
அன்னதானம் செய்யாததால் தான் இப் பொழுது வயிற்று பசி அடங்க வில்லை யா? அப்படியானால் இதற்கு என்ன தான் வழி என கேட்டா ன். அதற்கு தலைவன் உனது வலது கை ஆள்காட்டி விரலை வாயில் வைத்துகொள் பசி அடங்கிவிடு ம் என்றான். கர்ணனுக்கு ஒன்றும் புரிய வில்லை.
விரலை சப்பினால் பசி அடங்குமா? என்ன இது என சந்தேகத்துடன் வலது கை ஆள்காட்டி விரலை வாயில் வைத் து சப்பினான். இதனால் அவனது பசி உடனே அடங்கியது. ஒன்றும் புரியாத கர்ணன் இது எப் படி மாயமந்திரம் என கேட்க தலைவன் கூறி னான்.
கர்ணா நீ பூவுலகில் வாழும்போது உன்னிடம் ஒரு வறியவன் பசி யுடன் வந்து எங்கு அன்ன தான சத்திரம் இருக்கிறதென்று கேட்க நீயும் உனது வலது கை ஆள்காட்டி விரலால் இதோ இப்பக்கம் செல்க என வழிகாட்டினாய். அந்த புண்ணிய செயல் நற்செயல் உனக்கு இப்பொ ழுது உதவுகிறது என கூறினான்.
இதன் மூலம் கர்ணன், அன்னதான மகி மையை உணர்ந்தான்.
முதியோர் இல்லங்களில் வாழ்பவர்க ள், அனாதை இல்லங்களில் வாழ்பவர்க ள், ஏழைகள். இவர்களுக்கெல்லாம் அன்னதானம் செய்தால் அவர்கள் பெறு ம் மகிழ்ச்சியானது நமக்கு மகிழ்ச்சியி னையும் புண்ணியத்தையும் தரும். எனவே அளவற்ற புண்ணியம் தரும் அன்னதானம் செய்யுங்கள்.