Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எம்.பி.ஏ – மார்க்கெடிங் படிப்பு உங்களுக்கு ஒத்துவருமா?

எம்.பி.ஏ., படிப்பவர்களின் கவனத்தை அதி கம் கவரும் ஸ்பெஷலை சேஷன் பிரிவுக ளில், மார்க்கெடிங் முக்கிய இடத்தைப் பெறுகிறது. சவால்களையும், வளர்ச்சியை யும் விரும்புவோருக்கு, மார்க்கெடிங்துறை ஒரு சரியான தேர்வாகும்.

உங்களுக்கு அறவேப் பிடிக்காத ஒரு துறை யில் நீங்கள் எப்போதுமே ஈடுபடுதல் கூடாது. ஒருவர், தனக்குப் பிடித்தமான துறையில் கால் பதிப்பதென்பது, சவாலான ஒரு காரிய மாக உள்ளது. எனவே, எம்.பி.ஏ., ஸ்பெஷலைசேஷன் தேர் வு செய்கையில், உங்களுக்கு மார்க் கெடிங் ஒத்துவருமா? என்பதைப் பற்றி நன்குயோசித்து ஒரு முடிவுக்கு வரவும்.

திறன் மற்றும் மனப்பாங்கு

படைப்புத்திறன், வெளியே செல்ல விரும்பும் மனப்பாங்கு, நல்ல தலை மைப்பண்பு, எளிதாக பிறரு டன் பேசும் தன்மை, சற்று செல்வாக்கு, பேரம் பேசும் திறன் மற்றும் குழு வாக இணைந்து செயல்படும் தன் மை, பகுப்பாய்தல் திறன் மற்றும் தரவுக ளை விளக்கும் அறிவு ஆகியவற்றைப் பெற்ற ஒரு வருக்கு, மார்க்கெடிங் துறை பொருத்தமான ஒன்றாகும். அதே சமயம், இத்தகைய திறன்கள், கால ஓட்டத்தில் மேம்படுத்தப்பட்டு, கூர்மைப்படுத்தப்பட வேண்டும்.

நமது சிந்தனையில் படைப்பாக்கம் மற்றும் புத்தாக்க முயற்சிகள் அவ சியம் வேண்டும். மேலும், உங்களின் பணியில் வெளிப்படைத் தன்மையும், நேர்மையும் இரு க்க வேண்டும். அப்போது தான், மார்க் கெட்டிங் துறையில் உங் களால் ஒரு வெற்றிகரமான நிபுணராக மிளிர முடியும்.

ஆர்வமுள்ள அம்சங்கள்

உங்களுக்கான ஸ்பெஷலை சேஷனை தேர்வு செய்யும் முன்னதாக, உங்களுக்கு எந்த ப் பணியில் முழு திருப்தியுடனும், ஈடுபாட்டுடனும் செயல்பட முடியு ம் என்பது குறித்து ஒரு உண்மையான சுய ஆய்வை மேற்கொள்வது அவசியம். ஏதோ புறச்சூழல்களால் உந்தப்படாமல், உண்மையாகவே, உங்களின் உள்ளுணர்வின் அடிப்ப டையில் இந்த ஆய்வை மேற்கொள் ள வேண்டும்.

அடிக்கடி பயணம் செய்தல், புதிய நபர் களை சந்தித்தல், நெட்வொர்க்கிங், ஆய்வு, வியூகம், product வடிவமைப்பு ஆகிய அம்சங்களில் உங்களுக்கு ஆர்வமிருந்தால்தான், உங்களா ல் மார்க்கெடிங் துறையில் வெற்றி கரமாக செயல்பட முடியும். மார் க்கெடிங் படிப்பில் என்னென்ன அம் சங்கள் அடங்கியுள்ளன மற்றும் அந்த அம்சங்களில் உங்களுக்கு பிடித்த வையா என்பதைப்பற்றி, ஸ்பெஷலை சேஷன் தேர்வுக்கு முன்னதாகவே முடிவு செய்தல் முக்கியம்.

நோக்கம்

மார்க்கெடிங் துறை என்பது ஏறக்குறைய, அரசியல் களம் போன்ற து. அங்கே, போட்டிகளும், சவால்களும் எப்போதும் மிக அதிகம். சற்று அசந்தாலும், நாம் பின்தள்ளப்படுவோம். அதிகளவிலான பொறுப்புகள், இலக்குகள்(targets), வளர்ச்சி க்கான வாய்ப்புகள் ஆகியவை இத்துறையி ல் நிறைய உண்டு.

நம்மில் பலர், பணி திருப்தியைவிட, பணத் திற்கும், பணித் தன்மையைவிட பிரபலமா ன பெயருக்கும், வளர்ச்சியைவிட, பணிப் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். எனவே, மேற் கூறிய விஷயங்க ளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு, மா ர்க்கெடிங்துறை சரிப்படாது. அதேசமயம், சவால், சுவாரஸ்யம், நல் ல வருமானம் மற்றும் விரைவான வளர்ச்சி ஆகியவற் றை விரும்பும் நபர்களுக்கு, மார்க்கெடிங் என்பது மிகவும் பொருத்தமான ஒரு து றை.

பணி வாய்ப்புகள்

எம்.பி.ஏ., – மார்க்கெடிங் முடித்தவர்களுக்கு, பணி வாய்ப்புகளுக்கு எந்த குறையுமில் லை. சேல்ஸ் டெவலப்மென்ட், மார்க்கெட் ரிசர்ச், மார்க்கெடிங் கம்யூனிகேஷன், மெர்க் கன்டைசிங், விளம்பரம், ப்ராடக்ட் டெவலப் மென்ட், டைரக்ட் மார்க்கெடிங், டிஜிட்டல் மார்க்கெடிங் மற்றும் ஈவென் ட் மார்க்கெடி ங் உள்பட பலவிதமான பணி வாய்ப்புகள் காத்துக் கொண் டுள்ளன.

இந்த டிஜிட்டல் யுகத்தில், ப்ராடக்ட் அல்லது பிரான்ட் மார்க்கெடிங், சோஷியல் மீடியா மார்க்கெடிங், கிரீன் மார்க்கெடிங் மற்றும் மார க்கெடிங் கன்சல்டிங் உள்ளிட்ட சில புதிய பணி வாய்ப்புகள், MBA – Marketing பட்ட தாரிகளுக்காக, உருவாகி வளர்ந்து வருகின்றன.

மார்க்கெடிங் என்பது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய துறை. இத்துறையில், Marke ting manager முதல் Poster maker பணி வரையிலும், Sales strategist முதல் Product designer பணி வரையிலும், PR முதல் Advertising பணி வரையிலும், Logistics planning முதல் Char mer பணி வரையிலும், பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். உங்க ளிடமிருக்கும் தனித்தன்மை எது வோ, அதை பயனுக்கு கொண்டு வந்து, முன்னேறும் வாய்ப்பை இத் துறை நமக்கு வழங்குகிறது.

படிப்புகளும், கல்லூரிகளும்

நீங்கள் தேர்வு செய்யும் மேலாண் மை கல்வி நிறுவனம், ஸ்பெஷலை சேஷன் படிப்புக்கு சிறந்த ஒன் றா என்பதை கவனிக்கவும். குறிப்பிட்ட படிப்பில் இடம்பெறும் தலை ப்புகள் மற்றும் பாடத்திட்டங்கள் ஆகி யவை, எதிர்காலத்தில் நீங்கள் சந்தி க்கும் விஷயங்களை கையாள உதவு மா என்பதையும் கவ னிக்க வேண்டும். பலவிதமான படிப்புகளில், உங்களுக் குப் பொருத்தமானதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

* MBA – Marketing and Sales (2 years)
* PG Diploma in Management (PGDM – Marketing)
* Master of Marketing management (2 years)

ஆகியவையே அந்தப் படிப்புகள்.

இப்படிப்புகளை வழங்கும் சில கல்வி நிறுவனங்கள்

* IIMs
* IMT, Gazhiabad
* University of Delhi
* Symbiosis institute of Business management, Pune
* Jamnalal Bajaj institute of management studies, Mumbai
* FORE School of management, Delhi
* Indian School of Business, Hyderabad

இப்படிப்பின் அம்சங்கள்

மார்க்கெடிங் ஆராய்ச்சி, வணிக தகவல்தொடர்பு, விற்பனை மற்று ம் விளம்பர மேலாண்மை, பிராண்ட் மேலாண்மை, இன்டஸ்ட்ரியல் மார் க்கெடிங் மற்றும் நுகர்வோர் நடத் தை ஆகிய பிரிவுகளில், அட்வான் ஸ்டு நிலையிலான கற்பித்தல் நடைபெறுகிறது.

அதேசமயம், பல மேலாண்மை கல்வி நிறுவனங்கள், மேனேஜ்மென்ட டெவலப்மென்ட் ப்ரோகிரா ம்கள், கேஸ் ஸ்டடீஸ், ரிசர்ச் ப்ராஜெக்ட்டுகள், வொர்க் ஷாப்புகள், ஸ்டடி குரூப் கருத்தாக்கங்கள், செமினார்கள் மற்றும் இன்டர்ன் ஷிப் ப்ரோகிராம்கள் ஆகியவற்றை துணை நிலை கற்பித்தல் அம்சங் களாக கையாள்கின்றன.

வாங்கும் திறன் உள்ளிட்ட நுகர் வோரின் உளவியலை அறிந்து கொ ள்ளவும், முறைப்படுத்தப்பட்ட சந் தை வியூகங்களை மேம்படுத்தவும், மாணவர்கள், இன்டர்டிசிப் ளினரி பாடங்களில் தயார்படுத்தப்படுகிறார்கள். MBA – Marketing படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு, பல நிலைக ளில் பணி வாய்ப்புகள் காத்துக்கொண்டுள் ளன.

ஒரு மாணவரின் தகுதிநிலை, சந்தை நிலவரம், படித்த கல்வி நிறுவனம், பணி நிலை மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்து, ஒரு வரின் சம்பளம், ஆண்டிற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலு ம் வேறுபடும். மேலும், இப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு கிடைக்கும் பொ துவான பணி நிலைகள், Sales/Business development manager, Brand manager, Market research analyst and Product manager போன்றவையா கும்.

MBA – Marketing முடித்த மாணவர்களு க்கு, FMCG, IT, Telecom, Auto motive Pharmaceuticals and Banking போன்ற நிறுவனங்கள் மற்றும் தொழில் துறைகளில், நல்ல சம்பளத்துடன், பல சலுகைகளைக் கொண்ட, சிறப் பான பணி வாய்ப்புகளை அளிக்கின் றன.

இத்துறை படிப்பை முடித்த ஒரு மாணவர் கற்றுக்கொள்ள வேண் டிய முக்கிய அம்சம் என்னவெனில், பணியில் சேர்ந்த ஆரம்ப நாட் களில் எதிர்கொள்ளக்கூடிய நெருக் கடிகளை எவ்வாறு சமாளிப்பது என்பதைத் தான். தன்னுடைய முந் தைய அனுபவம் மற்றும் படிப்போடு ஒத்திசைவை ஏற்படுத்திக் கொள்ள க்கூடிய வகையிலான பணியை, ஒருவர் தேர்வுசெய்துகொள்ள வே ண்டும்.

இறுதியாக கூறுவது…

பணியில் ஏதேனும் குறைபாடுகள் நேர்ந்தால், அதை சரிசெய்து, நிலைமையை சமாளிக்கும் வகையில் நமது திறனை வளர் த்துக் கொள்ள வேண்டும். நாம் வாழும் உலகம் தினந்தோறும் மாறிக்கொண்டே இருப்பதாகும். எனவே, இதில் ஜெயிக்க வேண் டுமானால், கடும்முயற்சி செய்து, நமது சுய பலவீனங்களை அகற்றி, புதிய புதிய சூழல்களில் போராட பழகிக்கொள்ள வேண்டும்.

நீங்கள் மேற்கொள்ளும் படிப்பானது, உங்களுக்கு வெறுமனே பணி வாய்ப்புகளை மட்டும் தருவதி ல்லை. மாறாக, விரிவான அறிவு, சிறந்த அனுபவ ம், தகவல்தொடர்பு படிப்பினைகள் மற்றும் ஆளு மை மேம்பாட்டு பயிற்சிகள் போன்ற பல்வேறான நன்மைகளையும் கொண்டு வருகிறது என்பதை மறத்தல்கூடாது.

thanks to dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: