Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை நந்திதாவை விரட்டி விரட்டி காதலிக்கும் நடிகர் விஜய் சேதுபதி!

அட்டகத்தி படத்தில் கல்லூரி மாணவியாக, பக்கத்து வீட்டு பெண் போ ன்ற ரோலில் யதார்த்தமாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நந்திதா. இந்த படத் திற்கு பிறகு அவர் நடித்த எதிர்நீச்சல் படமும் நல்ல பெயரை பெற்று தந் தது. தற்போது இதற்குத் தானே ஆசை ப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதா என்ற கேரக்டரில் நடித்துள் ளார். சுமார் மூஞ்சி குமாரான விஜய் சேது பதி, இவரை விரட்டி விரட்டி காதலிக்கிறாராம்.

இந்தபடமும் நந்திதாவுக்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற ‌தோற்றம் தானாம். அதேப்போல் இவர் நடித்துள் ள இன்னொரு படமான நளனும் நந்தி னியும் படமும் இதேப்போன்று தானா ம். தொடர்ந்து இதுபோன்று ஒரே ரோ லில் நடிப்பது நந்திதாவுக்கு போரடித்து விட்டதாம்.

இதுப்பற்றி அவர் கூறும்போது, என்ன‍ய்யா இது, ஒரே மாதிரியா கதை யோடத்தான் அணுகுகிறார்களே தவிர! வித்தியாசமான கதைகளோடு இயக்குநர்கள் என்னிடம் அணுகுவதில்லை. என க்கு ஒரே மாதிரியான ரோலில் நடித்து போர் அடிக் குது. எனக்கு கிளாமர்ரோலில்தான் நடிக்க ஆசை. சமீபத்தில் தான் இதுதொடர்பாக போட்டோ ஷூட்டும் எடுத்தேன். ஆனால் எனக்கு வரும் 10 கதையில் 8 கதை யதார்த்தமா, பக்கத்து வீட்டு பெண் போன்ற வேடம் தான் கிடைக்கிறது. ரசிகர் களும் அதைதான் விரும்புவாங்க போல. இருந் தாலும் ஒரு படத்திலாவது நல்ல கிளாமர் ரோலி ல் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருக் கு, இன்னும் எவ்வளவோ படங்கள் இருக்கு, பார்க்கலாம் என்கிறார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: