Friday, January 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘அது’ பற்றி யார் எது சொன்னாலும் கவலையில்லை!- இலியானா

சமீபத்தில் தெலுங்கு பட ஷூட்டிங் ஒன்றில் கல ந்து கொள்ள சென்னைவந்த இலியானா செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கொடுத்த பேட்டியின் சில பகுதிகள்:

காதல் அனுபவம் உண்டா? யாரை காதலித்தீர் கள்?

என்னுடன் நடித்த ஹீரோவை தீவிரமாக காதலி த்தேன். பல மாதங்களாக நல்ல நட்புடன் நாங்கள் இருந்தோம். டேட்டிங் சென்றேன். ஆனால் அந்த காதல் கைகூடவில்லை. அந்த காதல் தோல்வி அடைந்தது என் மனதை மிகவும் பாதித்தது உண் மைதான்.

ற்போது வெளிநாட்டுக்காரர் ஒருவரை காதலிப்பதாக கூறப்படுகிறதே?

எந்த ஒரு வெளிநாட்டவரையும் காதலிக்க வில்லை. என்னுடைய சொ ந்த வாழ்க்கை பற்றி எனது பெற்றோர்களுக்கு தெரியும். அவர்களுக்கு மட்டும் எல்லாம் தெரிந்தால் போதும்.

நீங்கள் திமிர் பிடித்தவர் என்று பொதுவாக கூறப்படுகிறதே?

அது பற்றி யார் எது சொன்னாலும் கவலை யில்லை. பொதுவாக மனதில் தோன்றுவ தை தைரியமாக பேசுவேன். அதனால் என் னை திமிர் பிடித்தவராக சிலர் நினைக்கின்ற னர். அதற்கு நான் என்ன செய்ய முடியும், அவர்களுக்காக நான் எனது தனித் தன்மையை விட்டுக் கொடுக்க முடி யாது.

எல்லா படங்களுக்கு டெஸ்ட் ஷூட்டிங்கில் பங்கேற்ப தாக கூறப்படுகிறதே?

முதல் படத்துக்கு மட்டுமே டெஸ்ட் ஷூட்டில் பங்கேற் றேன். எல்லா படங்களுக்கும் டெஸ்ட் ஷூட்டில் நான் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை.

Leave a Reply