Tuesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குறைந்த செலவில் அழகாக நம் வீட்டை மாற்றி அமைக்க . . உள் அலங்கார நிபுணர் சாந்தி கூறும் ஆலோசனைகள்

வீடு பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கட்டும். ஆனால் இருக்கும் இடத்தை அழகாக வைத்துக் கொண்டால் நான்கு க்கு நான்கு அளவுகொண்ட வீடுகூட மாளிகையே என்கி றார் இன்டீரியர் டெகரேட் டர் சாந்தி.

பொதுவாக வீட்டுக்கு உள் அல ங்காரம் செய்யும் போது அதற் கு லட்சக் கணக்கில் செலவு செய்ய வேண்டும் என்று பலர் திகைக்கிறார்கள். அப்படியெல்லாம் எது வுமில்லை. குறைந்த செலவில் அழகாக நம் வீட்டை மாற்றி அமைக்க முடியும். அந்த காலத்தில் வீட்டி ல் துணிகளை வைக்க அலமாரி இருக்கும். அதில் துணிகளை அடுக்கி வைப்பது வெளிப்படை யாக தெரியும். அதன் பீன் பீரோ வந்தது. இப்போது கப்போர்ட். இதற்கு அறையின் சுவற்றில் தனியாக ஓரிடத்தை ஒதுக்கி விடுவதால் இடம் தாராளமாக கிடைக்கும்.

வார்ட்ரோப் தனியாக செய்ய வேண்டும் என்றில்லை. வீடு கட்டும்போ து அலமாரி வைக்க கடப்பா கல் கொண்டு பதிப்பார்கள். அதற்கு சட்டம் மற்றும்கதவு கொடுத்து அதை வார்ட்ரோபாக மாற்றலாம். சமையல் அறையை பொறுத் த வரை எல்லோரும் மாடுலர் கிச்சன் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதா வது அடுப்பங்கறைக்கு தே வையான ஷெல்ப் எல்லாவற் றையும் செய்து பிக்ஸ் செய்ய நினைக்கிறார்கள். இதற்கு அதி கம் செலவாகும். இதற்கு பதில் மேடை அமைத்து அதில் தேவையான மாடல் கிச்சன் செட்டுகளை அமைத்துக்கொள்ளலாம்.

மரங்களில், பிளைவுட், ஹார்ட் வுட், எம்.டி.எப். போர்ட் என மூன்று வகைகள் உள்ளன. இதில் ஹார்ட் வுட் கிடைப்பதில்லை. விலையும் அதிகம். பிளைவுட் மரத்துண்டுக ளை ஒன்றில் மேல் ஒன்றாக அடு க்கி அதை கட்டையாக அமைத்தி ருப்பார்கள். கடைசியாக எம்.டி.எப். போ ர்ட் பார்க்க மரம் போலவே இருக்கும். இதில் நாம் விரும்பும் டிசைன்களை செய்து கொள்ளலா ம்.

வீட்டை பொறுத்தவரை வரவேற்பறை பார்க்க அழகாக இருக்க வேண் டும். இங்கு இயற்கை நிறங்க ளான பிரவுன், மஞ்சள், ஐவரி, வெளிர் ஆரஞ்சு, போன்ற நிறங் கள் அடிக்கலாம்.

இது பார்க்க பிரகாசமாகவும் எல்லாரும் விரும்பக்கூடியதாக இருக்கும். அதே போல் படுக்கை யறை என்பது நம் தனிப்பட்ட அறை என்பதால் விரும்பிய நிறங்களை அடிக்கலாம். சிலரு க்கு பிங்க், லாவண்டர், பிடிக்கும். அதை இங்கு அடிக்கலாம். வரவேற் பறையில் நாற்காலிகள் மரத்தால் செய்திருந்தால் அங்குள்ள திரைச் சீலைகளிலும் மரச்சட்டம் வை க்கலாம். இப்போது மரத்தால் செய்யப் பட்ட பொருட்களை விட கணணாடியால் செய்த பொ ருட்களை வரவேற் பறையில் வைக்கிறார்கள். இது இருக்கும் இடத்தை பெரிதாக எடுத்துக் காட்டும்.

தரைக்கு பெரிய வெர்டிபைட் டைல்ஸ் போடுவது இப்போது வழக்கமாக உள்ளது. மார்பில் மற்றம் கிரானைட் கற்களை விட இவை பல டிசைன்களில் வருவதால் பெரும்பாலான மக்கள் இதை விரும்புகி றார்கள். விலையும் குறைவு. வெளிர் நிறங்கள் பார்க்க அழகா கவும் அதே சமயம் அறைகளை பெரிதாகவும் எடுத்துக்காட்டும். வாஸ்துவை ஓரளவுக்கு கடை ப்பிடிப்பதில் தவறில்லை. வர வேற்பறையில் எப்போதும் டிவி வாசல் பக்கம் இருப்பது நல்லது காரணம் டிவி வாசலுக்கு எதிர் திசை யில் இருக்கும் போது யார் வருகிறார்கள் என்று பார்க்க முடியாது.

அதனால் வீட்டை பாதுகாக்க டிவி யை இவ்வாறு வைப்பது நல்லது. கடைசியாக வீட்டை சுத்தமாக வைத்திருப்பது ஒரு கலை. மாதம் ஒரு முறை வீட்டை ஓட்டடை அடிக்க வேண்டும். வாரம ஒரு முறை வீட் டில் உள்ள டிவி அல மாரிகளை தூசி தட்ட வேண்டும். ஒரு நாள் விட்டு ஒருநாள் வீட்டை மாப் போட்டு துடைக்கலாம். இதை தவறாமல் கடை ப்பிடித்தால் நம் வீடும் மாளிகை போல் மின்னும் என்கிறார் சாந்தி.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: