Wednesday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“நாங்கள் இந்தியாவிடம் தோற்கவில்லை. சச்சின் டெண்டுல்கரிடம்தான் தோல்வி அடைந்திருக்கிறோம்!”- ஆஸ்திரேலியா

நாங்கள் இந்தியாவுக்கு எதிராகத் தோற்கவில்லை. சச்சின் டெண்டுல்கர் என்னும் தனி மனிதருக்கு எதிராகத் தோல்வி அடைந்திருக்கிறோம்!”- 1998-ம் ஆண்டு சென்னை டெஸ்ட்டில் சச்சினின் அதிரடி சதத்தால் ஆஸ் திரேலியா தோல்வி அடைந்தபோது, அந்த அணியின் கேப்டன் மார்க் டெய்லர் சொன்ன வார்த்தைகள் இவை. இந்திய கிரிக்கெட்டில் ‘சச்சின் சகாப்தம்’ எத்தனை அழுத்தமானது என்பதை உணர்த்தும் ஓர் உதாரண ம் இது!
 
இந்த ஆண்டோடு கிரிக்கெட்டில் 24 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக் கிறார் சச்சின். ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விரை வில் விடைபெற இருக்கிறார். தென் ஆப்ரிக்கா அல்லது மேற்கு இந்தியத் தீவுகள் உடனான டெஸ்ட் போட்டிகளி ல் 200-வது போட்டியோடு அவர் விடை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட்டில் அறிமுகமான காலம் முத ல் சமீப டி-20 டிரெண்ட் வரை தனது தகுதி, திறமைகளை அப்டேட் செய்து வந்த சச்சினிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன.
இறுதி வரை போராடு!
 
16 வயதில் பொடியனாக பாகிஸ்தான் மைதானத்துக்குள் நுழைந்தபோ து, முதல் போட்டியில் 15 ரன்கள் அடித்த சச்சின், வக்கார் யூனிஸ் பந்தி ல் க்ளீன் போல்ட். ”நான் என்னென்ன திட்டங்களோடு மைதானத்துக்குள் நுழைந்தேனோ, அது எதுவுமே நிறை வேறவில்லை. ‘கிரிக்கெட் விளை யாட நான் தகுதியானவன் அல்ல’ என்று அப்போது தோன்றியது. அந்த எண்ணமே என்னை மிகவும் சோர்வுறச் செய்தது. ஆனால், இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சாதிப்பேன் என்ற பாசிட்டிவ் சிந்தனை யால் அச்சோர்வை விரட்டினேன். அடு த்த டெஸ்ட் போட்டியிலேயே 59 ரன்கள் அடித்தேன். அந்த பாசிட்டிவ் எண்ணம் அன்று தோன்றாவிட்டால், இன்று இந்த சச்சினே இல்லை!” – இந்த நேர்மறைச் சிந்தனை அவருக்கு மட்டுமல்ல… நம் அனைவருக்குமே அவசியம்தேவை!
 
மாத்தி யோசி!
 
டான் பிராட்மேன், விவ் ரிச்சர்ட்ஸ், சோப ர்ஸ், ப்ரையன் லாரா, ராகுல் டிராவிட். என பலபேட்ஸ்மேன்களை உருவாக்கி யிருக்கிறது கிரிக்கெட். ஆனால், சச்சினின் ஆட்டத்தில் உள்ள கச்சிதமா ன நுணுக்கத்தை மற்றவர்களின் ஆட்டத்தில் முழுமையாகப்பார்க்க முடியாது. மேற்கு இந்திய வீரர்களும், ஆஸ்திரேலிய வீரர்களும் வாகான பந்துக ளை முரட்டுத்தனமாக அடித்து ஆடுவதும், அடிக்க ஏதுவாக இல்லாத பந்துகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதுமான பாணி யைப் பின்பற்றுவார்கள். ஆனால், தவறா ன பந்துகளைத் தண்டித்தும் மற்ற பந்துக ளை ஃபீல்டர்களுக்கு இடையில் தள்ளிவி ட்டு ‘கேப்பில் கிடா வெட்டும்’ ஆட்டத்தை அறிமுகப்படுத்தி, அதை ‘வெற்றி யுக்தி’ யாக மாற்றியவர் சச்சின்.
 
கடந்து செல்!
 
விமர்சனங்களை எப்படிக் கையாள்வது என்பதையும் சச்சினிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். அளவுக்கு மிஞ்சி, ‘கடவுள்’ என புகழ்ந்தாலும் சரி, ‘சுயநலமாக ஆடுகிறார்’, மோசமான ஃபார்ம் காரணமாக ‘எண்டுல்கர்’ என விமர் சித்தாலும் சரி, எதையும் ஒரு சின்னப் புன் னகையோடு கடந்துவிடுவார் சச்சின். அது வும், இதுவும், எதுவும் கடந்துபோகும் என் பது சச்சினுக்குத் தெரிந்திருக்கிறது!
 
வேண்டும் இன்னொரு வீரநடை!
 
சூப்பர் மேனாகவே இருந்தாலும் பூமியில் தானே தரை இறங்க வேண்டும்! அதேபோல ‘சாதனை நாயகன்’ சச்சினுக்கு பேட்டிங் பவர் குறைந்து வருவதும் உண் மையை, வேறு வழியில்லை என்றாலும், நாம் ஜீரணிக் கத்தான் வேண் டும்! 40 வயதான சச்சினுக்கு சீறி வரும் பந்துகளைக் கணிக்கும் திறன் குறை ந்துகொண்டே போகிறது .  பேட்ஸ்மே ன் முனையில் நிற்கும் சச்சின் முகத் தில் முதல்முறையாக பயத்தையும் பதற்றத்தையும் பார்க்க முடிகிறது. கொல்கத்தா டெஸ்ட்டின் முதல் இன் னிங்ஸில் 76 ரன்கள் அடித்ததுதான் சச் சின் கடைசியாக விளையாடிய 15 இன்னிங்ஸ்களில் அதிகபட்ச ஸ்கோ ர். ஓய்வை அறிவிக்கவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறார் சச்சின். ‘ அது எப்போது?’ என்பதை அவரே அறிவிப்பார் என்ற சுதந்திரத்தை சச் சினுக்கு அளித்துவிட்டுக் காத் திருக்கிறது கிரிக்கெட் உலகம். 
 
‘பல சதங்கள் அடித்திருக்கிறே ன். பல சாதனைகள் படைத்தி ருக்கிறேன். ஆனால், வாழ்க்கை யில் ஒரே ஒருமுறைதான் கிரி க்கெட் களத்திலிருந்து பெவிலி யனுக்கு வீரநடை போட்டு நட ந்திருக்கிறேன். ஷார்ஜாவில் ஆஸ்திரேலி யாவுக்கு எதிராக, மணல் புய லுக்கு நடுவே சதம் அடித்து இந்திய அணி யை இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற வைத்தபோது தா ன், ‘நான் ஒரு விவ் ரிச்சர்ட்ஸ் போல உணர்ந்தேன்!’ என்று சொல்லியிருக்கிறார் சச் சின்.
 
விரைவில் அவர் விளையாட இருக்கும் 200-வது டெஸ்ட் போட்டியில் அப்படியான ஒரு வீரநடைக்குப்பின் சச்சின், ஓய்வு முடிவை அறிவித்தால், அது இத்தனை வருட முத்திரை சாத னைகளுக்கான கிரீடமாக இருக்கும்!
 
– சார்லஸ்

Leave a Reply