இறைவனின் படைப்பில் ஆணும் பெண்ணும் வித்தியாசமானவர்கள் . இந்த வித்தியாசம் தான் ஒருவர் பால் மற்றொருவரை ஈர்க்கும் கவர்ச்சியாக இருக்கிறது. இக்வர்ச் சி ஆண் – பெண் பாலுணர்விற்கு அடித்தளமாக உள்ளது.
மனிதனுடைய பசி உணர்வு, தூக்க உணர்வு போன்ற பாலியல் உணர் வு என்பதும் குற்றமற்ற ஒன்றே. பாலுணர்வு வெறும் உணர்ச்சியாக, உடலின் இச்சையாக மட்டுமே கருதுவது கூடாது.
பாலுணர்வின் அழகை, அருமையை நன்கு உணர்ந்தவர்கள் மிகவும் குறைவு. அது அழுக்கானது. இழுக்கானது என்று எண்ணி ஒதுங்கியும், ஒதுக்கியும் வாழ்வோர் ஏராளம். இளைஞர்களுக்கு பாலுணர்வு பற்றி ஒன்றுமே தெரியாது என்று சொல்ல முடியாது. ஆனால் அவர் களுக்கு முறையாக அதைப்பற்றி தெரியா து என்று உறுதியாகக் கூறமுடியும்.
இளைஞர்களிடையே பாலியல் தொடர் பான போதிய விழிப்புணர்வு இல் லை. பாலியல் குறித்து இளைஞர்கள் உரிய முறையில் அதைப் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். வளரும் பிள்ளைகளுக்கு பாலியல் அறி வை சொல்லிக்கொடுப்பது பெற்றோரின் கடமையாகும். பிள்ளைகளின் உடலில் அவ்வப்போது ஏற்படு ம் மாற்றங்களை பிள்ளைகளுக்கு புரியும்படி தெளிவுபடுத் துவது அவசியம்.
பாலினம் என்பது உடற்கூறு அமைப்பின் வேறுபாடுகளைக் கொண்டு மனிதர்க ளை ஆண்பால், பெண்பால் என வகைப்படுத்து வதாகும். பாலின வேறு பாடு பிறப்பிலேயே வருவது. இந்தப் பாலின வேறுபாடு விலங்கு, பற வை, தாவரம், மனிதன் என அனைத்து உயி ரினங்களிட த்திலும் காணப்படுகின்ற ஒன்று. ஒவ்வொரு உயிரினமும் தன்னுடைய சந்த தியை உருவாக்குவதற்காக அமைந்த இயற் கையான வேறுபாடு இது.
பாலியல் என்பது பாலினம் பற்றி கல்வி. பாலியல் கல்வி என்பது பாலினம் பற்றி தக வல்களை, செய்திகளை முறைப்படுத்தி வழ ங்குவதும் கற்பிப்பதும் ஆகும்.
பொதுவாக தாய், தந்தை உறவினர், ஆசிரியர், கதை, திரைப்படம், சமு தாயம் வாயிலாகப்பாலியல் கருத்துக்கள் அறிவுறு த்தப் படுகின்றன. பாலியல் கருத்துக்கள் ஒவ்வொ ரு காலகட்டத்திற்கும், தேவைக்கும் ஏற்ப மாற்றங் களுக்கு உட்படுகின்றன. எனவே, கல்வி நிறுவனங் கள் பாடங்களைக் கற்றுத் தருவதுடன் பாலியல் கல்வியையும் முறையாக வழங்குவது அவசியமா கிறது. அப்போதுதான் ஒழுக்கம், கட்டுப்பாடு போன் றவற்றை நிலைநிறுத்த முடியும்.
ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப்பட்ட பண்பாடு, கலா ச்சாரம், நாகரீகம் உண்டு. அதன் அடிப்படையில் பாலின கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன. ஆண், பெண் இருவருக்கு மான குடும்ப மற்றும் சமுதாய பொறுப்புகளும், செயல்களும் இதனடிப் படையில்தான் நிர்ணயிக்கப்படுகின்றன.
பாலியல் கல்வி என்ற உடனேயே முகத்தை சுளிக்கும் பெற்றோர்கள் உண்டு. எந்தளவுக் கு பாலியல் குறித்த சமூகக் கட்டுப்பாடுகள், அடக்கு முறைகள் வீட்டிலும் நாட்டிலும் இருக்கின்றதோ அந்தளவுக்கு ஆபத்துகள் பெருகும் என்பது உளவியலார்களின் எச்சரி க்கை.
பாலுணர்வு மனிதத் தன்மைக்கு தனிச் சிறப் பையும், உயர்வையும் அளிப்பதாகும். இதனை தொலைக்க முடியாத தொல்லை என நினைக்கலாம். ஆனால் ஆழ்ந்து நோக்கினால் அதுவே மனித உறவுகளுக்கெல்லாம் ஊற்று. உந்து சக்தி என்பது புரியும். பாலு ணர்வு என்பது மனித உறவின் அன்புத் தேடல். மனித ஆன்மாவின் உற வு வேட்கை. அது இல் லை என்றால் பிறப்பும் இல்லை, உறவும் இல் லை.
இது மனிதனை மனிதனாக வாழ வைக்கி றது. வளர வைக்கிறது. சிக் மன்ட் பிராய்ட் டின் கருத்துப்படி பாலுணர்வு என்பது மனித இயல்புக்கே அடிப்படையான சக்தி. அதனைக் கட்டுப்படுத்தி, முறையாக நெறிப்படுத்தி, ஆக்கபூர்வமான செயல்களில் செலுத்தினால் எண்ணற்ற சாதனைகளைப்படைக்கலாம்.
பாலுணர்வை வெறுத்து, மறுத்து, அடிமனதுக்குள் புதைத்து வாழ்வது வளர்ச்சிக்கு வழிஅன்று. அது தனது ஆளுமையின் அடிப்படையான ஒரு பகுதியையே தனக்கு அன்னிய மாக்கிக் கொள்வதாகும். இளைஞர் கள் பாலியலைப் பற்றி தவறான இடத்தில் தவறான நபர்கள் மூலம் தெரிந்து கொள்ளும்போது எதிர் மறையான, தவறான விளைவுக ளே ஏற்படும்.
பாலுணர்வை முறையாகக் கையாண்டு நெறிப்படுத்த தெரியாதவர்க ளால் சமூகம் பல பிரச்சனைகளைச் சந்திக்கிற து. இதன் காரணமாக பாலியல் வன்முறை, விப சாரம், தகாத உறவு, தவறான பழக்க வழக்கங்க ள் ஏற்படுகின்றன.
பாலியல் கல்வி குறித்த தவறான எண்ணங்க ளைப் போக்க வேண்டும். அது வெறும் உடல் உறுப்புகள் சம்பந்தப்பட்ட கல்வி மட்டுமல்ல. உடல் நலம் மற்றும் மனநலம் தொடர்பானதும் கூட என்பதை விளக்க வேண் டும். இளைய தலைமுறையினர் தங்கள் எதிர்காலத்தை ஆரோக்கிய மானதாகவும், ஒளிமயமானதாகவு ம் ஆக்கிக் கொள்ள பாலியல் கல்வி உதவும்.
வெளிநாடுகளில் மாணவர்கள் மத்தியில் வன் முறைமனப்பான்மையு ம், பாலியல் தொடர்பா ன குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அதே நிலை இன்று நம் நாட்டையும் மெள்ள மெள்ள தொற்றிக் கொண்டு வருவது அச்சத்தை ஏற்படு த்துகிறது.
எய்ட்ஸ் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் பெருகி வரும் இச்சமயத்தில் பாலியல் கல்வியின் அவசியம் எல்லோராலும் உணரப்பட வேண்டும். இதனால் பாலியல் குற்ற ங்கள் இல்லாத எய்ட்ஸ் இல்லாத ஓர் ஆரோக்கிய சமுதாயத்தை உருவாக்க முடியும்.
அதற்கான மனப்பக்குவம் அடையாத சிறுவ ர்களை கூட்டி வைத்து பாலியல் கல்வியை வழங்குவதாகக் கூறி அவர்களை மேலும் குழப்பக் கூடாது. பாலுணர்வு தண்டனைக்கு ரியது அல்ல. குற்றம் அல்ல என்றெல்லாம் ஒட்டுமொத்தமாகக் கூறுவது இளைஞர்கள் மத்தியில் தேவையில்லாமல் உள்ள அச்சத் தைப் போக்கி அவர்களை நெறிப்படுத்துவத ற்காகத்தான் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
பாலியல் கல்வி என்ற போர்வையில் மேற்கத்திய பாலியல் கல்வியை அறி முகப்படுத்தி இந்தியாவின் பண்பாடு, குடும்ப முன் உதாரணங்கள் போன்ற வை அழிக்கப்பட்டுவிடாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போ துதான் இந்தியாவின் இளைய சமுதா யம் நல்ல ஒழு க்க நெறிமுறைகளுடன் வாழ வழிவகுக்கும் கல்வியாக பாலியல் கல்வி மலரும்.
– தன்னம்பிக்கை