Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“நான், நயன்தாரா ஆக முடியாது, நயன்தாரா, நானாக முடியாது!” – நடிகை நஸ்ரியா

நேரம் படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறி முகமான நஸ்ரியா அந்த ஒரே படத்தில் பிரபல மாகி முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந் து நடித்து வருகிறார். அதில் திரைக்கு வரவுள்ள‍ ராஜாராணி திரை ப்படம் இது தவிர நையாண்டி, திருமணம் எனும் நிக்காஹ் மற்றும் நீ நல்லா வரு வடா போன்ற படங்கள் இவர் கைவசம் உள்ளன. இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த நஸ்ரியா ஊடக ம் ஒன்றிற்கு அளித்த பேட்டி இதோ,

கேள்வி: சினிமா நூற்றாண்டையொட்டி நடைபெ ற்ற மலையாள பட கலைநிகழ்ச்சியில், மிக அருமையாக நடனம் ஆடி னீர்களே, முறைப்படி நடனம் கற்று இருக்கிறீர்களா?

பதில்: சிறுமியாக இருக்கும்போது நான் மூன்று வருட ங்கள் முறைப்படி பரதநாட்டியம் கற்றுக்கொண்டேன். அந்த அனுபவம்தான் என்னை நன்றாக ஆட வைக்கி றது.

கேள்வி: நடிகர் ஜெய்க்கும், உங்களுக்கும் இடையே காதல் இருந்து வருவதாக பரவலாக பேசப்படுகிறதே, அது உண்மையா?

பதில்: எனக்கும், ஜெய்க்கும் இடையே காதல் கிடை யாது. ஜெய், ஒரு நல்ல நண்பர். படப்பிடிப்பின்போது அவரிடம் பேசுவ துடன் சரி. ஏதாவது நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டாலும் அவருடன் பேசிக்கொள்கிறேன். எங்களுக்கு இடையே உள்ள உறவு, அவ்வளவுதா ன்.

கேள்வி: ராஜாராணி படத்தில் உங்களுக்கு என்ன வேடம்?

பதில்: கீர்த்தனா என்ற அலுவலகம் செல்லும் பெண்ணாக வருகிறேன்.

கேள்வி: நீங்க நடித்து அடுத்து திரைக்கு வரும் தமிழ் படம் எது?

பதில்: ராஜாராணி’யை அடுத்து நய்யாண்டி படம் வெளிவரும். இந்த படத்தை அடுத்து ஜீவா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறேன்.

கேள்வி: படித்துக்கொண்டே நடிக்கிறீர்களாமே, இப்போது என்ன படிக்கிறார்கள், படித்துக் கொண் டே நடிப்பது சிரமம் இல்லையா?

பதில்: பி.காம். முதல் ஆண்டு படிக்கிறேன். படித் துக்கொண்டே நடிப்பது முதலில் கஷ்டமாகத்தா ன் இருந்தது. பிறகு பழகி விட்டது.

கேள்வி: உங்க குடும்பத்தை பற்றி சொல்ல முடி யுமா?

பதில்: எங்க சொந்த ஊர் திருவனந்தபுரம். அப்பா நாசர், வியாபாரம் செய்கிறார். அம்மா பீனா வீட்டோடு இருந்து குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார். எனக்கு நவீன் என்ற ஒரே ஒரு தம்பி மட்டும் இருக்கிறான்.

கேள்வி: நேரம் என்ற ஒரே படத்தில் பிரபலமாகி விட்டீர்களே?

பதில்: அது என் அதிர்ஷ்டம். எல்லோருக்கும் இது அமையாது. எனக்கு அமைந்து இருக்கிறது. அதை நினைத்து சந்தோஷ ப்படுகிறேன்.

கேள்வி:நயன்தாரா இடத்தை நீங்க பிடித்து விடுவீர்கள் என்று பேசப்படுகிறதே அதுபற்றி உங்க கருத்து என்ன ?

பதில்: யாருடைய இடத்தையும் யாரும் பிடிக்க முடியாது. நான், நயன் தாரா ஆக முடியாது. நய ன்தாரா நானாக முடியாது. ஒரு சீனியர் நடிகை என்ற முறையில் அவர்மீது எப்போதுமே மரியா தை  வைத்து இருக்கிறேன் என்று கூலாக பதிலளி க்கிறார் நஸ்ரியா.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: