Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதெல்லாம்கூடவா “X-Ray”-வுல தெரியும்?

வகுப்பில் ஒரு பேராசிரியர். எக்ஸ்-ரே ஃபிலிம் ஒன்றைக் காட்டி ஏதோ விளக்கிக் கொண்டிருந்தாராம். திடீரென்று கரண்ட் கட். இருந்தபோதும் பேராசிரியர் பாடத்தை நிறுத்த வில்லை. ஜன்னலுக்கு அருகில் எக்ஸ்-ரே ஃபிலிமைப் பிடித்துக் கொண்டு பாடத்தைத் தொடர்ந்து நடத்தினார்.

இடையில் திடீரென்று அவர் “ஓ! ரங்கநாதன் கார் வாங்கிட்டார் போல இருக்கே!” என்றதும் மாண வர்களுக்கு ஒன்றும் புரியவில் லை.

குறும்புக்கார‌ மாணவர் ஒருவர், சட்டென்று ” சார்! அதெல்லாம்கூடவா எக்ஸ்-ரேல தெரியும்? ” என்று கேட்க, வகுப்பில் சிரிப்பலை அடங்க வெகு நேரமானது.

விஷயம் என்னவென்றால், இந்தப் பேராசிரியர் ஜன்னல் அருகில் வைத்து எக்ஸ்-ரேவைப் பார்த்துக் கொண்டிருந் த சமயம், அங்கே சக பேராசிரியரான ரங்கநாதன் காரை ஓட்டிக்கொண்டு போயிருக்கிறார். அதை அவர் எதார்த் தமாகச் சொல்ல,  அந்த‌  குறும்புக்கார‌ மாணவர் அதைக் காமெடியாக்கி விட் டார்.

அந்த குறும்புக்கார‌ மாணவன் வேறு யாருமல்ல‍! விஜய் தொலைக் காட்சியில் புதிரா? புனிதமா? என்ற நிகழ்ச்சியின்மூலம் பிரபலமான‌ மறைந்த மருத்துவர் மாத்ரூபூதம் அவர்கள்தான்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: