Saturday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘அவர்கள்’ எப்படித்தான் தாங்கிக்கொள்ளப் போகிறார்களோ! ‘அவர்களை’ நினைத்தாலே பாவமாக இருக்கிறது!

எட்டு சதவிகிதத்திற்கு மேல் இருந்த ஜி.டி.பி.யை ஐந்து சதவிகிதமாக குறைத்தது, வெங்காயம், தக்காளியைக் கூட சாதாரண மனிதர்கள் வாங்கிச் சாப்பி ட முடியாதபடி விலை உயர்த்தியது என ஐக்கிய முற்போக்குக் கூட்டணி செய்த சாதனைகள் பல. இந்தப் பட்டியலில் இன் னொரு முக்கியமான சாதனையும் இப் போது சேர்ந்திருக்கிறது. எக்கச்சக்கமான கறுப்புப் பணத்தை ரியல் எஸ்டேட் துறை யில் பாயவிட்டதன் மூலம் இன்றைக்கு வீடு விலை உச்சத்தை அடைந்து, எந்த நேரத்தில் வேண் டுமானாலும் சகட்டுமேனிக்கு குறையலாம் என்கிற ஆபத்தை வெற்றிகரமாக உரு வாக்கியது தான் அந்தச் சாதனை.

கடந்த பத்து ஆண்டுகளாகவே ரியல் எஸ்டேட்விலை கன்னாபின்னா வென்று எகிறி, பெரும் லாபம் கிடைத்ததால், கட் டட கான்ட்ராக்ட்டர்கள் என்று மட்டும் இல்லாமல், தொழிலதிபர்களும் தங்கள் பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தனர். தொழில் போர்வையைப் போ ட்டுக்கொண்டு, வங்கிகளில் பெரும் தொகையைக் குறைந்த வட்டிக்கு கடனாக வாங்கி, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து கொள்ளை லாபம் பார்த்தனர். இதனால் மனைகளின் விலை புயல் வேகத் தில் உயர்ந்தது. ஆனால், தொழில்கள் முடங்கி ன .

விளைவு, ஏழைகள் மட்டுமல்ல, நடுத்தர மக்கள், நாணயமான அதிகா ரிகள் எல்லோருக்கும் சொந்த வீடு என்கிற கனவு தகர்ந்து போனது. பணக்காரர்கள், அந்நிய முதலீட்டாளர்கள் வாங்க, விற்க,. இரண்டாவது  வீடு, மூன்றாவது வீடு வாங்க… விற்க… என தேவைக்கு என்று இருக்க வேண்டிய ரியல் எஸ்டேட், இன்று ஒருவிலைபொருளாக (commodity ) மாறியதுதான் நாட்டின் பெரும் துயரம்.

ஏகத்துக்கும் உயர்ந்த ரியல் எஸ் டேட்களின் விலை பல பெரிய தொழில்களையும் விரட்டி அடித்த து. இந்தியாவில் தொழிற்சாலை ஆரம்பித்து நாலு காசு லாபம் பார்க் கலாம் என்று வந்த பல நிறுவனங்கள் இடங் களுக்குச் சொல்லப்படும் விலையைக்கண்டு அதிர்ந்து ஓடிவிட்டன

தொழில் வளர்ச்சியின் மூலாதாரமான இடத்தை அரசு கையகப்படுத்து வதை கூட விவசாயிகள் அனுமதிக்க மறுக்கின் றனர். பூமி விளைந்து தங்களைக் காப்பா ற்றும் என்பதற்காக அல்ல; வித்து காப்பாற்றும் என்ப தால்தான். அரசு கையகப்படுத்தினால் அடிமாட்டு விலை தானே கிடை க்கும். ஏக்கர் ஒரு கோடி வரை விற்பனையாகும் விவசாய நிலத்தின் வழிகாட்டு மதிப்பு 5 லட்சம், 6 லட்சம் ரூபாய் என்று தானே இருக்கிறது. இதுவரை வழி காட்டு விலை கொடுத்த அரசு, இன்று நான்கு மடங்கு அதிகம் தரவேண்டும் என்கிறது. அமெரிக்காவில் ஓர் ஏக்கர் விவ சாய நிலம் விலை 1,000 டாலர். அதாவது, 65,000 ரூபாய். ஆனால் ,ஆண்டிபட்டியில் 5 லட்சம் ரூபாய்! விளங்குமா இந்த நாடு? ரியல் எஸ்டேட்டில் அமெரிக்கா வையே அடிச்சுட்டோம்லன்னு வேண்டுமானாலும் நாம் பீத்திக்கலாம்.

கடந்த பத்தாண்டுகளில் அரசியல்வாதிகள், பெரிய அரசு அதிகாரிகள், தங்களது லஞ்சப் பணத்தையும், பெரும் முதலாளிகள் தங்களது கறுப் புப் பணத்தையும் பதுக்கிப் பாதுகாக்க ரியல் எஸ்டேட் பூ லோக சொர்க்க மாக மாறியதால், உற்பத்தி அல்லாத துறையில், அனைத்து மூலதன ங்களும் முடங்கின. விளைவு, விவசாயம் 1.8% வளர்ச்சி வீழ்ச்சி; தொழி ல் 0.8% வளர்ச்சி வீழ்ச்சி; ஆனால், ரியல் எஸ்டேட் மட்டும் 9% அமோக வளர்ச்சி. ஒரு பொருளாதாரத்தி ற்கு விவசாயமும், தொழில் துறையும் அடிப்படையாக இருக்க வேண் டும். ஆனால், இங்கு எல்லாமே தலை கீழாக இருந்தால், பொருளாதாரம் சீட்டுக்கட்டுபோல சரியாமல் என்ன செய்யும்?

அந்நிய முதலீடுகள், அற்ற குளத்து அருநீர் பறவைகள் போல… வந்தன, லாபம் பார்த் தன.. பறந்துவிட்டன. சில முதலீடுகள் இன்று வானுயர் ந்த கட்டடங்களாக உயர்ந்து நிற்கின்றன. கடைவிரித்தாகி விட்டது கொள் வாரில்லை. 20 – 25% ப்ளாட் விலை சரிவு… விற்பனை சரிவு… பொருளா தாரத்தை, விவசாயப் பொரு ளாதாரத்தை ஊக்கப்படுத்த வேண்டிய பணம், இன்று கட்டடங்களாக முடங்கிக்கிடக்கின்றன.

என்றும் வளர்ச்சி தொடரும் என்று எண்ணி… 2, 3 என மனை கள் வாங்குவதற்காக வங்கிக ளில் கடன் பெற்றவர்கள், குடும் பச் செலவு கூடிவிட் டதால் கடன் கட்டமுடியாமல் விழி பிதுங்குகின்றனர். கடனை வசூ லிக்கவும் முடியாமல், ப்ளாட்க ளை விற்கவும் முடியாமல் தடுமாறுகின்றன பல வங்கிகள்.

இந்த அரசாங்கம் உண்மையில் நாட்டு மக்கள் மீது அக்கறைகொண்ட அரசாக இருந்திருந்தால் என்ன செய்திருக்கவேண்டும்? இன்னும் இர ண்டு வருடங்களுக்கு யாரும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யக் கூ டாது… அந்நிய முதலீட்டிற்கு ரியல் எஸ்டேட்டில் அனுமதி இல் லை என்றல்லவா கறாராகச் சொல்லி இருக்க வேண்டும். ஆனால், மாப்பி ள்ளை செத்தால் என்ன, பொண்ணு செத்தால் என்ன மாலைப் பணம் கிடைச்சா போதும் என்றல்லவா இந்த அரசாங்கம் நினைத்தது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரில் பன்னாட்டு கம் பெனிகளுக்கு இந்த அரசாங்கம் நிலங்களை கூறுபோட்டு விற்கத்தானே செய்தது? நாளைக்கு அந்நிய நாட்டு முதலீ டு அள்ளிக்கொண்டு வருமெனில் இன்னு மொரு சிறப்புப்பொருளாதார மண்டலத்தை உருவாக்கி, அங்கு கஞ்சா வளர்த்து, அதையு ம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தாலும் ஆச்சர்யமில்லை. இந்த அரசா ங்கத்திற்கு வேண்டியதெல்லாம் அந்நிய முதலீடு மட் டும் தானே!

ஆக மொத்தத்தில், விலை ஏறும், விலை ஏறும் என்று ஒன்றுக்கு இரண்டாக வீட்டை வாங்கிப் போட்டவர்கள் இனி குமிழ் (Bubble) உடைந்து, விலை இறங்கப் போவதை எப்படித் தான் தாங்கிக்கொள்ளப் போகிறார்க ளோ! நினைத் தாலே பாவமாக இருக்கிறது!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply