Monday, February 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ப‌கவத் கீதை – இது போன்ற இழிவான தளர்ச்சிக்கு இடம் கொடாதே. இது உனக்கேற்றதல்ல

ஸஞ்ஜயன்: பரிவும், கவலையும் நிறைந்து கண்ணீர் ததும்ப அமர்ந் துவிட்ட அர்ஜுனனைப் பார்த்து மதுஸ தனரான ஸ்ரீ கிருஷ்ணர், பின் வருமாறு கூறினார். முழுமுதற் கடவுள் (பகவான்) கூறினார்: என தருமை அர்ஜுனனே! உன் னிடம் இதுபோன்ற களங்கங்கள் எங்கிரு ந்து வந்தன? வாழ்வின் முன்னேற்ற நோக் கங்களை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை. இவை மேலுலகங்களு க்கு ஒருவனைக் கொண்டு செல்வதில் லை. அவமானத்தையே கொடுக்கின்றன. ப்ருதாவின் புத்திரனே, இது போன்ற இழி வான தளர்ச்சிக்கு இடம் கொடாதே. இது உனக்கேற்றதல்ல. இதுபோல் சிறுமையா ன இதயபலவீனத்தை விட்டு விட்டு, எதி ரிகளை தவிக்கச் செய்பவனே, எழுவாயாக.

அர்ஜுனன்: மதுவை அழித்தவரே (கிருஷ்ணரே), எனது வந்தனைக் குரிய பீஷ்மர், துரோணர் முதலியோ ர்களை போரில் எதிர்த்து எவ்வாறு அம்புகளுடன் தாக்குவேன்? எனது ஆசிரியர்களான பெருமக்களின் வாழ் வை அழித்து நான் வாழ்வதை விட பிச்சையெடுப்பது மேல். அவர்கள் பேராசை கொண்டவர்களாயினும் பெரியோர்களே. அவர்கள் கொல்லப் பட்டால் நாம் குருதிக்கறை படிந்த இன்பங்களை அனுபவிப்வராவோ ம்.எது சிறந்ததென்றும் நாம் அறி யோம். அவர்களை நாம் வெல்வ‌தலா அல்லது அவர்கள் நம்மை வெல்வதா. யாரைக் கொன்றால் நாம் வாழ விரும்பமாட்டோமோ அந்த திருதராஷ்டிரர் மக்களே நம் முன்பு போர் செய்யத் தயராக நிற்கின்றனரே.

இப்போது நான் என் கடமையைப் பற்றிக்குழப்பமடைந்து, பலவீனத்தா ல் என் இயல்புகளையெல்லாம் இழந்த வனாயிருக்கிறேன். இந் நிலை யில் எனக்கு நல்லது எது என்று தெளிவாக்கும்படி உம் மைக் கேட்டுக் கொள்கிறேன். உம்மிடம் புகலிடம் கொண்ட சீடன் யான். அருள் கூர்ந்து என க்கு அறிவுரை கூறுவீராக. என் புலன்களை வறட்டுகின்ற இந்த த் துன்பத்தைப் போக்கடிக்க ஒரு வழியையும் என்னால் காண முடியவில்லை. மேலுலகத்துத் தேவர்களைப்போல இவ்வுலகை எதி ரொருவரின்றி ஆளும் அரசைப் பெறினும் இதை என்னால் அழிக்க முடி யாது.

ச‌ஞ்ஜயன்: எதிரிகளைத் தவிக்கச் செய்பவ னான அர்ஜுனன் இவ்வாறு கூறி, ~~ கோவி ந்தா! நான் போரிடேன். என்று கூறிப்பேச் சற்று அமர்ந்தான். பரதகுலத்தோன்றலே, அவ்வமயம், இருதரப்புச் சேனைகளுக் கிடையே, துயரத்தால் பீடிக்கப்பட்டமர்ந் திருந்த அர்ஜுனனனைப் பார்த்து, புன் சிரி ப்புடன் பின்வருமாறு கூறினார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். முழு முதற் கடவுள் கூறினார்: அறிவாளியைப் போலப் பேசும் அதே சமய த்தில் கவ லைப்பட வேண்டாதவற்றிற்காக நீ கவலைப்படுகிறாய். அறிஞர் வாழ்ப வர்க்காகவோ, மாண்டவர்க்காகவோ வருந் துவதில்லை. நானோ, நீயோ , இம்மன்னர் களோ இல்லாமலிருந்த ஒரு காலமென்றுமிருக்கவில்லை . எதிர்கால த்திலும் நம்மிலெவரும் இல்லாமலிருக்கவும் போவதில்லை. உடல் பெற்ற ஆத்மா, சிறுவயதிலிருந்து இள மைக்கும், இளமையி லிருந்து முதுமைக் கும் மாறுவதுபோலவே மரணத்தின் போ து வேறு உடலுக்கு மாறுகின்றது. தன் னை உணர்ந்த ஆத்மா, இதுபோன்ற மாற் றத்தால் திகை ப்பதில்லை.

குந்தி மகனே! இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும், காலப் போக்கி லான அவற்றின் மறைவும், கோடையும் குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவது போலவே, புலன்களின் உணர் வாலேயே அவை எழுகின்றனவாதலால், பரத குலத்தோன்றலே, இவைகளால் பாதிக்கப்படாமல் பொறுத்துக்கொள்ளக் கற்றுக் கொள்வாயாக. மனிதரி ல் சிறந்தோனோ (அர்ஜுனா), இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதவ னும் இருநிலையிலும் தந்நிலை மாறாதவனுமே விடுதலைக்கு நிச்சயமாய்த் தகுதி பெற்றவனா யிருக்கிறேன். உண்மை அறிந்த வர்கள், நிலையற்ற வற்றிற்கு நீடிப்பும், நிலைத்தவைக்கு முடிவு மில்லையென்று முடிவு செய்துள் ளனர். இவை இரண்டின் இயற்கை களையும் ஆய்ந்தே இதை இவ் வாறு தீர்மானித்துள்ளனர். உடல் முழுவதும் பரவியிருப்பது அழி வற்ற தென்று அறிவாய்@ அழிவற்றதான ஆத்மாவைக் கொல்லக் கூடி யவர் எவருமில்லை. ஜட உடல் மட்டுமே அழிவுறுவது. உடலில் வாழு ம் ஜீவாத்மாவோ நித்தியமானது, அளவிட இயலாதது, அழிவற்றது. என வே பரதகுலத் தோன்றலே, போரிடுவாய்! ஜீவாத்மா கொலை புரிகின்ற தென்றோ, கொல்லுகின்றதென்றோ கருதுபவன் புரிந்து கொள்ளாதவனே. அறிவு ள்ளோர் ஆத்மா அழிவதோ, அழிப்பதோ இல் லை என்பதை அறிகின்றார்கள்.

ஆத்மாவுக்கு பிறப்போ இறப்போ கிடையாது. ஒருமுறை இருந்து பிற கு அவன் இல்லாமல் போவதுமில்லை. அவன் பிறப்பற்ற, நித்திய மான, என்றும் நிலைத்திருக்கும், மரணமற்ற, மிகப்பழையவனா வான். உடல் அழிக்கப்படுவதால் அவன் அழிக்கப்படு வதில்லை. பார்த்தனே! ஆத்மா அழிவற்றது, பிறப்பற்றது, மாற்றமில் லாததென்றறிந்த ஒருவன் யாரையாகிலும் கொல்வதோ, கொலை செய் யப்படக் காரணமாவ தோ எப்படி?

பழையவற்றைக் களைந்து புதிய ஆடைக ளை ஒருவன் அணிவது போ ன்றே, பழைய, உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உட ல்களை ஆத்மா ஏற்கின்றது. ஆத்மா எந்த ஆயுதத்தாலும் துண்டிக்கப் பட முடியாதது ம், நெருப்பால் எரிக்கப்பட முடியாததும், நீரால் நனைக்கப்பட முடியாததும், காற்றா ல் உலர்த்தப்பட முடியாததுமாகும். தனி ஆத்மா பிளக்க முடியாதது. கரைக்க முடி யாதது. எரிக்கவோ, உலர்க்கவோ முடியாதது. என்றுமிருப்பது, எங்கும் நிறைந்தது, அசையாதது, என்றும் மாறாமலி ருப்பது.ஆத்மா கண்ணுக் கெட்டாததும், சிந்தனைக்கப்பாற்பட்டதும், மாற்ற முடியாததுமாகும். இதை நன்கறிந்த, உடலுக்காக வருந்தாமலி ருப்பாயாக.

மேலும், ஆத்மா எப்போதுமே பிறந்து, இறந்து கொண்டிருப்பதாக வே நீ எண்ணினாலும், பலம்பொருந்திய புயங்களைஉடையோனோ! அதில் கவலைப்படுதற்கு என்ன உள்ளது? பிற ந்தவன் எவனுக்கும் மரணமும், மரணப்பட்ட வனுக்குப் பிறப்பும் நிச்சயமே. தவிர்க்க முடி யாத உன் கடமைகளைச் செயலாற்றுவதில் இதற்காகக் கவலைப்படாதே. படைக்கப்பட் டவை எல்லாமே முதலில் தோன்றாதிரு ந்து, இடைநிலயில் தோன்றி, இறுதியில் மீண்டும் மறைகி;ன்றன. எனவே, கவலைப்பட என்ன இருக்கிறது?

சிலர் ஆத்மாவை அதிசயமானது போலப் பார்க்கின்றனர், சிலர் ஆத்மா வை அதிசயமானதாக வர்ணிக்கின்றனர், சிலர் அதிசயமாகக் கேட்பவ ராகவும், மற்றும் சிலர் கேட்ட பின்னும் ஆத்மாவைச் சற்று ம் அறியாத வராகவும் இருக்கின்றனர்.

பாரத! உடலில் உறைபவன் நித்தியனாத லால் என்றும் அழிக்கப்பட முடி யாதவனா க இருக்கிறான். எனவே பிறப்புடைய எந்த ஆத்மாவுக்காக வும் நீ வருந்தவேண்டாம்.

ஒரு சத்திரியன் என்ற முறையில் உனது முக்கிய கடமையைப் பற்  றிக் கருதுவா யேயாயினும், நீதிக்காகப் போர் புரிவதைக் காட்டிலும் வேறு சிறந்த கடமைகள் உனக்கில்லை. எனவே தயங்கத் தேவை யில்லை. பார்த்தனே! வலியவரும் போர் வாய்ப்புகள் சுவர்க்கலோகத்தின் கதவுகளைத் திறந்து விடுவதால், அவற்றைப் பெறும் அரச குலத்தோர் மகிழ்கின்றனர்.  ஆனால், இந்த அறப்போரினின்று பின் வாங்கினாலோ கட மையினின்றும் தவறியதாலான தீய விளைவுகளை நிச்சயமாய்ப் பெறுவதோ டு, போர்வீரனெனும் பெயரையும் இழப்பா ய். மக்கள் உன்னை என்றும் அவதூறு செய்வர். மதிக்கப்பட்ட ஒருவனுக்கு அவ மானம் மரணத்தைவிட மோசமானதே.

உன் பெயரையும், புகழையும் பற்றிப் பெரு மதிப்புக் கொண்டுள்ள பெரும் போர்த் தலைவர்கள், பயத்தால் நீ களம் விட்ட தாக எண்ணி, உன் னைக் கோழையாய்க் கருதுவர். உனது எதிரிகள் அன்பிலாதவ ற்றைக் கூறி உன்னைத் தூற்றுவர். இதைக் காட்டிலும் உனக்குத் துன்பம் தரு வது வேறு என்ன இருக்க முடியும்?

குந்திமகனே! போரில் மாய்ந்து நீ மேலுலகை அடையலாம் அல்லது வெற்றிபெற்று இவ்வுலகை அரசாளலா ம். எனவே எழுந்து, உறுதியுடன் போர் புரிவாயாக.  இன்ப, துன்ப, லாப நஷ்டம், வெற்றி, தோல்வி இவைகளைக் கருதாது போருக்காகப் போர் புரிவாயாக. இவ்வா று செயலாற்றினால், என்றும் நீ தீய விளைவுகளை அடைய மாட்டாய்.

ஸாங்க்ய தத்துவத்தின் ஆய்வறிவை உனக்கு இதுகாறும் விளக்கினே ன். பலன் விளைவுகளுக்காயன்றி ஒருவன் செயல் படும் யோகத்தைப் பற்றிய அறிவை இப் போது கேள். ப்ருதாவின் மகனே, இவ்வா றான அறிவோடு செயல்பட்டால், செயல் களின் விளைவெனும் விலங்கினின்றும் நீ விடுதலை பெறுவாய். இம் முயற்சியில் குறைவோ இழப்போ இல்லை. இவ்வழியில் சிறிது முன் னேற்றமும், மிகப்பயங்கரமான பயத்திலிருந்து ஒருவனைக்காக்கும்.
 
இவ்வழியிலுள்ளோர் உறுதியான நோக்கமுடை யோர். அவர்களது இல ட்சியம் ஒன்றே. குருக்களின் செல்வனே, உறுதியற்றவரது அறிவோ பல கிளைக ளை உடையதாக ஆகின்றது. சிற்றறிவுடைய மாந்த ர் வேதங்களின் மலர்ச்சொற்களால் கவரப்படுகிறார் கள். இவ்வா க்கியங்கள் உயர் கிரகங்களுக்கு ஏற்றம் பெறுதல், நற்பிறவி அடைதல், அதிகார மடைதல் முதலான பலன் கருதிச் செய்யும் செயல்களைச் சிபாரிசு செய்கின்றன. புலன் நுகர்ச்சியையும், செல் வமிகு வாழ்வையும் விரும் புபவர் இதைவழட உயர்ந்ததேதுமில்லை என்று கூறுகின்றனர்.

புலன்நுகர்வு, செல்வம் இவைக ளை மிகவும் விரும்புவதால் மயங்கி யவர்களின் மனங்களில், பரமப்பிரபுவின் பக்தித் தொண்டி ற்கான நிலையான உறுதி உண் டாவதில்லை.  வேதங்கள் பொது வாக மூன்று பௌதிக இயற் கைக் குணங்களைப் பற்றியவை . அர்ஜுனா! இவை மூன்றிற் கும் மேற்பட்டவனாவாயாக. எல்லா இரட்டைகளி லிருந்தும், அடை தல் காத்தல் இவைகளுக்கான கவலைகளிலிருந்தும் விடுபட்டுத் தன் னில் நிலை பெற்றிருப்பாயாக. ஒரு சிறு கிணற்றால் ப+ர்த்தி செய்யப் படும் தேவைகளெல்லாமே, ஒரு பெரு ம் நீர்த்தேக்கத்தால் உடன் பூர்த்தி செ ய்யப்படும். அதுபோலவே, வேதங்களி ன் நோக்கங்களெல்லாம் அவைகளுக் குப் பின் உள்ள நோக்கங்களை அறிந் தவனால் அடையப் பெறும். உனக்கு விதிக்கப்பட்ட கடமையைச்செய்ய மட்டுமே உனக்குப் ப+ரண உரிமை உண்டு@ செயல்களின் பலன்களில் உனக்கு அதிகாரமில்லை. உனது செயல்களின் விளைவுகளுக்கு உன்னையே காரணமாகவும் எண் ணாதே@ செயலற்ற நிலையி லும் விருப்பங் கொள்ளாதே. யோகத் தில் உறுதி கொள் அர்ஜுனா@ வெற்றி தோல்வி யி ன் பற்றைத் துறந்து கடமை யைச் செய். இதுபோன்ற மன ஒருமையே யோகமென்றழை க்க ப்படுகின்றது.

பக்தித் தொண்டால், பலன் நோ க்குக் கருமங்களிலிருந்தெல் லா ம் விடு பட்டு, பக்தி உணர்வுக்குப் ப+ரண சரணடையக் கடவையாக. தமது செயல்களின் பலனை அனுபவிக்க விரும்புபவர் கஞ்சர்களே யாவர்கள். பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவன், இந்த வாழ்விலே யே, நல்ல, தீய செயல்களின் விளை வுகளிலிருந்தும் தப்புகின்றான். எனவே எல்லாச் செயல்களின் செயற்கலையான யோகத்திற் காய்ப்பாடுபடுவாயாக, அர்ஜு னா .

சான்றோர், பக்தித் தொண்டில் ஈடுபட்டு, இறைவனிடம் அடை க்கலம் புகுந்து இகவுலகில் செயல்களின் பலன்களைத் துற ப்பதால் ஜனன மரணச் சுழலிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்கின் றனர். இவ்விதமாக அவர்கள் துன்பங்களுக் கப்பாற்பட்ட நிலையை அடைய முடியும். மய க்கமெனும் இவ்வடர்ந்த காட்டை உன் அறிவு தாண்டிவிட்டால், இது வரை கேட்ட வை, இனிக் கேட்க வேண்டியவை இவற்றிற்கு, சம நிலையுடையவ னாகி விடுவாய் நீ.

வேதங்களின் மலர் மொழிகளால் மேலும் மனங்கவரப்படாத நிலை யை உன்னறிவு அடையும் போது தான், தன்னுணர்வு ஆழ்வில் நீ திளைத்திரு க்கும்போது தான், நீ தெய்வீக உணர்வை அடைந்து விட் டவனாக இரு ப்பாய்.

அர்ஜுனன்: உன்னதத்தில் இவ்வாறே நிலை பெற்ற உணர்வுடையோனின் அறிகுறிகள்யா வை? அவனது மொழி எது? எவ்வாறு பேசுவா ன்? எப்படி இருப்பான்? எப்படி நடப்பான்?

 பகவான்: பார்த்தனே! மனக் கற்பனையில் எழும் புலன் பற்றுக்களி ன் பலவிதங்களைத் துறந்து, எப்பொழுது ஒருவனது மனம் தன்னி ல் திருப்தி அடைகின்றதோ அப்போது அவன் உன்னத உணர்வில் நிலைபெறுகிறான். மூவ கைத் துயரங்களுக்கு மத்தியிலும் பாதிக்க ப்படாதவனும், இன்பத்தில் மிக்க மகிழாதவ னும், பற்று, பயம், கோ பம் இவற்றினின்று விடுபட்டவனுமே மனம் நில பெற்ற முனிவன் என்றழைக்கப்படுகி றான். நன்மை பெறுவதால் மிகக் களிப்பும், தீயவற்றால் கவலையும் கொள்ளாது, பற்றற்று இருப்பவனே ப+ரண அறிவில் நிலைபெறுகிறா ன். புலன்களை அவற்றின் நோக்கப் பொருள்களிலிருந்து ம் ஆமை தன் உறுப்புக்களைக் கூட்டிற்குள் இழுத்துக் கொள்வதைப் போல், விலக்கிக் கொள்பவனே உண்மையாக அறிவில் நிலைபெற்றவனென்றறியப்படு கிறான்.

புலன் நுகர்வினின்றும் உடலை உடைய ஆத்மா கட்டுப்படுத்தப்பட்டாலும் கூட பு லன் நுகர்வுப் பொருட்களுக்கான சுவை இருக்கலாம். ஆனால், உயர்ந்த சுவை யொன்றை அனுபவிப்பதால், அத்தகு ஈடு பாடு முழுவதுமாய் முற்றுப்பெற, அவன் உணர்வில் நிலைபெறுகின்றான். பகுத்தறிவு நிறைந்து புலன்களைக் கட்டுப்படுத்த முயலும் ஒருவனது மன தைக் கூட, சக்திவாய்ந்த புலன் கள் இழுத்துச் சென்றுவிடுகின்றன.  புலன்களை அடக்கி, உணர்வை என் னில் நிறுத்துபவனே நிலைபெற்ற அறி வுடையோனாகிறான். புலன் நோக்கப் பொருட்களை எண்ணுவதா ல் ஒருவன் பற்றை வளர்த்துக் கொள்கிறான். இந்த ப் பற்றினின்றும் காமமும், காமத்தி லிருந்து சினமும் வளர்கின்றன.

சினத்திலிருந்து மயக்கமும், மயக்கத் தால் நினைவு நில இழப்பும் ஏற்படுகி றது. நினைவு குழம்புவதால் அறிவு இழ க்கப்பட்டதும் ஒருவன் மீண்டும் ஜடச் சுழலில் இழிந்து வீழ்கிறான். விடுதலையின் நியமங்களைப் பின்பற்று வதன் மூலம் புலனடக்கம் செய்யக் கூடிய வன் கடவுளின் கருணைக் குப் பாத்திரமாகி விருப்பு, வெறுப்புக்களிலிருந்து விடுபடுகிறான். தெய் வீக உணர்வில் நிலை பெற்றுவிட்ட ஒருவனுக்கு, ஜட உலகின் மூவ கைத் துன்பங்களால் பாதிப்பு ஏற்ப டுவதில்லை. அத்தகு ஆன ந்த நிலையிலே, ஒருவனது அறிவு மிக விரைவாக நிலைபெறுகிறது. உன்னதமான உணர்வு பெறாதவனுக்கு கட்டுப்பாடான மன தோ, நிலை யான அறிவோ கிடையாது. இவை யின்றேல் அமைதிக்கு வழியில்லை. அமைதியி ன்றேல் ஆனந்தம் எவ்வாறு உண்டாகும்? கடுங் காற்றால், படகு நீரில் அடித்துச்செல்லப்படுவது போலவே, மனம் ஈர்க்கப்படும் ஒரே ஒரு புலன் கூட, மனிதனின் அறிவை அழுத்துச் சென்று விடும்.

எனவே, பலம்பொருந்திய புய வலிமை யுடையோனே! நுகர்ச்சிப்பொருட்களினி ன்றும் முற்றுமாய் விலக்கிக் கட்டுப்படுத் தப்பட்ட புலன்களை உடையோன் நிலை த்த அறிவுடையவனாகிறான். தற்கட்டுப் பாடுள்ளவ னுக்கு எல்லா உயிர்களுக்கும் இரவாக இருப்பதே எழும் நேரமாம். அவ ர்கட்கு எழும் நேரமோ அவனுடைய (ஆய்ந் தறியும் முனிவனுடைய) இரவாக உள்ளது.

ஆசைகளின் தொடர்ந்த பெருக்கால் பாதிக்கப்படாதவன் மட்டுமே, தொ டர்ந்து நதிகளின் பெருக்கால் புகப்பட்டாலும், அமைதியாய் என்றுமிருக் கும் கடல் போல அமைதியை அடைய முடியும். இத்தகு ஆசைகளைப் ப+ர்த்தி செய்ய முயற்சி செய்பவனல்ல.

 புலன் நுகர்விற்கான ஆசைகள் எல்லா வற்றையும் துறந்துவிட்டவ னும், விருப் பங்களற்றவனும், எல்லா உரிமையுணர் வுகளையும் துறந் திருப்பவனும், பொய் த்தன்னுணர்வற்றவனுமான ஒருவனே உண்மை அமைதியை அடைய முடியும். எந்நிலையை அடைந்தால் மனிதன் மீண்டும் குழப்பமே அடையமாட்டானோ, அதுவே தெய்வீக ஆன்மீக வழியாகும். இவ்வாறு நிலைபெற்றவன், வாழ்வின் கடைசி நேரத்திலா யினும் கூட, இறைவனின் அரசினைச் சேர்கின்றான். ஸ்ரீ கிருஷ்ணனுக் கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் ‘ஸாங்க்ய யோகம்’ எனப் பெயர் படைத்தது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: