Sunday, May 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தொழுநோய் – ஒரு பார்வை

தொழுநோய் என்பது புறநரம்புகள் பகுதிகளிலும் மற்றும் சுவாசக் குழாயில் காணப்படும் கோழைகளில் ஏற்படும் குருண/குருமணி நோய்க ளாகும். தோலில் காணப்படும் சீழே அதன் முதல் அறிகுறியாகும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்காம ல் விடின் தொழுநோயின் தீவிரம் அதி கரித்து தோல், நரம்பு, விரல்கள் மற்று ம் கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும்.

இதன் பாதிப்பால் உடலுறுப்புகளுக்கு உணர்ச் சியின்மையும் விரல்கள் மற்றும் பாதங்களில் கலக்கூட்டுக்கள் இழப்பு ஏற்படு தலால் இவை விரல்கள் உதிர்ந்தது போலக்காட்சித் தரும். இவை யே முற்றும் நிலையில் உயிர் துரக்கும் நிலையை அடைவ தும் உண்டு. இது பெரும்பாலும் நோயெதிர்ப்பாற்றல் குன்றியவரை யே இது தாக்குகிறது. இது தமிழ்நாட்டில் பரவலாக அறியப்பட்டுள்ளது, 

தொழுநோயின் வேறு பெயர்கள்

தொழுநோயை குட்டம், குச்டநோய், பெரு வியாதி, மேகநீர், மேக நோய் எனப் பரவ லாக அழைக்கப்படுகிறது.

இதன் அறிகுறிகள்

உணர்ச்சியற்ற வட்ட வடிவில் காணப்படும் தேமல்

கை கால்களில் மரத்தல்

பல சிவப்புநிற புள்ளிகள் அல்லது முகம், புட்டம், உடலின் மற்ற பின் பகுதிகளில் காணப்படும் உணர்வற்ற அல்லது உணர் வுடனோ உள்ள வட்ட வட்டமான திட்டுகள்

சிகிச்சை

தொழுநோய் என்பது முற்றிலும் குணமா க்கக்கூடிய ஒன்று. தொழு நோய் இருப்பது மருத்துவரால் உறுதி செய்யப்பட்டால் கீழ்க்காண்ப வைகளைப் பின்பற்ற வேண்டும்.

1. நோயின்குணமாகும் தன்மை பற்றியோ அல்லது மற்றவர்களுக் கு தொற்றிவிடுமோ என்பதனைப் பற்றி கவலைப்படவேண்டியதில் லை

2. மல்டி ட்ரக் தெரபி (எம்.டி.டி) பல் மருந்து சிகிச்சை

மல்டி ட்ரக் தெரபி எனும் சிகிச்சையினை தவறாமல் ஒழுங்காக எடு த்துக்கொண்டால் தொழுநோயினை எந்த நிலையிலும் குணப்படு த்த முடியும். எம்.டி.டி என்பது மாத்திரை மற்றும் காப்சுயூள் (உறை யிட்ட மருந்து) ஆகிய இரண்டும் இணைந்த தொகுப்பாக வருகிறது.

மல்டி ட்ரக் தெரபி எல்லா மாவட்டங்களி லேயும் உள்ள தொழு நோய் மையங்கள், பெரும்பாலான மருத்துவமனைகள், சிறுவ ர் சுகாதார மையங்கள் மற்றும் பொது சுகா தார மையங்கள் போன்றவைகளில் இலவ சமாகவே கிடைக்கிறது

இந்த மல்டி ட்ரக் தெரபி-யினை மருத்துவர் கூறும் நாள் வரை அவசியம் பின்பற்ற வேண்டும்.

நோயாளி எம்.டி.டி மருந்தினை எடுத் துக் கொள்ள மறந்து போகாமல் இரு க்க, வீட்டில், ஒரு குறிப்பிட்ட நேரத் தை நிர்ணயித்துக் கொள்ள வேண் டும். (உ.ம். உணவுக்குப்பின்)

தொழுநோய் கீழ் உள்ள முறைகளில் பரவாது:

தொழுநோய், மரபுவழி தோன்றும் நோய். தவறான நடத்தையினால் வருகிறது. அசுத்த இரத்தத்தினால் வருகிறது. தவறான உணவுப் பழக்கத்தினால் ஏற்படுகிறது. கடந்த கால பாவத்தினால் ஏற்படுகி றது என இன்றும் சில மக்கள் நம்பு கின்றனர். இவை தவறான ஒன்று.

மக்கள் இந்நோய் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மட் டும் பரவுகிறது என்றும், தொழு நோய் கண்டவர்களை தொடுவ தினால் பரவுகிறது என்றும் நினைக்கின்றனர்.

தொழுநோய் பெரும்பாலும் உருமாற்ற குறைபாடுகளுடன் தொடர்பு டையது என்றும், உடலின் உறுமாற்ற குறைபாடு ஏற்பட்டவுடன் தான், இந்நோயினைக் கண்டறிய முடியும் என்றும் நினைக்கின்ற னர்.

தொழுநோய் அதிகம் தொற்றக் கூடிய ஒன்று என்றும், தொற்றும் தன்மை உருமாற்றக் குறைபாடுடன் தொடர்புடையது என்றும் நினைக் கின்றனர். இது முற்றிலும் தவறான கருத்தாகும்.

தொழுநோயை குணப்படுத்த முடியாது என்று நினைக்கின்றனர் என்ற மூட நம்பி க்கையுடன் பலர் வாழ்ந்தும் வருகின்றனர்.  

தொழுநோய் உள்ள குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கும் தொழுநோய் ஏற்படும் என்று நினைக்கின்றனர் இதில் எள்ள‍ளவும் உண்மையல்ல‍.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: