Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘தொண்டை’யைப் பாதுகாக்க மருத்துவரின் ஆலோசனை

கபாலத்தின் அடிப்பகுதியில் தொடங்கி குரல்வளையின் கீழ்ப்பகுதி வரை உள்ள குழல் பகுதியைத் ‘தொண் டை’ என்கிறோம். சுமார் 12 1/2 செ.மீ. நீளமுள்ள தொண்டை, நம் உணவுப் பாதைக்கும் சுவாசப் பாதைக்கும் பொது வான பாதையாக இருக்கிறது. வாயில் தொடங்கும் உணவு ப்பாதை தொண் டை வழியாகச் சென்று உணவுக்குழாய் மூலம் இரைப் பைக்குச் செல்கிறது. இதுபோல் மூக்கில் தொடங்கும் சுவாச ப்பாதை தொண்டை வழியாகச் சென்று, உணவுக்குழாய்க்கு முன்பக்க மாக, சுவா சக்குழாய் மூலம் நுரையீரலுக்குச் செல்கிறது. இவற்றில், சு வாசப் பாதை எப்போதும் திறந்தே இருக்கும். அதன்வழியாக காற்று போவதும் வருவதுமாக இருக்கும். உணவுப்பாதை எப்போதும் மூடியே இருக்கும்; உணவு சாப்பிடும் போது மட்டும் திறக்கும். உணவு உள்ளே போனதும் மூடிக்கொள்ளும். சுவாசம் தொடரும். 
 
தொண்டையில், சுவாசப்பாதையும் உணவுப்பாதையும் இணைகிற இட த்தில், சுவாசக்குழாயின் வாசலாக ‘குரல் வளை’ இருக்கிறது. இதில் வீணையில் நாண்கள் இருப்பதுபோல் இரண்டு குரல்நாண்கள் உள்ளன. இவற்றின் அசைவினால்தான் குர லோசை ஏற்படுகிறது. பேசுவது, கோப மாகக் கத்துவது, கிசு கிசுப்பாகப் பேசு வது, பாடுவது, ‘மிமிக்ரி’ செய்வது என் று குரலோசையைக் கூட்டு வதற்கும் குறைப்பதற்கும் குரல் நாண்கள் மட்டு மல்லாமல், வாய், கன்னம், தொண்டை, டான்சில், மூக்கு , சைனஸ் அறைகள் என்று ஒரு ‘பட் டாளமே’ கூட்டுமுய ற்சி செய்கின் றன. மேலும், குரல்வளையானது வெறும் ஓசையை எழுப்புகின்ற வேலையை மட்டும் செய்யவில்லை; சுவாசக் குழாய்க்கு ள் காற்றை அனுப்புவது, உணவுக்குழாய்க்கு வருகிற பொருள்கள் சுவாசக் குழாய்க்குள் நுழைந்து விடாதபடி தடுப்பது போன்றவற் றையும் கவனித்துக் கொள்கிறது.நாம் குடி க்கும் தண்ணீர், சாப்பிடும் உணவு, சுவாசிக் கும் காற்று இவை மூன்றும் சுத்தமாக இல் லாவிட்டால், தொண்டையில் நோய்த்தொற் று ஏற்பட்டு தொண்டை வலிக்கும். இருமல், காய்ச்சல், கழுத்தில் நெறிகட்டுவது, காதுவ லி போன்ற தொல்லை களும் ஏற்படும். புகை பிடித்தாலும் அடிக்கடி தொண்டைவலி வரும். ‘சமையல் உப்பு + இளம் வெந்நீர்’ கரைசலில் வாயையும் தொண்டை யையும் கொப்பளித்தால், ஆரம்பநிலையில் உள்ள தொண்டைவலி யைக் குறைக்கலாம். தகுந்த வலிநிவாரணி மற்றும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளைச் சாப்பிட்டால், தொண்டைவலி முழுவதுமாக க் குணமாகும். குழந்தைகளுக்கு வருகிற ஒரு முக்கியமான தொல்லை டான்சில் வீக் கம். தொண்டையில் உள்நாக்குக்கு இருபக்க மும் உள்ள நிணநீர்த்தசைக்கு ‘டான்சில்’ என் று பெயர். இது, காற்றில் வருகிற கிருமிகளை அடையாளம் கண்டு, உடலில் நோய் எதிர்ப்பு ச் சக்தியைத் தூண்டுகிறது. ஆகவே, இது உடலுக்குப் பாதுகாவலனாகச் செயல்படுகிறது. இருந்தாலும், சில வேளைகளில் நோய்க்கிருமிகளின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது டான்சிலும் பாதிக்கப்பட்டு வீங்கிவிடும். அப்போது தொண்டையில் வலி, காய்ச்சல், கழு த்தில் நெறிகட்டுதல், காதுவலி போன்ற தொல் லைகள் ஏற்படும். நோயின் ஆரம்பநிலை யில் இதற்கு ஆன்டிபயாடிக் மருந்துகளே போதும். அடிக்கடி டான்சில் வீங்குகிறது, காது வலிக்கிறது, காதில் சீழ்ப்பிடிக்கிறது, வாந்தி வருகிறது, பசியின்மை போன்ற வை தொடருமானால் அறு வை சிகிசசைதான் தீர்வு. 
 
உணவை உண்ணும்போது, உணவுக்குழாய்க்குள் உணவு செல்லாமல், சுவாசக்குழாய்க்குள் சென்றுவிட்டால், அதை வெளியேற்றும் முயற்சி யில் சுவாசக் குழாய் இறங்கும். அப்போது தொடர்ந்து இருமல் வரும். இதைத்தான் ‘புரையேறுதல்’ என்கிறோம்.
 
பேசிக்கொண்டே உண்பது, அவசரமாக உணவை விழுங்குவது போன்ற காரணங்க ளால் புரையேறுகிறது. அழுத்தமாக பல முறை இருமினாலே புரையேறிய பொருள் வெளியேறிவிடும். இல்லாவிட்டால் புரை யேறிய வரை குனியச் சொல்லுங்கள். அவர து முதுகுப் பக்கமாக நீங்கள் நின்று கொண்டு, உங்கள் இருகைகளையு ம் அவரது தொப்புளுக்கு மேலே உள்ள வயிற்றுக்கு முன்பாக இணைத் து, உள்நோக்கியும் மேல்புறமாகவும் ஒரே அழுத்தாகத் திடீரென அழுத் துங்கள். புரையேறிய பொருள் வெளியேறிவிடும்.  குழந்தைகள் விளை யாடும்போது கோலி, பலூன், விசில், நாணயம், ஊக்கு, மாமிச எலும்பு, ஸ்குரூ என்று எதையாவது ஒன்றை விடுவார்க ள். அது தொண்டையில் மாட்டிக் கொள்ளும்போ து சுவாசம் தடைபடும். எக்ஸ்-ரே மற்றும் சி.டி. ஸ்கேன் மூலம் தொண் டையில் அடைத்துள்ள பொருட்களைத் தெரிந்து கொள்ளலாம். பொரு ளை விழுங்கியது சின்னக் குழந்தையாக இருந்தா ல், அதன் காலைப்பிடித்துத் தலைகீழாகத் தொங்க விட்ட படி முதுகில் தட்டினால், தொண்டை யில் உள்ள பொருள் வெளியில் வந்துவிடும். பொருள் வெளிவரவில்லை என்றால், மருத்துவரிடம் செ ல்லவேண்டும்.தொண்டையில் உள்ள தசைகள் நாம் விழித்துக் கொண்டிருக்கும் போது விறைப் பாக இருக்கும். தூங்கும்போது தளர்ந்துவிடும். ஆழ்ந்த தூக்கத்தில் இவை சுவாசக்குழாயில் சரிந்து அழுத்தும். இதனால் சுவாசம் தடை படும். உடனே சரிந்த தசைகளை த் தள்ளுகிற முயற்சி நிகழும். தொண்டைத் தசைகள் அதிரும். அப்போது ஏற்படுகிற ‘கொர்ர்ர்..’ சத்தம்தான் குறட் டை. சளியுடன் கூடிய மூக்கடைப்பு, டான்சில் வீக்கம், தைராய்டு பாதி ப்பு, உடல் பருமன், கழுத்தில் கொழுப்பு அதிகமாகச் சேருவது, மதுப் பழக்கம், புகை ப்பழக்கம போன்றவை குறட்டைக்கு வழிவகுக்கும். குறட்டைத் தொல் லை உள்ளவர்கள் மல்லாக்கப்படுக்காமல், ஒரு பக்கமாக ஒருக்களித்துப் படுத்தால், குறட்டையின் அளவு குறையும்.
 
தொண்டையைப் பாதுகாக்க…தினமும் ஒருமுறையாவது உப்புபோட்ட வெது வெதுப்பான தண்ணீரி ல் கொப்பளிப்பது நல்லது. அதிகச் சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ எதையும்சாப்பிடக்கூடாது; அருந்தக் கூடாது . மிதமான சூடுதான் தொண்டையைப் பாதுகாக் கும். நன்றாகப் பல் துலக்குவது, சாப்பிட்ட பிற கு வாயைக் கொப்பளிப்பது போன்றவற்றால் வாயைச் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியு ம். வாய்ச்சுத்தம் தொண் டைப் பாதுகாப்புக்கு மிகவும் அவசியம். புகைபிடிப்பது, புகையிலை போடுவது, பாக்கு மற்றும் பான்மசாலா மெ ல்லுவது தொண்டைக்கு ஆகா து. அடிக்கடி உர த்த குரலில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். குரலில் மாற்றம், உணவு விழுங்குவதில் சிரமம், சுவாசிப்பதில் திண றல் போன்ற அறிகுறிகள் தெ ரிந்தால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: