Friday, January 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்மைக்கும் ஆண்மைக்கும் ஏன் குழந்தைக்கும் பகை இந்த சர்க்கரை! – ஒரு கசப்பான உண்மை

இனிக்கும் சர்க்கரை ஒரு கசப்பான உண்மை

மனிதன் அதிகம் உண்ணும், உணவி ல் சத்தில்லாத சர்க்கரையும் ஒன்று. நம் உடலுக்கு, இவை அறவே தேவை யில் லை.உடலுக்கு சக்தி தேவைப்படும் போது இதர உணவுகள் “குளுக்கோ ஸ்’ ஆக மாற்றி அமைக்கப்படுகின் றன. உடலுக்கு எந்த சத்தையும் கொ டுக்காமல், இருப்பதோடு மட்டுமின்றி, உடலில் உள்ள சத்தையும் இது ஈர்த்துகொள்கிறது. அதனால் தான், இதுசத்தில்லாத கலோரி உண வு என்றும் அழைக்கிறோம். சிக ரெட், மது முதலியவற்றை விட சர்க்கரை அதிக ஆபத் தானது. புற்று நோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதி கள்,உடல் பருமன், இதய நோய், ரத்த அழுத்தம், சரும நோய், விரைவில் முதிர் ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல் நோய், சிறு நீரக கோளாறு, சொத்தை பல், பெண்ணுறுப்பு தொற்று நோய், அளவு க்குமீறிய சுறுசுறுப்பு, வன் செயல்,பரவலாக இருக்கும் நீரழிவுநோய், இப்படி சர்க்கரை உடலில் உள்ள ஒவ்வொரு உறுப் பையும் பாதிப்பிற்கு உள்ளா க்குகிறது. கேனில் அடைத்து விற்கும் பானங் கள், செயற்கை சத்துணவு முதலியவற்றில், சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு ஆபத்து:

குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர் க்கரை உள்ள உணவுகளை கொடுப்பதன் மூல ம், குழந்தைகள் நோயாளிகளாக உருவாகின் றனர். சர்க்கரை அதிகமாகவும், வைட் டமின் மற்றும் தாதுபொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்க ளுக்கு, உடம்பில் ரசாயன மாறுதல் ஏற்பட்டு அளவுக்கு மிஞ்சிய துடுக்குதனத்தையும் தூண் டி விடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல் களுக்கும்,நொறுக்கு தீனிகளுக்கும் அதிக தொ டர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகிறது. இனிப்பான பொரு ட்களை உண்ணும் போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள், ஒரு வித அமிலத்தை உருவாக்கும். இந்த அமிலம், பற்களில் உள்ள “எனாமலை’ அரித்து ஓட்டையாக்கி, பல்லில் சொத்தையை ஏற்படுத்தும். சர்க்கரையும், கொழுப்பும் உள்ள உணவு பொருட்கள், ரத்தத் தில் “கொலஸ்ட்ரால்’ அளவை அதிகரித்து விடுவதால், இருதய நாளங்கள் அடைப டுகின்றன. இதனால், ரத்தம், ஆக்சிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபடுகி றது. இது தொடருமானால், ஒருவரு டைய தசைநார்கள் இறந்துபோய், மாரடைப்பை ஏற்படுத்தும். இந்த மாரடைப்பிற்கு குழந்தை பருவத்திலேயே நாம் வித்திட்டு விடுகி றோம்.

தினமும் 24 தேக்கரண்டி சர்க்கரை யை நாம் உணவில் சேர்த்தால், 92 சதவீத வெள்ளை ரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகர மான பாக்டீரியாக்களை எதிர்க்கு ம். உடலில் அதிகம் சர்க்கரை இருந் தால் அதை சுத்தப்படுத்த அதிகமாக “இன்சுலின்’ வெளியாக்கப்படுகிற து. அளவுக்கு அதிகமாக வெளியா கும் “இன்சுலினுக்கும்’ நோய் எதிர் ப்புசக்தியை தடுக்கும் ஹார் மோன் களான, புரோஸ்டேகிளேன்டான்-க்கும் அதிக தொடர்பு இருக்கிறது .இது புற்றுநோய் கட்டியை உருவாக்குகிறது.

பெண்மைக்கு பகை:

“கேன்டிடா எல்பிகன்ஸ்’ என்ற பெண் உறுப்பு தொற்றுநோயை, சர்க் கரை, இன்னும் அதிக ளவு துரிதப்படுத்துகிறது. அளவுக்கு அதிக மாக “சுக்ரோஸ்’ உள்ள உணவு எலும்பில் கால்சியத்தை குறைத்து, எலும்பு முறிவு நோ யை உண்டாக்குகிறது என பின்லாந்து ஆய்வு தெரி விக்கிறது. காபி அல்லது டீ-யில் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 தேக் கரண்டி சர்க்க ரையை மட்டுமே சேர்க்க வேண்டும். இவற் றை சாப்பிடாமல் இருந்தால், இன்னும் சிறப்பு தான். எனவே, மெல்லகொல்லும் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply