Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிலருக்கு தாம்பத்திய உறவில் ஈடுபாடு குறைவதற்கான காரணங்களும் அவ‌ற்றிற்கான தீர்வுகளும்!

சிரிப்பு மனிதர்களுக்கு அற்புதமான மருந்தாக செயல்புரிகி றது. ஒருவர் வாய் விட்டு சிரித்தால் அவருக்கு மன அழுத் தம் ஏற்பட வாய்ப்பில்லை. சிரிப்பு மூலம் உடல் உறுப்புகளி ன் வழக்கமான செயல்பாடுகளுக்கான பல்வேறு என்ஸைம் களும், ஹார்மோன்களும் சிரிப்பின் மூலம் உற்பத்தியாகி றது.

சிரிக்கும் பொழுது மூளையில் அதிகமாக எண்டோர்ஃபின் ஹார்மோன் சுரக்கிறது. இது சுறுசுறுப்பை அதிகரிக்கச் செ ய்யும். சிரிக்கும்பொழுது வலியைக் குறைக்கும் ஹார்மோ ன் உற்பத்தியாகிறது. இதயத் துடிப்பை சாதாரண நிலைக்கு கொண்டுவர சிரிப்பு உதவுகிறது. இவ்வளவு நன்மைகள் இருக்கையில் சிரிப்புமூலம் செக்ஸ் வாழ்க்கை உற்சாகம டையும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படுக்கை அறையில் உற்சாகமுடன் செயல்பட கிளர்ச்சி அவசியம். செக்ஸ் பற்றி ய எண்ணங்கள், அதைப்பற்றிய உணர்வுகள் இரு ந்தால் மட்டுமே உற்சாகமாக செயல்பட முடியும். வேலைப்பளு, மனஅழுத்தம், உற்சாகமின்மை போன்ற கார ணங்களினால் தாம்பத்திய உறவில் சிலருக்கு ஈடுபாடு குறையும். சிலருக்கு சோர்வி னாலும் உறவில் ஈடுபட முடியாது. இந்த சிக்கல் களுக்கு சிரிப்பு மருந்தாக திகழ்கிறது என்று ஆய் வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாய்விட்டு சிரிங்க

தம்பதியர் இருவரும் சோர்வாக உணர்ந்தால் நகைச்சுவையாக பேசுங்கள். எதை ப்பற்றியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். நகைச்சுவை யோடு கொஞ்சம் கிளர்ச்சியூட்டும் பேச்சாகவும் இருக்கலாம். சத்தம் போட்டு சிரிங்க (பக்கத்து வீட்டுக்கு கேட்டுட்டா?) அப் பொழுது சுரக்கும் ஹார்மோன் உங்களின் உற்சாகத்தை அதி கரிக்கும்

இறுக்கத்தை தவிருங்கள்

படுக்கை அறைக்குள் நுழைந்த உடனே அவசரம் அவசரமாக செயல்பட வேண்டும் என்று அவசியமி ல்லை. இதனால் உறவானது தொடங்கிய வேகத் தில் முடி ந்துவிடும். எனவே முதலில் மெதுவாய் முன்விளையாட்டுக்களில் தொடங்குவது இறுக்கத் தைப் போக்கும் என்கின்றனர் நிபுணர்கள். மென்மை யான ஸ்பரிசம், மனதிற்கு இதமான பாடல் என உற வை தொடங்குவது உற்சாகத்தை அதிகரிக்குமாம்.

கூடுதல் நெருக்கம்

சில தம்பதியர் தங்களின் துணையை ஏதோ கடமைக்காக கையாளுவார்கள். ஏதோ இன் றைக்கு வேலை முடிந்தது என்பதோடு உறவும் இருக்கும். அது சில நாட்களில் ஒருவித வெறு ப்பைத்தான் ஏற்படுத்தும். எனவே நெருக்கத் தை அதிகரியுங்கள். உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் வரை சின்னச் சின்னதாய் முத்த த்தினால் கிளர்ச்சியூட்டுங்கள். இதனால் உங்க ள் இருவருக்கும் இடையேயான நேசமும், நெரு க்கமும் அதிகரிக்கும்.

மனம் விட்டுப் பேசுங்க

கணவன் மனைவியின் அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர். புரிந்துகொள்ள வேண்டும். இருவரில் ஒருவருக்கு ஏதாவது சிக்கல் என்றாலும் மனம் விட்டு பேசி அதை தீர்க்க முயலுங்கள். அதை விடுத்து மனதிற்கு ள்ளேயே வைத்து பூட்டிக்கொள்வதுதான் மனஅழுத்தத்தை அதிகரிக்கும், உறவிலும் விரிசலை ஏற்படுத்திவிடும். எனவே படுக் கையறை சிக்கலை மனம்விட்டு பேசுவதன்மூலம் தீர்த்துக்கொண்டு உற்சாகமா ன உறவில் ஈடுபடமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply