Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இளம் நடிகைகளிடம் தனது இளமையின் ரக‌சியத்தை சொல்லி நல்ல‍ பெயர் எடுத்த‍ நடிகை ஸ்ரேயா!

எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின்மூலம் தமிழில் அறிமுகமான  டிகை ஸ்ரேயா, தொடர்ந்து ஜெயம்ரவியு டன் மழை, திரைப்படத்தில் மழையில் நனை ந்தபடி இவர் ஆடிய கலக்கல்குலுக்க‍ல் ஆட்ட ம் தமிழக இளம் ரசிகர்களின் உள்ள‍த்தை கொ ள்ளைக் கொண்டு போனது. பின் கந்தசாமி திரைப் படத்தில் விக்ரமுன் ஜோடி சேர்ந்தார். அதன் பிறகு ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்ததின் மூலம் தென்னிந்திய நடிகைகளில் முன்ன‍ணி நடிகையாகவே வலம் வந்தார். இருப்பினும் அந்த இடத்தை அவரால் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியாமல் பறிகொ டுத்தார். அதன் பின்னர் சரியான திரைப்படங்கள் இன்றி மீண்டும் தெலுங்கு, கன்னடம் என்று செ ல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான நடிகை. ஆனால், இந்நேரத்தில் மாதக் கணக்கில் படமே இல்லாமல் அவர் வீடே கதியென்றும் இருந்திருக்கி றார்.

ஆனபோதும், தனது உடல்கட்டை சரி யாக மெயின்டெயின் பண்ணி வந்திரு க்கிறார் ஸ்ரேயா. இதன் காரணமாகத் தான் தற்போது நாகார்ஜூனா வின் மனம் மெகா படத்தில் நடிப்பதற்கு ஸ்ரேயாவுக்கு வாய்ப்பு கிடைத்து ள்ளதாம். இந்த நிலையில், சினிமாவு க்கு வந்து கிட்டத்தட்ட 10 வருடங் கள் ஆகி விட்டபோதும், இன்னும் உடல் கட்டை அப்படியே இளமை யாக வைத்திரு ப்பதின் ரகசியம் குறித்து சில இளவட்ட நடிகைகள் அவரிடம் கேட்டபோது, தினமும் நான் கடை பிடித்து வரும் யோகா மற்றும் தியான பயிற்சிதான் என் இளமையின் ரகசியம் என்றாராம் ஸ்ரேயா. அதோடு, தினமும் ஜிம் முக்கு சென்று வியர்வை சொட்ட சொட்ட உடற்பயிற்சி செய்வதை விட யோகா பயிற் சி பெரிய பலனை தருகிறது என்றும் அனுப வத்தை சொன்ன ஸ்ரேயா, அவர்களையும் யோகா செய்யுமாறு வற்புறுத் தியும் வருகி றார். இதனால் இவரது வற்புறு த்த‍லின் பேரில் சில இளம் நடிகைகள் யோகா கற்று செய்து வருகிறார்கள். இதனால் இளம் நடிகைகள் மத்தியில் ஸ்ரேயா விற்கு நல்ல‍ பெயர் கிடை த்து வருகிறது.

Leave a Reply