Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆரோக்கிய குறிப்பு – பெடிக்யூர் சிகிச்சைகள் கால்களை அழகாக்குமே தவிர உடலை ரிலாக்ஸ் செய்யாது.

நாள் முழுக்க உழைத்துக்களைத்த உடம்பு… படுக்கையில் சாய்ந்ததும், யாரேனும் கால்களைப் பிடித்து வி ட்டால் எவ்வளவு இதமாக, சுகமாக இருக்கும்? கால்களை பிடித்து விடு கிற போது அத்தனை களைப்பும் காணாமல் போய் உடலும், மனமும் அமைதியாகி விடுமல்லவா?

காரணம் கால்கள் அத்தனை பவர் ஃபுல்!

ஆனால் நமது உடலிலேயே அதிகளவு புறக்கணிக்கப்படுகிற பகுதி கால் கள் தான். உடலின் ஒட்டு மொத்த எடையையும் தாங்கக்கூடிய கால்க ளை நாம் கவனிப்பதே இல்லை. கால் களில் வலி ஏற்படும்போதோ, வீங்கி னாலோ மட்டும் தான் கால்களின் மீது கவனம் செலுத்துகிறோம்.

பெடிக்யூர் சிகிச்சைகள் கால்களை அழ காக்குமே தவிர உடலை ரிலாக்ஸ் செய்யாது. எனவே கால்களை மஜாஜ் செய்து ஒட்டு மொத்த உடலுக்கும் புத்துணர்ச்சி தர செய்கிற ரெஃப்ளெக் சாலஜி சிகிச்சை இப்போது நம்மூரில் பிரபலமாகி வருகிறது. அதைப் பற்றி வளக்கமாக பேசுகிறார் ஹபிபுன்னிசா. இவர் இதற்காகவே பிரத் யோக மையம் நடத்தி வருகி றார்.

தாய்லாந்து மலேசியா நாடுகள்ல ரெஃப் ளெக்சாலஜி ங்கிற மஜாஜ் ரெம் பவும் பிர பலம். நம்மூரில் அழகுக்காக பியூட்டி பார் லர் போற மாதிரி அங்கெல்லாம் ரிலாக்ஸ் பண்ணிக்க ரெஃப்ளெக்சாலஜி சென்டர்க ளுக்கு போறாங்க. மனித உடம்புல கால்க ள் ரொம்ப முக்கியமான உறுப்பு. அது தான் 2 ஆயிரக்கணக்கான நரம்பு முனைகள் சந்திக்கிற இடம். பாதத்துல முக்கியமான சில அழுத்தப்புள்ளிகள் இருக்கு. அது ஒவ் வொண்ணும் இதயம், நுரையீரல், சிறுநீரக ம், கர்ப்பப்பை, கணையம், மூளைனு முக் கிய உறுப்புகளோட சம்பந்தப்பட்டது. அந்த அழுத்தப்புள்ளிகளை தெரி ஞ்சிக்கிட்டு அந்த இடத்துல மஜாஜ் செய்யறப்ப, சம்பந்தப்பட்ட உறுப்பு ல ரத்த ஒட்டம் சீராகும்.

முதல் கட்டமா களைப்பா இருந்த உடம்பு உடனடியாக உற்சாமாகும். தூக்கமின்மை, தைராயிடு, சைன ஸ், தலைவலி, கை, கால், மூட்டு வலி, டென்ஷன், மன உளைச்சல் னு தலைலேர்ந்து, கால் வரைக் கும் அத்த னை பிரச்சனைகளு க்கும் இதுல தீர்வு இருக்கு என்கிற ஹபிபுன்னிசா, இந்த ரெஃப்ளெக் சாலஜி சிகிச்சையை, அதன் நுணுக்கங்கள் தெரிந்த நிபுணரிடம் மட்டு மே செய்து கொள்ள வேண்டும் என்கிறார்.

முதலில் கால்கள் அழுக்கின்றி சுத்தப் படுத்தப்பட்ட பிறகே மஜாஜ் ஆரம்பமா கிறது. மஜாஜின் போது இலகுவாக இருக்க லெமன்கிராஸ் ஆயில் உபயோ கப்படுத்தப்படுகிறது. பாடி மஜாஜ் செய் ய கூச்சப்படுகிறவர்கள், அதே பலனை இந்த ரெஃப்ளெக்சாலஜியில் பெறலாம். தவிர இதன் மூலம் உடலில் உள்ள தே வையற்ற நச்சு நீர் வெளியேற்றப்படுகிறது. அடிக்கடி கை, கால்களில் சுளுக்கு நரம்பு சுருட்டிக்கொள்ளுதல், போன்றவற் றால் பாதிக்கப்படு வோருக்கு இது நிவாரணம் தருகிறது. ரத்தஓட்டம் மேம்ப டுத்துதல், முகத்தில் பொலிவு கூடுவது கண்கூடு. முதுமைத் தோ ற்றம் தள்ளிப் போகிறது. கர்ப்பிணிகளையும் இதய நோயாளிகளையும் தவிர்த்து 18 வயது மேற்பட்ட யாரும் இதை செய்யலாம்.

டிப்ஸ்

திடீர் மூக்கடைப்பா? கால் நகங்கள் ஒவ்வொன்றையும் நான்கு பக்கங்க ளிலும் 15 முறைகள் அழுத்திக் கொடுக்க வும். சில நிமிடங்களில் மூக்கடைப்பு சரி யாவதை உணரலாம்.

சாயும் வசதியுள்ள நாற்காலியில் உட்கார் ந்து கொள்ளவும். கால்களை நீட்டிக்கொ ண்டு இடமிருந்து வலமாகவும், வலமிருந் து இடமாகவும் சுழற்றவும். பிறகு முன் னோக்கியும், பின்னோக்கியும், பாதங்களை தள்ளவும். இப்படி செய்தால் நீண்ட நேரம் நின்றதால் உண்டான கால் வலி அசதி நீங்கும்.

தூக்கமில்லாமல் அவதிபடுகிறவர்கள் குதி காலுக்கு சற்றுமேலே அழுத் திவிட்டுக் கொ ள்ளலாம். அவ்வாறு செய்து கொண்டிருக்கு ம் போதே தூக்கம் கண்களை தழுவத் தொட ங்கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: