Friday, January 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காதலர்கள் (அ) தம்பதிகள் பிரிந்து விடுவதற்கான காரணங்கள்

ஒரு உறவு தோன்றுவது என்பது மிகவும் கஷ்டம். ஆனால் அந்த உற வு பிரிவது என்பது மிகவும் எளிது. குறிப்பாக காதலிக்கும் போது ஆரம் பத்தில் இருவரது வாழ்க்கையும் மிகவும் சந்தோஷ மாக செல்லும். ஏனெனில் ஆரம்ப த்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் ஆர்வத் தில், வாழ்க்கையே சொல்ல முடி யாத அளவில் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் நாட்கள் போக போக, அந்த உறவு சிலருக்கு போர் அடிக்க ஆரம்பித்துவிடும்.

இதனால் பல காதலர்கள் பிரிந்து விடு கின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அந்த காரணங்கள் அனைத் திற்கும் தீர்வு கிடைக்கக்கூடிய வைதா ன். ஆனால் அதற்கு மனம்தான் வேண் டும். மனம் இருந்தால், மார்க்கம் உண் டு என்னும் பழமொழிக்கேற்ப, உறவு கள் அலுத்துப் போகாமல் இருக்க வே ண்டுமெனில், அந்த உறவை வித்தியாசமான பாதையில் எடுத்துச் செல்ல வேண்டியது நமது கடமை.

முதலில் உறவுகளில் போர் அடிப்பதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். பின், அதனை எப்படி சரிசெய்வது என்று யோசித்து வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டு செல்லுங்கள்.

பேச்சுவார்த்தையின்மை

தற்போது வேலைக்கு அனைவரும் செல்வதா ல், காதலிப்பவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து க் கொள்வது என்பது கடினமாகிவிட்டது. இத னால் இருவருக்கிடையே போதிய பேச்சுவார்த் தை இல்லாமல், அந்த உறவானது போர் அடிக் க ஆரம்பிக்கிறது.

சோம்பேறித்தனம்

காதல்செய்யும் ஆரம்பகாலத்தில், காதலி/காதலனை எங்கேனும் அழைத்துச் சென்று, நேரத்தை செலவிடுவோம். அதிலும் பூங்கா, ரெசார்ட், பீச் என்றெல்லாம் செல் வோம். ஆனால் நாட்கள் போக போக, ஒருவித சோம்பேறித்தனத் தால் எங்கும் செல்லாமல், அவர்களை பார்க்காமல், எந்நேரமும் நண் பர்களுடன் இருப்பது போன்றவற்றால் உறவுகள் போர் அடிக்கிறது.

ரொமான்ஸ் இல்லாதது

திருமணம்/காதல் உறவில் ரொமா ன்ஸ் இருந்தால் தான், வாழ்க்கை செழிப்பாக இருக்கும். அதுவே இல் லாமல் போனால், வாழும் ஆசை குறைந்துவிடும்.

ஒரே மாதிரியான செயல்

உறவுகளில் போர் அடிக்க மற்றொரு காரணம் தான், தினமும் ஒரே மாதிரியான செயலில் ஈடுபடுவது. உதாரணமாக, காலையில் அலுவல கத்திற்கு அழைத்து செல்வது, மாலையில் அவர்களை மீண்டும் வீட்டில் ட்ராப் செய் வது. இப்படியே சென்றால் போர் அடிக்கா மல் பின் எப்படி இருக்கும். ஆகவே அவ்வ ப்போது வெளியே சினிமா, ஹோட்டல் போன்ற இடங்களுக்குச்செல்லவேண்டும்.

சண்டை

எதற்கெடுத்தாலும் சண்டை போட்டாலும், உறவுகள் போர் அடித்து, நாளடைவில் பிரிவிற்கு வழிவகுத்துவிடும்.

பிரச்சனைகளை மனதிலேயே புதைப்பது

துணையுடன் பிரச்சனைகளை பகிராமல், மனதி ல் வைத்துக் கொண்டு இருந்தால், மன அழுத்த ம் அதிகரித்து, உறவானது போர் அடித்துவிடும். எப்படியெனில், துணையுடன் பகிராமல் இருப்ப தால், அலுவலகத்தில் யாரேனும் நல்லவிதமா க பேசஆரம்பித்தால், அவர்களுடன் அனைத் தையும் பகிரவேண்டிய நிலை ஏற்படும். இதனா ல் துணையின் மீது வெறுப்பு அதிகரித்து, பிரிவு ஏற்படும்.

பரிசுகள் இல்லாதது

காதல் செய்யும் போது ஆரம்பத்தில், காதலி/காதலனை ஈர்க்கும் வகையில் பரிசுகள் வழங்கிவிட்டு, நாட்கள் செல்ல செல்ல அதனை தவிர்த்தால், இருவருக் கும் மனஸ்தாபம் ஏற்பட்டு, சலிப்பு தட்டி விடும்.

அதிகப்படியான எதிர்பார்ப்பு

இதுவரை நம் மனதில் தோன்றும் எதையும் எதிர்பாராத வகையில் செய்துவிட்டு, எதிர்பார்க்கும் போது, அதைப் புரிந்து கொண்டு செய்யாம ல் இருந்தால், மனதில் ஒருவித சங்கடம் ஏற்பட்டுவிடும்.

வாக்குவாதம்

எந்த ஒரு விஷயத்திற்கும் அடிக்கடி வாக்குவாதம் செய்தால், பேச பிடிக்கா மல் போய், இருவருக்கும் வாழ்க்கை யே வெறுத்துவிடும்.

போதிய நேரம் செலவிடாமல் இருப்பது

முன்பெல்லாம், நேரம் பார்க்காமல் அவ ர்களுடன் வெளியே சென்று, பெரும்பா லான நேரத்தை அவர்களுடன் செலவழி த்துவிட்டு, நாட்கள் கடந்து செல்ல அது குறைந்தால், உறவுகளில் சலிப்பு ஏற்படு ம்.

கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது போ ன்றவை இல்லாதது

காதலின் ஆரம்ப காலத்தில் எதற்கெடுத்தாலும், கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதாகத்தான் இருக்கும். ஆனா ல் நாளடைவில் சுத்தமாக இல் லாமல் போனால், அது மற்றவர்களுக்கு மன கஷ்டத்தை ஏற்படுத்தி, பின் உறவில் அலுப்பை ஏற்படுத்திவிடும்.

எரிச்சலூட்டுவது

யாரேனும் தவறுசெய்துவிட்டால், அத னை மன்னித்து விடாமல், அதனைப் பற்றி பேசி எரிச்சலூட்டுவது.

சொல்வதை ஆர்வமின்றி கேட்பது

வாழ்க்கைத்துணை எதையேனும் ஆர்வ முடன் சொல்ல வந்தால், அதனை அவர் களுக்கு ஆறுதலாக இருந்து கேட் காமல், ஆர்வமில்லாதவாறு கேட்டால், கோபத் தை ஏற்படுத்துவதோடு, கிண்டல் செய்வ து போலாகிவிடும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply