Saturday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களை பாடாய் படுத்தும் “வெள்ளைப்படுதல்”

வெள்ளைப்படுதல் என்பது வெள்ளையான திரவம் பெண் உறுப்பிலிரு ந்து கசிவதாகும். இதன் தன்மை பல காரண ங்களினால் வித்தியாசப்படும். சில பெண்கள் பரபரப்பாக இருப்பார்கள். அவர்களுக்கு எப்படி நம் உடலில் வியர்வை அதிகம் சுரக்கி றதோ அது ‘வெள்ளைப்படுதல்’, பெண்களை அதி போன்று பெண் உறுப்பிலோ, கர்ப்பப்பை வாயிலோ உள்ள சுரப்பிகள் அதிகமாக சுரக் கும். 

அது தண்ணீரைப் போன்று சற்று பிசுபிசுப்பு டன் கசியும். இது சிலபெண்களுக்கு இயற்கை நிகழ்வாக இருக்கும். அவ ர்கள் உடலை தூய்மையாக வைத்துக் கொண்டு மனதையும், சலனப் படாமல் வைத்துக் கொண்டால் தானாகவே சரி யாகிவிடும். ரத்த சோகையால் அவதிப்படும் பெண்களுக்கும் வெள்ளைப்படுதல் இருக்கும். 
 
ரத்த சோகையை சரிசெய்து விட்டால் தானாக நின்றுவிடும். இறுக்கமான, குறிப்பாக செயற் கை இழை உள்ளாடைகள் உடுத்துவதாலும் வெள்ளைப்படுதல் ஏற்படும். ‘டீனியா’ என்ற வகை பூஞ்சக் காளானாலும் வெள்ளைப்படும். வெள்ளைப்படும் பெண்களுக்கு, பிறப்பு உறுப் பில் அரிப்பு ஏற்படும். 
 
தூக்கத்திலோ, அல்லது மற்ற நேரங்களிலோ தவறாக சொறிந்துவிட்டா ர்களேயானால் ரணமாகி சிறுசிறு கட்டிகள் தோன்று ம். உடல் தூய்மை அவசிய ம். இறுக்கமற்ற- தூய- பரு த்தி உள்ளாடைகளை அணி ய வேண்டும். சிலருக்கு திரி திரியாக, பாலாடைக் கட்டி போன்று வெள்ளைப் படும். 
 
நாள்பட்ட வெள்ளைப்படுத ல் இருந்தால் அவர்களுக்கு கர்ப்பப்பை வா யில் ரணமாகிவிடக்கூடும். ஆறாத ரணம், காலப்போக்கில் கர்ப்பப் பை வாயில் புற்று நோயாக மாற லாம். வெளியேறுகின்ற வெள்ளை திரவ த்தில் புரதசத்து அதிகம் விரய மாவதால், இந்த பெண்கள் உடல் நலிந்து, மெலிந்து காணப்படுவார்கள். 
 
அவர்கள் உடல் சூடாக இருக்கும். சிலருக் கு உடலிலிருந்து துர்நாற்றம் வெளி வரு ம். வெள்ளைப்படுதல் இருக்கும் பெண் களுக்கு கர்ப்பம் தரிப்பது தாமதமாகும். சில பெண்களால் இல்லற வாழ்க்கையை சரியாக மேற்கொள்ள இயலாது. 
 
இதுவரையில் நாம் பார்த்த வெள்ளைப்படுதல், சோர்வு, ரத்தசோகை, அடிக்கடி மாதவிடாய் வருதல் இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்தும் சில பெண்களுக்கு வரலாம். அதைத்தான் நாம் ‘கருப்பை வாய் புற்று நோய்’ என்கிறோம். 
 
மாதவிடாய் நின்று போன பின்னர், ரத்தம் கலந்த வெள்ளைப்படு தலோ அல்லது துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளைப்படுதலோ இரு ந்தால் அது 99 விழு க்காடு கர்ப் பபை வாய் புற்றுநோயின் அறி றியாக இருக்கும். பலூனின் வாய்ப்பகுதியைப் போன்று கர்ப் பப்பையின் வாய்ப்பகுதி இரு க்கும். 
 
அதில் ஆறாத ரணம் ஏற்பட்டால், பின்னாளில் கர்ப்ப ப்பையின் முழுவது மோ அல்லது பக்கத்திலுள்ள சிறுநீர் பை யையோ அல்லது உதிரம் வெளியேறுகின் ற ‘வெஜனா’ பகுதியையோ தாக்கக் கூடும். 
 
மாதவிடாய் காலம் தவிர மற்ற நேரத்தில் ரத்தம் கசிதல், துர்நாற்றத் துடன் கூடிய வெள்ளை, வெட்டைப் படுதல், சிறுநீர் கழிப் பதில் சிரமம், எரி ச்சல், வலி, தாம்பத்திய உறவின் போது வலி, உதிரம் படுதல், காரணமி ல்லாத சோர்வு, ரத்த சோகை இவைகள் தாம் ஆரம்பகால அறிகுறிகள். 
 
பாப்ஸ்மியர்’ என்ற எளிமை யான சோதனை மூலம் ஆர ம்பக் கட்டத்திலேயே கண்டு பிடித்து வைத்தியம் செய்தா ல், வியாதி யின் தீவிரத்தை கட்டுப் படுத்தலாம். உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரப்படி ஒரு வருடத்தில் இரண்டு மில்லியன் பெண் களை மரணமடையச் செய் யும் கொடிய நோய், கருப்பைவாய் புற்றுநோய் தான். 
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: