Friday, January 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள்

பெரும்பாலான மக்களை பரவலாக அவதிக்குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதார ணமான நிலைக்கு உயரச் செய்யும். வாழ் நாள் முழுவதும் தொடரக்கூடிய இந்நோய் இதர பல உடற்கேடுகளையும் உண்டாக்க க் கூடியதாகும்.

சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடி ய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடி த்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள் வது மட்டுமே. அவ்வாறு கண்டுபிடிக்க வேண்டுமெனில், உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனித்தல் மிகவும் அவசியம். ஏனெனில் இத்தகைய மாற்றங்களே சர்க்கரை நோய்க்கான அறி குறிகள் ஆகும்.

இவ்வாறு உடலில் சர்க்கரை நோய்க் கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகி றதா என்றுகூர்ந்து கவனித்து வருவத ன்மூலம் சர்க்கரை நோய் இருப்பதை சீக்கிரமே அறிந்து கொள்ளலாம். அவ் வாறு அறிந்து கொண்டபின், தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் இந்நோய் உண்டாக்கக்கூடிய விபரீத விளைவுகளை தவிர்க் கலாம். இப்போது சர்க்கரை நோயின் பல்வேறு அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள் வோமா!!!

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு அடிக்கடி உங்க ளுக்கு ஏற்படுமாயின், உங்களுக்கு சர்க் கரை நோய் இருக்கக்கூடும். சர்க்கரை அளவுகளில் ஏற்படக்கூடிய உயர்வு, இரத்த ஓட்டத்தில் காணப்படும் திரவங் களின் அளவை உயர்த்தக்கூடியதான ஓஸ் மொலாலிட்டியை அதிகரிக்கும். இது சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்து, அதிக அளவிலான சிறுநீரை உருவாக்கும் படி செய்யும். இதனாலே யே சர்க்கரை நோயாளிக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ண ம் தலை தூக்குகிறது.

அதீத தாகம்

சர்க்கரை நோயாளிக்கு எப்போதும் அடங்காத தாகம் இருப்பது போ ன்ற உணர்வு எழும். உடலில் உள்ள திரவங்கள் அனைத்தும் அடிக்கடி வெளியேற்றப்படுவதி னால், அந்த நீர் இழப்பை ஈடுகட்ட வேண்டி யது அவசியமாகிறது. பொதுவாக, அதீத தாகம் மற் றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகிய இரண்டு அவஸ்தைகளும் இருப்பின், அது சர்க்கரை வியாதி இருப்பதற்கான உறுதியான அறிகுறிக ளாகக் கரு தப்படுகின்றன.

மங்கலான கண் பார்வை

அதிக அளவிலான குளுக்கோஸ், சர்க்கரை நோயாளியின் இரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து திரவத்தை வெளியேற்றுவதி னால், அது அவரின் கண் பார் வையை மங்கச் செய்யும். மே லும் இது கண் களின் கூர்ந்து நோக்கும் திறனை பாதிக்கும். சர்க்கரை வியாதிக்கு சரியா ன மருத்துவ கவனிப்பு இல்லா மல் போகும் பட்சத்தில், அது கண் பார்வை குறைவை உண் டாக்கும். ஏன் சில சமயங்களில் கண் பார்வையைகூட பறித்து விடும்.

எடை குறைதல்

இது டைப்-1 சர்க்கரை நோயின் மிகப் பொதுவா ன அறிகுறியாகும். உயிரணுக்களுக்கு தேவை யான குளுக்கோஸ் கிடைக்காததனால், உடல் தனக்கு தேவையான சக்தியை கொழுப்பு நிறை ந்த திசுக்களை உடைத்து எடுத்துக் கொள்ள தலைப்படும். இதனால் தான் எடை குறைவு ஏற் படுகிறது.

சோர்வு

சர்க்கரை நோயாளியின் உடல், சர்க்கரையை உபயோகித்து தனக் குத் தேவைப்படும் சக்தியைப் பெற்றுக்கொள்ள இயலாது. இதனால், அந்நோயாளி உடற் சோர்வு, அசதி போன்ற தொல் லைகளுக்கு ஆளாக நேரிடும். உயிரணுக்களால், இரத்த ஓட்ட த்தில் இருக்கக் கூடிய குளுக் கோஸை, இன்சுலினின் உதவி யின்றி உறிஞ்ச இயலாது. அத னால் அவற்றின் ஆற்றல் குறைந்து காணப்படும்.

கைகள் மரத்துப் போதல்

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரி ப்பதனால், நரம்பு மண்ட லம் குறிப்பிடத்தக்க அளவிலான பாதிப்புக்கு ஆளாகும். சர்க்க ரை நோய் நீண்ட காலம் வரையில் கண்டு பிடிக்கப்படாமலே இருக்கும் பட்சத்தில், அது கைகளில் அடிக்கடி சிலிர்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் அல்லது உணர்வு கள் ஏதுமின்றி மரத்துப் போகச் செய்யும்.

சிராய்ப்புகள், வெட்டுக்காயங்கள் போன்றவை மெதுவாகவே குண மாகும்

து சர்க்கரை நோய்க்கான மிகப் பொது வான அறிகுறிகளுள் ஒன்றாகும். இரத்த த்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிக ரிக்கும் பட்சத்தில், உடலின் நோய் எதிர் ப்பு மையமானது, சீராக இயங்கும் ஆற்ற லை இழந்துவிடும். திசுக்களில் காணப் படும் சீரற்ற நீர் சமன்பாடு, வெட்டுக் காய ங்கள் மற்றும் புண்கள் குணமடைவதை தாமதப்படுத்தும்.

சரும வறட்சி

புறநரம்பு மண்டல கோளாறு காரணமா க, வியர்வை சுரப்பியின் சுழற்சி மற்றும் இயக் கம் பாதிக்கப்படும். இதன் காரணமாக மேற் புற சருமம் வறட்சியடைந்து, அரிப்பு ஏற்படும்.

எப்போதும் பசி இருப்பது போல் தோன்றும்

நீங்கள் எவ்வித கடின உடற்பயிற்சியை மேற் கொள்ளாத போதும் அல்லது நிறைவாக சாப்பிட்டிரு ந்தாலும் கூட, எப்போதும் பசிப்பது போ ன்ற உணர்வு எழுந்தால், அது சர்க்கரை நோயின் அறிகுறிதான். ஏனெனில் சர்க்க ரை நோய், குளுக்கோஸை உயிரணுக்க ளுக்குள் செல்ல விடாமல் தடுக்கும். இந் நிலையில் நீங்கள் உண்ணும் உணவை ஆக்க சக்தியாக மாற்றும் திறன் உங்கள் உடலுக்கு இல்லாமல் போய்விடும். அதனால் உங்கள் உயிரணு க்கள் பட்டினி கிடக்க வேண்டிய நிலை உருவாகும்.

வீக்கமடைந்த ஈறுகள்

கிருமிகளில் பெரும்பாலானவை வாய் மூலமாகவே உடலுக்குள் நுழைகின்றன. சர்க்கரை நோய் இத்தகைய கிருமிகளை எதிர்த்து ப் போராடும் ஆற்றலை குறைக் கும். இந்நோய், வலியும் வீக்கமும் மிகுந்த ஈறுகள், தாடை எலும்புக ளின் தேய்மானம் மற்றும் நாள டைவில் பற்சிதைவு போன்ற வாய் தொடர்பான ஏராளமான பிரச்ச னைகளை உண்டாக்கும். சில சமயம் வாய்க்குள் புண்களையும் உண்டாக்கும். சர்க்கரை வியாதி வரும் முன்னரே ஒரு வருக்கு பல் தொடர்பான கோளாறுகள் இருந்தால், அத்தகைய பிரச்சனைகள் சர்க்கரை வியாதி வந்த பின் மேலும் பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த க்கூடும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவல்ல‍!

One Comment

  • venki

    சர்க்கரை ஒரு நோயே அல்ல. மற்றும் உணவு, பழக்க வழக்கத்தில் மாற்றம், மூலிகைகள் மூலம் சர்க்கரை குறைபாட்டை முழுமையாக சரி செய்ய முடியும்.

Leave a Reply