Thursday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ம‌ணம் வீசும் மண வாழ்க்கையில் கொஞ்சம் புயலும் வீச வேண்டும்! ஏன்? எதற்காக?

உண்ணும் உணவில் கூட உப்பு, புளிப்பு, கசப்பு, இனிப்பு, துவர்ப்பு என அறுசுவைகளும் வேண்டும் என்று நினைக்கின்றோம். அப்பொழுதுதான் உண்ணும் உணவு சுவைப்பதோடு சத்துக்களும், நோய் எதிர்ப்பு சக்திக ளும் உடம்பில் அதிகரிக்கும்.

மண வாழ்க்கையிலும் அதுபோலத் தான் சந்தோசம் மட்டுமே இருந்தா ல் அதில் சுவையேதும் இல்லை. வாழ்க்கை போராடித்து விடும். எனவே வாரத்திற்கு ஒருநாளைக்காவது சின்னச் சின்ன சண்டைகள் கணவன் மனைவிக்கு இடையே இருந்தால்தான் சுவார ஸ்யமாக இருக்கும் என்கின்றது சமீபத்திய சர் வே ஒன்று.ஆம் ம‌ணம் வீசும் மண வாழ்க்கை யி ல் கொஞ்சம் புயலும் வீச வேண்டும்! ஏன்? எதற்காக? என்பதை இந்தியாவின் மேட்ரிமோ னியல் இணையம் ஒன்று இதுதொடர்பாக ஆய் வு மேற்கொண்டது. இதில் புதுமணத் தம்பதி கள் முதல் திருமணமாகி 20 ஆண்டுகள் ஆன தம்பதிகளும் பங்கேற்றனர்.

ஒத்துப் போவது நல்லதா?

தம்பதிகளுக்கு இடையே உணர்வுரீதியாகவும், மனரீதியாகவும் ஒத்துப் போவது பிணைப்பை அதிகரிக்கும். என்றாலும் சின்னச்சின்ன கருத்து மோதல்கள் அவசியம் என்று சில தம்பதி கள் கூறியுள்ளனர்.

மும்பை டெல்லியில் . . .

மெட்ரோபாலிடன் நகரங்களான மும்பை, டெல்லியில் வசிக்கும் தம்பதியர் 33 சத விகிதம் பேர் மாதத்திற்கு ஒருமுறை மட் டுமே சண்டை போடுவதாக தெரிய வந் துள்ளது.

செல்லச் சண்டைகள்

20 முதல் 25 வயது தம்பதியரை ஒப்பிடு ம் போது 40 வயதுக்கு மேற்பட்ட தம்பதி யர் மாதம் ஒருமுறை மட்டுமே சின்னச் சின்ன வாக்குவாதங்க ளில் ஈடுபடுகின்ற னர். வயதாக வயதாக புரிந்து கொள்ளும் தன்மை அதி கரிப்பதையே இது உணர்த் துகிறது.

பெண்கள் அதிகம்

ஆண்களில் 8 சதவிகிதம் பேர் தினசரி மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக கூறியுள்ளனர். அதேசமயம் 12 சதவிகித பெண்கள் தங்க ளின் கணவருடன் தினசரி வாக்குவாத த்தில் ஈடுபடுவதாக கூறியுள்ள னர்.

அதிகரிக்கும் விவாகரத்துக்கள்

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் விவாகர த்து செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரி த்துள்ளது இதற்குக் காரணம் தம்பதியரிடை யே ஒருவருக்கொ ருவர் மதிக்காததும், அன்பு, பாசம், பேச்சு வார்த்தை போன்ற வைகளிடையே ஏற்பட்ட இடைவெளியும் தான் என்கின்றனர் நிபுணர்க ள்.

வாரம் ஒரு சண்டை

இந்தியா முழுவதும் 44 சதவிகித தம்ப தியர் வாரம் முறையாவது சண்டை போட்டுக் கொ ள்வோம் என்று கூறியு ள்ளனர். கணவன் மனைவி இடையே புரிந்துகொள்ளாமல் பிரி வதை விட வாரம் ஒரு முறையாவது சின்னச் சின்ன செல்லச் சண்டைகள் போட்டால் உறவு ப் பிணைப்பு அதிகரிக்கும் என்கின்றனர் ஆய் வை மேற்கொண்டவர்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply