மீசை என்பது ஆணுக்கு அழகு மட்டுமல்ல அடையாளமும் கூட. அழகும், அடையாள மும் ஒருபுறம் இருக்க, மீசையானது ஆண் மையை பறை சாற்றும். அதனால்தான் மீசை முளைத்த ஆண்பிள்ளை என்கின்ற னர். மீசை முளைக்காத ஆண்களுக்கு ஆண்மை குறைவாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தான் உரிய வயதில் ஆண்களுக்கு மீசை முளைக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளன ர்.
ஹார்மோன் சுரப்பு
ஆண்களுக்கு 13 முதல் 17 வயதுக்குள் மூளையில் உள்ள ஹைபோதா லமஸ் எனப்படும் பகுதி ‘பிட்யூட்டரி’ எனப்படும் நாளமில்லா சுரப்பியை தூண்டும். அதிலிரு ந்து சுரக்கப்படும் ஹார்மோன்கள் விந்துப் பையில் உள்ள அணுக்களை தூண்டி, ‘டெஸ்டோஸ்டீரான்’ ஹார்மோ னை சுரக்கத்தூண்டும். இந்த ஹார்மோன் இயக் கம் கிட்டத்தட்ட பெண் களுக்கு ஏற்படுவது போலத்தான். பெண்களுக்கு பருவவயதில் பெண் மைக்குரிய ஹார்மோன்களான ‘ஈஸ்ட்ரோஜன்’ ‘புரோஜெஸ்ட்ரான்’ அதிக மாக சுரக்கும்.
இளமை பொலிவு கூடும்
ஆண்களுக்கு மீசை முளைக்க அடிப்படை காரணமாக இருப்பது இந்த டெஸ்ட்டோஸ்டீரான் எனப்படும் ஹார்மோன்தான். இந்த ஹார்மோ னின் முதல் வேலை அக்குள், மர்ம உறுப்புகளில் முடிவளர வைப்பதா கும். அதன் பிறகு மீசை மற்றும் உடல் பகுதிக ளில் ஆங்காங்கே முடியை வளரவைக்கும். இந்த ஹார் மோன்தான் ஆண்மைக்குரிய மிடுக் கை கொடுக்கும். தசை கள் இருக்கமாகி, இளமைப் பொலிவு கூடும். குரலும் மாறி விடும். இனப்பெருக்க உறுப்பு பெரிதாவதுடன், அவ்வப்போது உணர்ச்சி வசப்பட்டு வீரியம் கொள்ளும்.
ஆண்மை குறைபாடு
டெஸ்ட்டோஸ்டீரான் பருவ வயதில் சுரக் கும்போது மீசை வளரும், சுரக்காவிட்டால் வளராது. டெஸ்டோஸ்டீரான் அளவு குறைந்தால் மீசை வளர்வது தடைபடுவது ஒருபுறம் இருக்க, சிலருக்கு உடல்பரும ன் கூடிவிடும். ஆண்மைக்குரிய மிடுக்கு, சுறு சுறுப்பு இல்லாமல் சோம் பேறியாக இருப் பார்கள். பாலியல் குணாதிசயங்கள் குறை வாக இருக்கும். பெண்களுக்கு மார்பகங்கள் வளர்வதைப்போல ஆண்க ளுக்கு மார்பகங்கள் பெரிதாகிவிடும். இந்த நோய்க்குறிகள் ஒருவரு க்கொருவர் மாறுபடும்.
பொதுவாக பிறவிக்கோளாறுகள், பொன்னுக்கு வீங்கி, கடுமையான நோய்கள், புகைப்பிடித்தல், குடிப்பழக் கம், போன்ற பழக்கங்களினால் டெ ஸ்டோஸ்டீரான் சுரப்பது பாதிக்கப் படலாம். சிறு கட்டிகள் மூளையில் இருந்தாலும் பாதிப்பு நேரிடும். தை ராய்டு கோளறுகளால் கூட பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சரியான சிகிச்சை தேவை
சரியான சிகிச்சை அளித்தால் இந்த குறைபாட்டினை போக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ள னர். ஒருவரின் மனநிலை, உடல் தன் மைகள், நோய்குறிகளை ஆராய்ந்து மருந்து அளித்தால் முழுமையான நிவாரணம் கிடைக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
எனக்கு 23 வயது ஆகிறது இன்னும் மீசை வரவில்லை ரொம்ப கஷ்டம்மா இருக்கு இதுக்கு நல்ல வழி கூறுங்கள்
தாடியும் மீசையும் ஆண்களுக்கு விரைவாக வளர சில வழிகள் CLICK THIS LINK https://www.vidhai2virutcham.com/2013/08/05/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/