Monday, July 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு – மட்டன் குழம்பு

தேவையான பொருள்கள்

மட்டன் -அரை கிலோ
வெங்காயம்- 2
க்காளி- 2
பச்சை மிளகாய்- 3
உருளை கிழங்கு- 1
கருவாயிலை-சிறதளவு
மிளகாய் பொடி- 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி-அரை ஸ்பூன்
தனியா பொடி- 1 ஸ்பூன்
கரம் மசாலா-காள் ஸ்பூன்
கறி மசாலா- 2 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு-2ஸ்பூன்
தயிர்- 2ஸ்பூன்
கொத்த மல்லி இலை-சிறிதளவு
பட்டை-1
ஏலக்காய்-3
கிராம்பு-5
எண்ணை-3ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு

செய்முறை

சட்டியில் எண்ணை ஊற்றி அதில் கிராம்பு, ஏலக்காய், பட்டை போட்டு பின்வெங்காயம் போடவும் நன்கு வதக்கவும் பின் தக்காளி, ப. மிளகாய் போட்டு வதக்கவும் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும் பச்சை வாசம்போன உடன் கருவாயிலை போட்டு எல்லாப் பொடி களையும் போட்டு நன்கு எண்ணையில் வதக்கவும் பின் மட்டன் போட்டு வதக்கி மூடி வைக்கவும் 5 நிமிடம்ஆனதும் தண்ணீர் விட்டு உப்பு போட்டு கொதிக்கவிடவும் 1௦ நிமிடம் ஆனதும் உருளை கிழங்கு, தயிர் போட்டு கொதிக்க விடவும் மட்டன் வெந்த வுடன் மல்லி தூவி இறக்கவும் மட்டன் குழம்பு ரெடி.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply