Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மருத்துவத் துறைக்கு ‘கூகுள் கிளாஸ்’ ஒரு வரப்பிரசாதம்

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்/ நான் காணும் உலகங் கள் நீ காண வேண்டும்” என்ற கண் ணதாசனின் வரிகள் இப்போது உண்மையாகி இருக்கின்றன. பல் வேறுபட்ட சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனம் ‘கூகுள் கிளாஸ் ’எனும் பிரமிக்கத்தக்க நவீன கண்ணாடிக் கருவியை உரு வாக்கியிருக்கிறது. இது தற்போது வீட்டு உப யோகம் முதல் விஞ்ஞானம் வரை பயன்படப்போகிறது.
 
தம் மனைவியின் பிறந்தநாள் பரிசாக ஒரு புடைவை வாங்க அந்தக் கடைக்குள் நுழைகிறார் கணவ ர். புடைவையை விற்பனையா ளர் பிரித்துக் காட்டும்போது பா க்கெட்டிலிருந்து ஒரு கண்ணா டியை எடுத்து அணிந்து கொண் டு வீட்டிலிருக்கும் மனைவியி டம், ‘இது பிடிச்சிருக்கா?’ என் கிறார். கணவர் கூகுள் கிளாஸ் வழியே பார்க்கும் அந்தப் புடைவையை அவர் மனைவி வீட்டிலிருந்தே தம் லேப்டாப்பில் பார்க்கிறார். ‘இதன் பார்டர் சரியில்லை. பின்னால் அலமாரியிலிருக்கும் மயில் கழுத்து கலர் புடைவையைக் காட்டச் சொல்லுங் கள்’ என்கிறார். அடுத்த 5 ஆண்டுகளில் கூகுளின் உதவியால் இப்படித்தான் ஷாப்பிங் இருக்கப் போகிறது.  
 
சாதாரண மூக்குக்கண்ணாடி போன்று அமைக்கப்பட்டிருக்கும் இந்த கூகுள் கிளாஸில் வலது கண்ணின் விழிக்கு மே ல் ஒரு நீண்ட செவ்வக வடிவில் அமைக்கப்பட்ட லென்ஸும் வலது கா தருகில் ஒரு மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட குட்டி கம்ப்யூட்டரும் இருக் கிறது. அணிந்து கொண் டிருப்பவர் பார்ப்பதை இந்த கம்ப்யூட்டர் அதன் தொடர்பிலிருக்கும் கம்ப்யூட்டர்களி ன் திரைகளில் காட்டுகிறது. இந்தக் குட்டி கம்ப்யூட்டருக்கு கட்டளைக ளை கூகுள் கண்ணாடி அணிந்திரு ப்பவர் குரல் மூலம் கொடுக்கலாம். இதனால் அவர் பார்ப்பதை அவர் விரும்புபவர் பார்க்கச் செய்யலாம். அடுத்த ஆண்டு மார்க்கெட்டுக்கு வர ப்போகும் இந்த கூகுள் கண்ணாடிக்கருவி கடந்த இரண்டு ஆண்டுகளாக ப் பரிசோதனையில் இருந்தது. உலகின் பல பகுதிகளில் 8000 பேர் களுக்கு வழங்கி அவர்களின் கரு த்தைக் கேட்டுச்சிறப்பாக வடிமை த்துக் கொண்டிருக்கிறார்கள். 
 
முதல் கட்டமாக 2000 பேருக்குக் கொடுக்கப்பட்டது. அதில் ஒருவர் சிவா திருமழிசை. சென்னையிலுள்ள ‘லைப்லைன்’ மருத்துவமனையின் தலைவர் ராஜ்குமார் அவரது நண் பர். அவரை அணுகியபோது மருத்துவ த்துறையில் புதிய டெக்னாலஜியை விரும்பும் அவர் உடனே சம்மதி த்தார். கூகுள் கிளாஸ் அறிமுக நிலையில் இருப்பதால் சில நிமிடங்கள் மட்டுமே பார்க்கும் வசதியைக் கொண்டிருந்த தொழில்நுட்பத்தில் தேவையான மாற் றங்களைச் செய்து, அரை மணிக்கும் மேல் பார்க்கும்படி மாற்றி அமைத்தார். டாக்டர் ராஜ்குமார் அதை அணி ந்துகொண்டு இரண்டு ஆப்ரேஷன்களைச் செய்தார். இதை கூகுள் கிளா ஸ் வழியே பெரிய திரையில் மருத்துவ க் கல்லூரி மாணவர்களும், பத்திரிகை யாள ர்களும் பார்த்தனர்.
 
ஆபரேஷன் செய்யும்போது நான் பார்க் கும் பகுதியை நீங்கள் பார்க்கிறீ ர்களா?” என அவர் கேட்டது காட்சியுடன் தெளி வாகக் கேட்டது. மருத்து வத் துறைக்கு இது வரப்பிரசாதம். ஆபரேஷன் தியேட்டருக்குள் என்ன நடக்கிறது என்று உறவினர்கள் வீட்டிலிருந்தே பார்க்க, ரிகார்ட் செய்ய முடியும்,”  .
– ரமணன்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: