மிகச் சிறந்த தேரை இருதரப்புச் சேனைகளின் நடுவே செலுத்தி நிறுத்தினார்.   

பீஷ்மர், துரோணர், மற்றும் பல உலகத் தலைவர்களின் முன்னிலை யில், ~~பார்த்தா, இங்கு கூடியிருக்கும் குரு வம்சத்தினரைப் பார்|| என்று ஹ்ருஷீகேசர் கூறினார்.
 
இருதரப்புச் சேனைகளிடையே அங்கு தந்தைமாரும், பாட்டனா ர்களும், ஆசிரியர்களும், மாமாக் களும், சகோதரர்களும், மகன்க ளும், பேரன்களும், நண்பர்களு ம், மாமனார்களும் மற்றும் பல சன்மை விரும்பிகளையும் போர் க்களத்தில் கூடியிருக்கக் கண் டான் அர்ஜு னன். குந்திமகனான அர்ஜுனன் அந்த நண்பர்களையு ம், உறவினர்களையும் கண்டபின், பரிவால் நிறைந்து இவ்வாறு கூறலானான். அதற்கு அர்ஜுனன் என் அன்புக்குரிய கிருஷ்ணா, போரிடும் உணர்வோடு என்முன் கூடியுள்ள எனது நண்பரையும், உறவினரையும் கண்டு என் உடல் நடுங்கி வாய் உலர்வதாக உணர் கிறேன்.
 
என் உடல் முழுதும் நடுங்குகின்றது. மயிர்க்கூச்செறிகின்றது!”. என் வில்லான காண்டீபம் கைகளிலிருந்து நழுவுகின்றது. என் சருமம் எரிகின்றதே. இனியும் இங்கு என்னால் நிற்க முடியாது. என் மனம் குழம்புகின்றது. நான் என் னையே மறக்கின்றேன். கேசியை அழித்த வரே, கெட்ட சகுணங்களையே நான் காண் கின்றேன்.
 
சொந்த உறவினரை இப்போரில் கொல்வ தால் என்ன நன்மை வருமென்பதை என் னால் காணமுடியவில்லை. இதிலே பெற க்கூடிய வெற்றியையோ, அரசையோ, இன்பத்தையோ நான் விரும்பவில்லை. அரசுகளும், இன்பமும், ஏன் வாழவே கூட, யாருக்காய் அவை களை நாம் விரு ம்புவோமோ அவர்களே இக்களத்தில் போர் புரியத் தயாராயிருக்க, என்ன பலன் தரப்போகின்றன? மதுசூதனரே, ஆசிரியரும், தந்தைய ரும், பிள்ளைகளும், பாட்டனார்களும், மாமன்களும், மாமனார்க ளும், பேரன்களும், மைத்துனரும், பிற உறவினரும் தங்கள் வாழ் வையும், செல்வத்தையும் இழக்கத் தயாராக என்முன் நின்றிருக்க, நான் வாழ்வேனாயினும் இவர்களைக் கொல்ல நான் ஏன் விரு ம்பவேண்டும்? இந்த பூமி ஒருபுறமிருக்கட்டும், மூவுலகம் கிடைப்ப தாயினும், உயிர்களையெல்லாம் காப்பவரே, நான் இவர்களுடன் போர் செய்யத் தயாராக இல்லை.

இவ்வாறான ஆக்ரமிப்பாள ரைக் கொல்வதால் நமக்குப் பாபமே வந்து சேரும். என வே திருதராஷ்டிரர் மக்க ளையும், நண்பரையும் கொ ல்லுதல் நமக்குச் சரியானத ல்ல. திருமகளின் கணவரே, நமது சொந்த உறவினரைக் கொலை செய்துவிட்டு நாம் எவ்வாறு மகிழ்ச்சி அடைய முடியும்? இதனால் நமக்கென்ன லாபம்?

ஜனார்த்தனரே! பேராசையால் உந்தப்பட்டு, நண்பருடன் கலகம் செ ய்வதிலும், குலநாசம் செய்வதிலும் இந்த மனிதர் பாவமெதையும் காணவில்லையாயினும், குற்றமென்றறிந்த நாமேன் இச்செயல்க ளில் ஈடுபட வேண்டும்? குலம் அழிவடைவதால் நித்தியமான குலவ றம் கெடுகின்றது. இதனால் வமசத்தில் மீந்திருப்பவர் அறமற்ற பழ க்கங்களில் ஈடுபடுவர். குலத்தில் அறமின் மை தலையெடுக்கும் போது, கிருஷ்ணரே, குடும்பப் பெண்கள் களங்கப்பட, பெண் மையின் சீரழிவால், விருஷ்ணி குலத்தவ ரே, தேவையற்ற சந்ததி உண்டாகிறது. தேவையற்ற ஜனத்தொகை பெருகுவதால் குடும்பத்திற்கும் குலப்பண்பாட்டை அழி ப்போருக்கும் நரகநிலை உருவாக்கப்படு கின்றது. அதுபோன்ற சோரம்Nபுhன குலங் களில் முன்னோருக்கு உணவும் நீரும் அளிக்கும் கருமாதிகள் நடப்பதில்லை.

குடும்பப் பண்பாட்டை அழிப்பவரின் தீய செயல்களால், எல்லாக் குலவறங்களும், குடும்ப நலச் செயல்களு ம் அழிவுறுகின்றன. மக்க ளைக் காக்கும் கிருஷ்ணரே, குலப்பண் பாட்டைக் கெடுப்பவர் நரக த்தில் சதா வாழ்வதாக சீடப் பரம்பரை வாயிலாகக் கேட்டுள்ளேன்.

ஐயகோ! அரச போகத்தை அனுபவிப்பதற்கான ஆசையால் உந்தப் பட்டுப் பெரும் பாவங்களைப் புரிய நாம் தயாராவது என்ன விந்தை?

திருதராஷ்டிரர் மக்களுடன் போர்புரிவதை விட, ஆயதமின்றியும், எதிர்ப்புக் காட்டாமலும் அவர்களால் நான் கொல்ல்ப்படுவதையே சிறந்ததாகக் கருதுவேன். ஸஞ்ஜயன் கூறினான்: அர்ஜுனன் போர்க் களத்தில் இவ்வாறு மொழிந்த பின் வில்லையும் அம்புகளையும் ஒரு புறம் எறிந்து விட்டு, மனம் கவலையால் நிறைய, தேரில் அமர் ந்து விட்டான்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவல்ல‍!

Leave a Reply