Friday, January 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புத்த‍ம் புது பூமி வேண்டும்!- புத்தம் புதிய தொடர்

சூரிய மண்டலத்தில் நமது பூமிக்கு ஒரு முக்கிய சிறப்பு அம்சம் உண்டு. பல்லாயிரக்கணக்கான உயிரினங்க ளைத் தோற்றுவித்து, வாழ்வளித்து க் கொண்டு வரும் பூமி,ஒரு உயிர் கோளாகத் திகழ்கிறது.

தெளிவான இரவு நேரத்தில் ஆகாய த்தை ஒருமுறை அண்ணாந்து பாருங்கள். கண் சிமிட்டி காட்சித் தரும் விண்மீன்களின் அழகை எந்த ஒரு கவிஞனும் விட்டு வைக்க‍ வில்லை. இப்பரந்த விண்மீண் தொகுப்புகளில் நமது பூமியைப் போ ன்று 17 பில்லியன் அதாவது 170 கோடி உயிர் கோள்கள் இருப்ப‍தாக சமீபத்தில் அறிவியல் அறி ஞர்கள் கருத்து தெரிவித்து ள்ள‍னர்.

சூரியனிடமிருந்து சரியான தூரத்தில் அமைந்துள்ள‍தா ல், உயிரினங்கள் வாழ்வதற் கு ஏற்ற‍ சாதகமான தட்ப வெப்ப‍ சூழ்நிலையைப் பூமி பெற்று ள்ள‍து. சூரிய மண்ட லத்தின் இதர கோள்களில் இந்த சாதகமான சூழ்நிலை காணப்படவில் லை.

உதாரணமாக வெள்ளி கிரகத்தில் வெந்து எரிக்கும் வெப்ப‍ நிலையும் (450 டிகிரி செல்சியஸ்) வியாழன் கிரகத்தில் விறைக்க‍ச்செய்திடும் வெப் ப‍ நிலையும் (-150 டிகிரி செல்சியஸ்) நிலவுகின்றன• அங்கு நிலவும் ஈர்ப்பு சக்தி வாயு மண்டல த்தின் அழுத்த‍ம் ஆகியவையும் விபரீதமாக உள்ள‍ன• நமக்கு மிக அருகில் உள்ள‍ நிலாவில் கூட இதே கதிதான்.

பூமியும் சூரியன் உட்பட அதைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் இதர கோள்க ளும் பெரு வெடிப்புக் கொள்கையின் அடிப்படையில் உருவானதாக அறிவி யல் அறிஞர்கள் முடிவுக்கு வந்துள்ள‍ னர். நமது பூமி தோன்றி சுமார் 4.6 பில் லியன் (அதாவது 4100 கோடி) ஆண்டுக ள் ஆகின்றன என்று கதிரியக்க‍ம் கோட் பாட்டின் கணக்கு முறை தெரிவிக்கிற து.

ஆரம்பத்தில் அதிக வெப்ப‍ நிலையைக் கொண்டிருந்த நமது பூமி மெல்ல‍ மெ ல்ல‍க் குளிர்ந்து திடத்தன்மை பெற்று கடல் மற்றும் நிலப்பரப்பைக் கொ ண்டதாக உருவெடுத்த‍து.

ஓரணு உயிர் வகைகள் தோன்றி, பிறகு அவை அணு உயிரிகளாக பெருக்கெடுத்து, பரிணாம மாற்ற‍த் தைத்திற்கு உள்ளாகி மீன், தவளை, பல வகை விலங்குகள் எனமாறுதல் அடைந்து இறுதியாகத் தற்கால மனித இனம் உருவானது.

மனிதன் தோன்றிய ஆரம்ப காலத்தில் பூமியில் இயற்கை வளங்கள் அபிரிதமாக கிடைக்க‍ப் பெற்றிருந்தன• நாகரீகம் தோன்றி, மக்க‍ள் தொ கை அதிகரிக்க‍ இந்த இயற்கை வளங்க ளின் தேவையும் உபயோகமும் அதிகரி க்க‍த் தொடங்கின•

தேவை அதிகரித்து, இருப்பு குறைந்து வந்ததால், இவற்றிற்கு பற்றாக் குறை ஏற்படத்தொடங்கியது. இப்ப‍ற்றாக்குறை யைச்சமாளிக்க‍ வேண்டி, மனிதன் தன் அறிவியல் தொழில் நுட்பத்திறனைப் பயன்படுத்தி நில க்க‍ரி, பெட்ரோலியம், இரும்பு, தங்கம், வைரம் போன்ற அனேக இயற்கை செல்வங்களை மேலும் மேலும் கண்டுபிடித்து உப யோகிக்க‍ ஆரம்பித்தான்.

தொழிற்புரட்சி ஏற்பட்டு, தொழிற்சாலை கள் தொடங்கப்பட்ட‍ பின் இயற்கை வளங்களின் தேவையும், உபயோகமும் பன்மடங்கு அதிகரித்த‍ன• இதனால் உல கின் மற்ற‍ பகுதிகளில் வியாபாரத்திலி ருந்த இயற்கை வளங்களின்மீது பேரா சை கொண்டு அவற்றை அபகரிக்க‍த் திட்ட‍மிட்டா ன்.

உலகின் பலம் மிகுந்த நாடுகள் பலம் குன்றிய நாடுகள் மீது போர் தொடு த்தும், அந்நாடுகளை, ஆக்கிரமிப்பு செ ய்தும் அதிகாரத்தைக் கையில் எடுத்து க்  கொண்டு துஷ்பிரயோகம் செய்துவ ந்தன• இதற்கு பலியான நாடுகளில் நமது இந்தியாவும் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே!

நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற இய ற்கை வளங்கள் அளவுக்கு அதிகமாக பூமியிலிருந்து வெளிக்கொணரப் பட்ட‍தால், இவற்றின் இருப்பு குறைந்துபோனது மட்டுமின்றி நிலக்கட்ட‍ மைப்பில் நிர்ந்தரக் குறைபா டுகளும் ஏற்பட்டு விட்ட‍ன• காலப்போக்கில் உல கம் முழுவதிலும் இவற்றின் இருப்பு முற்றிலும் தீர்ந்துபோகும் நிலையும் உருவாகிவருகிறது.

இவற்றின் அபரிமிதமான உபயோகத் தால் ஏற்பட்ட‍ கழிவுகள் சுற்றுச் சூழல் களங்கப்படுத்தி விட்ட‍ன•

வாகனங்களிலிருந்தும் தொழிற்சாலைகளிலிருந்தும் தொடர்ந்து வெளி யேறிக் கொண்டிருக்கும் நச்சுப் புகை, இரசாயனக் கழிவுகள், நகர் புறச் சாக்கடைக் கழிவுகள் ஆகிய வை அனைதுதம் ஒன்று சேர்ந்து நிலம் நீர் ஆகாயம் ஆகிய மூன்றை யும் மாசுபடுத்தி விட்ட‍ன• இந்த மாசுகளின் மத்தியில் வாழ்ந்து, மா ண்டு கொண்டிருக்கும் மனிதனின் அவல நிலை யை எடுத்து சொல்ல‍ வேண்டியதில்லை.

இரத்த‍க் கொதிப்பு, புற்றுநோய் புதிய ரக விஷக் காய்ச்ச‍ல்கள் என இல் லாத பொல்லாத நோய்களு க்கு ஆளாகி, சிறப்பு மருத் துவமனைகளைத் தேடி சுற்றிச் சுற்றி அலைந்து வந்து அவதிப்பட்டுக் கொ ண்டிருக்கிறான். கட்டுக்கட்டாய் பணம் செலவழித்துபோக மரணம் தான் மிச்ச‍ம்

( பூமி சுழலும் )

Raju Photo
எஸ். ராஜு

சையிண்டிஸ்ட்
நேஷனல் ஜியோகரஃபிகல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்
(நம் உரத்த‍ சிந்தனை மாத இதழிற்காக)

Leave a Reply