Sunday, January 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாக கன்னியால் பிரம்மச்சரியத்தை கைவிட்டு, அவளுக்கு இன்ப(காம)த்தை கொடுத்த‍ அர்ச்சுனன்!

“குருகுலத்தின் புகழைப் பரப்பும் பெரும் பலம் வாய்ந்த கரம் கொண்ட அர்ஜுனன் (கானகத்திற்கு) கிளம்பியபோது, வேதங்கள் அறிந்த பிராமணர்கள் அச்சிறப்பு மிகுந்த வீரனுக்குப் பின்னால் ஒரு குறிப்பி ட்ட தூரம் வரை நடந்து சென்றனர்.

பரமாத்மாவுக்குத் தங்களை அர்ப்பணித்து வேதங்களையும் அதன் கிளைகளையும் நன்கறிந்த பிராமணர்களும், இசை நிபுணத்து வம் கொண்டவர்களும், கடவுளுக்குத் தங்க ளை அர்ப்பணித்த துறவிகளும், புராணங்க ளை உரைப்போரும், புனிதமான கதைகளை பக்தர்களுக்கு உரைத்து பிரம்மச்சரியம் பூண் டவர்களும், வானப்பிரஸ்தர்களும் {காட்டில் துறவு எண்ண த்துடன் வாழும் தம்பதியரும்}, தெய்வீக வரலாறுகளை இனிமையாக உரை க்கும் பிராமணர்களும், மேலும் பல்வேறு வகையில் இனிமையா கப் பேசும் மனிதர்களும் இந்திரனைத் தொடரு ம் மருதர்களைப் போல, அர்ஜுனனுடன் பயணித்தனர். ஓ பாரத குலத் தவனே {ஜனமேஜயா}, அந்த பாரதர்களில் காளையானவன், தனது பயணத்தில் பல மகிழ்ச்சிகரமான, காணுதற்கினிய காட்சிகள் கொண்ட கானகங்களையும், ஏரிகளையும், நதிகளையும், கடல்களையும், மாநில ங்களையும், நீரையும் கண்டான், ஒரே நீளத்தில் கங்கை உற்பத்தியாகும் இடத்தி ற்கே சென்ற அந்த வீரன் அங்கேயே வசி க்க நினைத்தான்.

ஓ ஜனமேஜயா அந்தப் பாண்டு மகன்களில் முதன்மையான அந்த உயர் ஆன்மா கொண்ட வன் அங்கு வாழும்போது ஏற்பட்ட அற்புத நிக ழ்ச்சியை இப்போது கேள். ஓ பாரதா {ஜன மே ஜயா}, குந்தியின் மகனைத் தொடர்ந்து சென்ற பிராமணர்களும் தங்கள் வசிப்பிடத் தை அந்த ப் பகுதியிலேயே ஏற்படுத்திக் கொ ண்டு எண் ணற்ற அக்னி ஹோத்திரங்களை ச் (நெருப்பை மூட்டி புனித சடங்குகளைச்) செய் தனர். ஓ மன்னா {ஜன மேஜயா}, சரியான பா தையில் இருந்து நழுவாத, நோன்பு நோற்கும் கற்ற பிரா மணர்கள் தினமும் அந்த புனித நீரோ டையின் அருகில் மந்திரங் களைச் சொல்லி, நெருப்பை மூட்டி, அந்த நெருப்பில் தெளிந்த நெய் யை அவிர்ப்பாகமாக ஊற்றி மலர்களால் வழிபட்டு வந்ததால், அந்த இடமே மிகுந்த அழகாகக் காட்சி அளித்தது. ஒரு நாள், அந்தப் பகுதியில் பிரா மணர்களுக்கு மத்தியில் தங்கியிருந்த பாண்டவர்களில் காளையா னவன் {அர்ஜுனன்}, தனது சுத்திகரிப்பு சடங்குகளைச் செய்ய கங்கைக் குள் இறங்கினான். சுத்திகரிப்பு சடங்குக ள் முடிந்ததும், தனது முன் னோர்களை நினைத்து நீரால் அர்ச்சனை செய்தான். அதையும் செய்து முடித்து நெருப்பின் முன் வேள்வி செய்ய நீரில் இருந்து எழுந்த போது, அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரன் {அர்ஜு னன்}, காம தேவனால் உந்த ப்பட்ட நாக மன்னனின் மகளான உலூபியால் {Ulupi} நீருக்கு அடியில் இழுத்துச் செல்லப்பட்டா ன். பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, நாக மன்னன் கௌரவ்யாவின் {Kauravya} அழ கிய மாளிகைக்கு தூக்கிச் செல்லப்பட்டா ன். அவனுக்காகவே அங்கே வேள்வி நெரு ப்பு எரிவதை அர்ஜு னன் கண்டான். அந்த நெருப்பைக் கண்ட குந்தியின் மகனான அர்ஜுனன் வேள்விச்சடங்குகளை அர்ப்ப ணிப்புடன் செய்தான். அச்சமற்ற அர்ஜு னன், உருவற்ற நெருப்பில் தெளிந்த நெய் யை விடுவதைக் கண்ட அக்னி அவன் {அர் ஜுனன்} மீது மிகுந்த திருப்தி கொண்டான். இப்படி தனது சடங்குகளை நெருப்பின் முன் செய்த குந்தியின் மகன் {அர்ஜு னன்}, நாக மன்னன் மகளைக {உ லூபியை}கண்டு அவளிடம் சிரித்துக் கொண்டே, “ஓ அழகானவளே, உனது துடுக்குத் தனத்தால் என்ன காரிய த்தைச் செய்தாய்? ஓ மருண்ட வளே! இந்த அழகான பகுதி யாருக்குச் சொந்தமானது? நீ யார்? யாரு டைய மகள்?” என்று கேட்டான்.

அர்ஜுனனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட உலூபி, “ஐராவதனின் {Airavata} குலத்தில் பிறந்த கௌரவ்யன் என்றொரு நாகன் இருக்கி றான். ஓ இளவரசரே, நான் அந்தக் கௌரவ்யனின் மகள். எனது பெயர் உலூபி. ஓ மனிதர்களில் புலியே, சுத்திகரிப்பு காரியங்களுக்காக நீரோ டையில் இறங்கிய உம்மை நான் கண்டு, காம தேவனால் மதியிழந் தேன். ஓ பாவமற்றவரே, நான் திருமணமாகாதவள். நான் உமது நிமித் தமாக காம தேவனால் துன்புறுகிறேன். ஓ குரு குலத்தில் வந்தவரே, உம்மைக் கொடுத்து இன்று என்னைத் திருப்திப்படு த்தும்”, என்றாள் {நாகக் கன்னி உலூபி}.

அர்ஜுனன், “மன்னன் யுதிஷ்டிரனின் கட்டளையா ல், ஓ இனிமையான வளே {உலூபியே}, நான் பனி ரெண்டு வருட பிரம்மச்சரிய விரதம் நோற்றிருக் கிறேன். நான் நினைத்தவாறு செயல்பட எனக்கு அதிகாரம் இல்லை. ஆனால், நீர் அதிகாரியே, நான் (என்னால் முடிந்தால்) உனக்கு இன்பம் கொடுக்க விரும்புகிறேன். நான் எனது வாழ்வில் பொய்மை பேசியதில்லை. ஆகையால், ஓ நாக கன்னிகையே, நான் உனக்கு இன் பம் அளிக்கும் அதே வேளையில், பொய்மையிலிருந்தும், கடமையை தவ றும் குற்றத்தில் இருந்தும் நான் எப்படித் தப்பிப்பேன் என்பதையும் சொ ல்”, என்றான் {அர்ஜுனன்}.

அதற்கு உலூபி “ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனனே}, நீர் ஏன் இந்த உலகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறீர்? நீர் ஏன் உமக்கு மூத்தவரால் பிர ம்மச்சரிய வாழ்வு வாழ கட்டளையிடப்பட்டிருக்கிறீர்? என்பதை நான் அறிவேன். உங்கள் அனைவரின் பொது மனைவியான துருபதன் மகளு டன் {திரௌபதியுடன்} உங்களில் யாராவது தனிமையில் அமர்ந்திருந் தால், அதைக் காணும் உங்களில் மற்றவர் பனிரெண்டு வருடங்களுக்கு பிரம்மச்சாரியாக கானகத்தில் வாழ்வது என்பது நீங்கள் அனைவரும் ஏற்றுக் கொ ண்ட உறுதியில் ஏற்பட்ட புரிந்துணர்வு {ஒப் பந்தம்} ஆகும். ஆகையால் உங்களில் யா ராவது நாடு கடத்தப்பட்டால் அது திரௌப தியின் நிமித்தமாகவே இருக்க வேண்டும். அந்த உறுதியில் இருந்தே நீர் இந்தக் கட மையைச் செய்கிறீர். (எனது வேண்டுகோ ளை நீர் ஏற்றுக் கொ ள்வதால்) உமது அறம் எந்தத் தாழ்வையும் அடைந்துவிடாது. மே லும், ஓ அகன்ற கண் கொண்டவரே {அர் ஜுனரே}, துயரத்தில் இருப்பவரை மீட்பது உமது கடமையாகும். என் னை விடுவிப்பதால் உமது அறம் தாழ்ந்துவிடாது. ஓ அர்ஜுனரே உமது அறத்திற்குச் சிறு தாழ்வு ஏற்பட் டாலும், எனது உயிரைக் காப்பாற்றிய தால் உமக்குப் பெரும் புண்ணியம் கிடைக்கும். உம்மை வழிபடுபவளா க என்னை அறிந்து கொள்ளும். ஆகையால், ஓ பார்த்தரே {அர்ஜுனரே}! உம்மை எனக்குக் கொடும்! ஓ தலைவா, இதுவும் (கெஞ்சி அன்பை வே ண்டும் பெண்ணை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதும்) ஞானமுள் ளோர் கருத்துதான். இந்த வழியில் நீர் செயல்படவில்லை என்றால், நான்  என்னை அழித்துக் கொள்வேன், என்பதை அறி ந்து கொள்ளும். பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொ ண்ட வரே {அர்ஜுனரே}, எனது உயிரைக் காப்பாற்றி, பெரும் புண்ணியத்தைப் பெற்றுக் கொள்ளும். ஓ மனிதர்களில் சிறந்தவரே {அர்ஜுனரே}, நான் உமது பாதுகாப்பை வேண்டுகிறேன். ஓ குந்தியின் மகனே {அர்ஜுனனே}, நீர் துயரத்தில் இருப்பவரையும், தலைவர் இல்லாதவர்களையும் எப் போதும் காப்ப வர். அழுது கொண்டிருக்கும் நான் உமது பாதுகாப் பை வேண்டுகிறேன். ஆசை நிரம்பிய நான் உம்மைக் கெஞ்சிக் கேட்கி றேன். ஆகையால் எனக்கு ஏற்புடைய செயலைச் செய்யும். உம்மை எனக்குக் கொடுத்து எனது விருப்பத்தை திருப்திப்படுத்துவதே உமக்குத் தகும்” என்றாள் {நாகக் கன்னி உலூபி}.

“நாக மன்னனின் மகளால் {உலூபியால்} இப்படிச் சொல்லப்பட்ட குந்தி யின் மகன் {அர்ஜுனன்}, அறத்தைத் தனது குறிக்கோளாகக் கொண்டு அவள் விரும்பிய அனைத்தையும் செய்தான். அந்தப் பெரும்பலசாலி யான அர்ஜுனன் இரவு முழுவதும் நாக மாளிகையில் கழித்து, சூரியனு டன் தானும் எழுந்தான். கௌரவ்யனின் அரண்மனையிலிருந்துதான் கங்கையில் இறங்கிய அதே இடத்திற்கு, உலூபியுடன் வந்தான். கற்பு கொண்ட உலூபி அவனிடம் விடைபெற் றுக் கொண்டு தனது வசிப்பிட த்திற்குத் திரும்பினாள். ஓ பாரதா {ஜன மேஜயா}, அவள் அர்ஜுனனை யாரும் நீரில் வெல்ல முடியாத படி “நீரிலும் நிலத்திலும் வாழும் எந்த உயிரினத்தையும் உம்மால் வெற்றி கொள்ள இயலும்” என்று வரம் கொடுத்தாள் {உலூபி}.

thanks to mahabharatham.arasan.info

One Comment

Leave a Reply