Tuesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணினி முன், அதிகநேரம் பணியாற்றுபவர்களுக்கான‌ அபாய எச்ச‍ரிக்கை!

இன்றைய பறக்கும் யுகத்தில் கணினி பக்கத்தில் அமர்ந்தபடி தான் எல்லா வேலைகளும் செய்து முடிக்கப்படுகி ன்றன. தொழில் நுட்ப வளர்ச்சிக்கு இது உற்சாகத்தை அளிக்க க்கூடியது என்றாலும் உடல் நலத்துக்கு கேடு என்கிறது மருத்துவ ஆய்வு.

கணினி முன் அமர்ந்து பணி செய்வபர்க ளில் ஆண்கள் தான் அதிகம் என்று ஆய்வு கள் தெரிவிக்கின்றன. நீங்களும் அந்த வரி சையில் உள்ளவர்கள் என்றால் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். கணினி முன் அதிகநேரம் அமருபவர்களுக்கு முதல் பாதிப்பு ஏற்படும் பகுதி கண் தான். ஆகையால் அதில் இருந்து தப்பித்துக் கொளள சில வழிகள்….

முதலில் அதிக நேரம் கணினியைப் பார்ப்பவர்கள் கண்கள் மேல் கவ னம் செலுத்த வேண்டும். மிக பக்கத்தில் இரு ந்து கணினி திரைவில் வெளிச்சத்தை பார்ப் பதால் கண்கள் பாதிப்படைய நிறைய வாய்ப் பிருக்கிறது. இதனால் 15 நிமிடத்திற்கு ஒரு முறை கண்களுக்கு ஓய்வுகொடுப்பது நல்ல து.

அலுவலகத்தில் வேலை செங்கிறவர்களு க்கு இது சாத்தியப்படாது. ஆனால் இதற்கும் வழி இருக்கிறது. உள்ளங்கையை கண்கள் மேல் வை த்து ஒரு இரண்டு நிமிடம் ஓய்வு கொடுக்கலாம். இது ஓரளவு கண்களை பாதிப்பில் இருந்து காப்பாற்றும்.

தொடர்ந்து கணினி முன்பு வேலை செய் யும் நபர்கள் இடை இடையே கைகளை யும், உடலையும் நீட்டி மடக்கி சிறிய உடற்பயிற்சி செய்து கொள்வது மிக நல் லது.கணினியின் முன் அமர்ந்து டைப் செய்கையில் உடலை நேர்கோட்டில் வைத்திருப்பது மிக அவசியமான ஒன்று.

இதனால் முதுகுத்தண்டு நேராக இருக்கும் இதுபோல் செய்தால் உடல் வலி அதிகம் வருவதை தவிர்க்கலாம். பாதங்களை தரை மீது சமமாக வைத் திருப்பது இன்னும் சிறந்ததது. உடலி ன் அனைத்து பலமும் பாதத் தின் மேல் இருப்பதால் பாதத்தை சமநிலை யில் வைத்துக் கொள்ள வேண்டும்.

டைப் செய்யும் போது முழங்கைகளை இடையில் பக்கத்தில் வைத்திரு ப்பதால் கைகளுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். இதனால் சரியான முறையில் அமர்ந்து டைப் செய்ய முடி யும். அதோடு தோள்பட்டை வலியை யும் எளிதாக குறைக்கலாம்.

கணினி திரையில் வெளிச்சத்தை கு றைத்து வைத்துக் கொள்வது மிக அவ சியமான ஒன்றாகும். இதனால் கண்க ளை எளிதாக பாதுகாக்கலாம். இந்த 6 செயல்களையும் செய்து கணினி பாதிப் பில் இருந்து கண்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள். தவற விட்டால் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் செய்வது போன்ற நிலை தான் ஏற்படும்

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: