Tuesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“விழாவிற்கு நான் சென்றிருக்கக்கூடாது. அவமானப்படுத்தி விட்டார்கள்”! – மன வருத்தத்தில் ரஜினி

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவுக்கு நான் போயிருக்கவே கூடாது. பிலிம்சேம்பர் அழைப்பை நம்பி போனது தவறாகிவிட்டது, என சூப்பர் ஸ்டார் ரஜினி வருத்தப்பட்ட தாக செய்தி வெளியாகியுள் ளது.

நான்கு நாட்கள் நடந்த இந்தியசினிமா நூற்றாண்டு விழா பல்வேறு சர்ச்சை கள் கிளப்பியுள்ள‍து அதோடுமட்டுமல் லாமல் மறக்கமுடியாத அளவிற்கு பல கசப்புணர்வுகளையும் பல கலைஞர்க ளுக்கு பரிசாககொடுத்துள்ள‍து. குறிப் பாக சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல், இளையராஜா போன்றவர்களை அழைத்து அவமானப்படுத்தியதும், கருணாநிதி, ரஹ்மான் போன்ற வர்களை அழைக்காமல் அவமதித் ததும் தமிழ் சினிமா உலகம் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தி யை உருவாக்கியுள்ள து. ரஜினியை கடைசி வரிசையில் கடைசி நாற்காலி யில் உட்கார வைத்தது குறித்து திமுக தலைவர் கருணாநிதி பெரும் வருத்த மும் கண்டனமும் தெரிவித்திருந்தார்.

இந்த விழாவில் கலந்து கொண்டபோ து, ஏற்பட்ட அவமரியாதை குறித்து, தனது நெருங்கிய நண்பர்கள் சிலரிட ம், ‘விழாவிற்கு நான் சென்றிருக்கக் கூடாது. ஃபிலிம் சேம்பர் அழைத்ததே என்பதற்காகத்தான் போயிருந்தேன். அது தவறாகி விட்டது. ரொம்ப ரொம்ப அவமா னப்படுத்தி விட்டார்கள். ஒவ் வொரு கலைஞனும் இந்த விழா வில் அவமானப்படுத்தப்பட்டிருக் கி றான்’, என்று தனது மனக் குமுறல்களை வெளிப்படுத்தி யதாக செய்தி வெளியாகியுள் ளது. மற்ற கலைஞர்கள் தங்கள் வேதனையைக் கூட வெளிப்படு த்த முடியாத சங்கடத்தில் உள்ளனர். இந்த மனவருத்த‍ம் அடுத்த ஆட்சி மாற்றம் நிகழும் வரை நீடிக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்த சினிமா பிரபலங்கள்!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: